ஆபிரகாம்
Long Beach, California, USA
61-0211
1கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. மாலை வணக்கம், நண்பர்களே. பரலோகத்திலுள்ள நித்திய தேவனின் நித்திய வார்த்தையாகிய வார்த்தையின் பேரில் பேசும்படிக்கு இன்றிரவு மீண்டும் சபையில் திரும்பி வந்திருப்பது ஒரு சிலாக்கியமாயிருக்கிறது. சற்று களைப்பாயிருக்கிறது, இந்தக் காலையில், கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் காலை உணவு ஐக்கியத்தில் இரண்டு ஆராதனைகள் எங்களுக்கு இருந்தது - அவைகளை நாங்கள் கொண்டிருந்தோம். கர்த்தர் எங்களுக்கு ஒரு மகத்தான ஆசீர்வாதத்தை அருளினார்.
நான் ஒருபோதும் அதை மறந்தே போகாத ஏதோவொன்று என்னுடைய ஜீவியத்தில் சம்பவித்தது. எனவே நான் கர்த்தருக்காக செய்ய முயற்சித்துக் கொண்டிருந்ததை உறுதிப்படுத்தினதிற்காக நான் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், அது கர்த்தருடைய சித்தமாக இருந்தது என்பதை கர்த்தர் சரி என நிரூபித்துக் காட்டினார். நீங்கள் - அவ்விதமாக ஏதோவொன்று சம்பவிக்கும் போது, நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்களை மிகவும் நன்றாக உணரும்படி செய்கிறது.
இப்பொழுது, நான் உங்களை மிகவும் தாமதமாக வைத்துக்கொண்டே வருகிறேன்; நான் அதற்காக வருந்துகிறேன். மேலும் - மேலும் நான் அப்படியே வேகமாக கடந்து செல்கிறேன் - இந்தக் காலையில், நான் மிகவும் நன்றாக செய்து கொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டு, “11 மணி ஆவதற்கு 25 நிமிடங்கள் உள்ளது என்று கூறிக்கொண்டேன். அந்தக் கடிகாரமோ ஒரு மணி நேரமாக நின்று போய்விட்டதாக சகோதரன் டீன் அவர்கள் கூறினார்கள். எனவே அது அந்தவிதமாகத்தான் போகிறது என்று நினைக்கிறேன், நாம் மிக வேகமாக நேரத்தைக் கடந்து சென்று விடுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். சொல்லுவதற்கு நிறைய உள்ளது, அதைக் கூறவோ அவ்வளவு கொஞ்ச நேரம் தான் இருக்கிறது.
2நாளை காலை, 11 அல்லது 11:30 மணி என்று நினைக்கிறேன், அப்போது சபையானது கலைந்து செல்லும் போது, கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஒரு சிறு செய்திக்காக மீண்டும் இங்கே சபைக்கு வர வேண்டியிருக்கும். அது மேய்ப்பர் மற்றும் யாவரும் தங்கள் காலைக்கான செயல்பாடுகளையும், ஞாயிறு பள்ளியையும் முடித்த பிறகு இருக்கும்.
பிறகு நாளை இரவு - நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். அதாவது அதைச் செய்யும்படியாக போதுமான பேர் வெளியே வருவார்களாயின், அதைச் செய்யப் போகிறோம். பாருங்கள்? நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போவதாக இருந்தால், ஜெப வரிசையை நடத்த போதுமான பேர்களை நாம் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அன்றொரு நாள் இங்கே அந்தப் பையன், தான் ஜெப அட்டைகளை விநியோகித்துக் கொண்டிருந்த போது, அவனுக்கு ஏறக்குறைய இருபது பேர் கிடைத்த பிறகு, அது முடிந்துவிட்டதாகவும், அதற்கு மேல் அங்கே (வியாதியஸ்தர்கள்) இல்லாதிருந்தார்கள் என்றும் கூறினான். கூடுதலாக எந்த (ஜெப அட்டைகளையும் விநியோகிக்க முடியாதிருந்தது. அங்கே அவ்வளவு அதிகமானோர் இல்லாதிருந்தார்கள். ஏறக்குறைய அந்தவிதமாகத் தான், நமக்கு சபைக் கூட்டங்கள் இருக்கும்போது, நாம் அதை ஒரு சிறு சபையில் நடத்துகிறோம் (hit) என்பது உங்களுக்குத் தெரியும். பாருங்கள், மகத்தான பெரிய கூட்டத்தினரிடத்தில் நீங்கள் வரும்போது....
அதன்பிறகு, ஜெபிக்கப்பட விரும்புகிற அன்பார்ந்தவர்கள் யாராவது உங்களுக்கு இருந்தால்.... இப்பொழுது, தேவனுக்குச் சித்தமானால், நாளை இரவில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டுமென்று நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். சபையின் எந்த செயல்பாடுகளும் துவங்குவதற்கு முன்பாகவே, ஆறு மணிக்கே இங்கு வந்து, ஒரு ஜெப அட்டையை உங்களுக்கென்று வாங்கி, நாளை இரவு ஜெபத்திற்காக ஆயத்தப்படுங்கள். சரியாக எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை , ஆனால் ஒருக்கால் வரிசையில் நெடுகிலும் அவர்களுக்காக ஜெபிக்கவோ, அல்லது கர்த்தர் எவ்வாறு வழிநடத்தினாலும், அதை முயற்சிப்போம். பிறகு நாங்கள் - கர்த்தர் அருளி, அவருக்குச் சித்தமாக இருக்குமானால், தொடர்ந்து வரும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு மறுபடியுமாக, வியாதியஸ்தருக்காக வேறொரு ஜெபம் இருக்கும்.
3அதன்பிறகு புதன்கிழமை - புதன்கிழமை பிற்பகலில், நான் பழைய பிஸ்கா இல்லத்தில் (Old Pisgah Home) பேசும்படி இருக்கிறேன். சகோதரன் ஸ்மித் அவர்கள், அதுதான் என்று நினைக்கிறேன், ஸ்மித், அதுதான் அவருடைய பெயர் என்று நம்புகிறேன், அவர் மிகவும் அருமையான ஒரு சகோதரன். நான் அவரோடு கூட வெளிநாடுகளில் மிஷனரி ஊழியங்களைச் செய்திருக்கிறேன், அவர் ஒரு அற்புதமான மனிதர். அங்கே அவர்களுக்கு ஏதோவொருவித ஒன்றுகூடல் (rally) இருக்கிறது என்று நினைக்கிறேன், எனவே அடுத்த புதன்கிழமை பிற்பகலில் அங்கே பேசும்படியாக இருப்பேன், அதன்பிறகு புதன்கிழமை சாயங்கால ஆராதனைகளுக்காக இங்கே திரும்பி வருவேன்.
அதன்பிறகு தொடர்ந்து வரும் திங்கட்கிழமை, அதற்கு இடைப்பட்ட ஒரு நாளில், நாம் தொடர்ந்து, மேலே பாக்கர்ஸ்பீல்டுக்கு, அல்லது ஒரு நல்ல நேரம் இருக்கும் பாக்கர்ஸ்பீல்டுக்கு அருகிலுள்ள இடத்திற்கு போவதற்கு முன்பு, சான் பெர்னார்டினோவிலுள்ள சகோதரன் எஸ்பினோசாவிடம் நம்மால் போக முடியுமா என்று பார்க்க முயற்சிக்கிறோம். சகோதரன் ஜீன் அவர்களே, அது என்ன பெயர்? விசாலியா. அங்கே அவர்களுக்கு ஒரு அரங்கம் இருக்கிறது என்றும் அதை அவர்கள் ஃபிரஸ்நோ மற்றும் பேக்கர் இவற்றுக்கு இடையே அமைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன், எனவே அவர்கள் மக்கள் கூட்டத்தையும் பெற்றிருக்க முடியும், ஏனென்றால் அங்கே உள்ளே, இரண்டு பட்டணங்களிலுமிருந்து ஜனங்கள் வர விரும்புகிறார்கள், அவர்கள் அதை அங்கே (அவைகளுக்கு) இடையே விசாலியாவில் அமைத்திருக்கிறார்கள். எனவே ஜெபம் பண்ணிக் கொண்டிருங்கள்.
4அதன்பிறகு அங்கிருந்து நேராக ஓஹியோவுக்குப் போகிறோம், அந்த பனி பிரதேசத்திற்கு திரும்புவோம். நாங்கள் அசெம்பிளிஸ்களோடும், சுயாதீன (சபைகளோடும், ஒத்துழைப்பு கொடுத்தவாறு, ஓஹியோவிலுள்ள அந்த அரங்கத்தில் ஒரே குழுவாக இருப்போம். அதன்பிறகு ஜீன், அந்த இடத்தின் பெயர் என்ன? ஓஹியோவா? ஓஹியோவிலுள்ள மிடில்டவுன், அது ஒரு கூடைப்பந்து மையமாக இருக்கிறது. பிறகு நாங்கள் அங்கிருந்து கீழே போகிறோம், அது விர்ஜீனியாவிலுள்ள மோன்றோ, அல்லது அங்கே கீழேயுள்ள ஏதோவொரு இடம் என்று நம்புகிறேன், அங்கே இன்றிரவில் ஏறக்குறைய 17 அங்குலங்கள் பனி இருக்கிறது. அதன்பிறகு தொடர்ந்து வரும் வாரத்தில், நாங்கள் அங்கிருந்து திரும்பி வந்து, இல்லினாயிலுள்ள புளூம்பிங்டனுக்குப் போகிறோம். பிறகு அங்கிருந்து கடைசி பத்து நாட்கள், எட்டு அல்லது பத்து நாட்கள், சிகாகோவில், லேன்டெக்கில் இருப்போம், அங்கே நாங்கள் அநேக தடவைகள் போயிருக்கிறோம். அது முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டிருக்கிறது.
நான் ஒருநாள் வீட்டில் இருந்துவிட்டு, பிறகு வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குப் போகிறேன், அங்கே மேலே பனி உண்மையாகவே ஆழமாக இருக்கிறது. எனவே நான் அப்போது அங்கே, மேலே கிராண்டே ப்ரேரியில் இருப்பேன், அடுத்தது டாசன் கிரீக் என்று நினைக்கிறேன், அதன்பிறகு ஃபோர்ட் செயின் ஜான் என்று எண்ணுகிறேன். பின்னால் காட்டுக்குள் 1500 மைல்கள் உள்ள அலாஸ்காவிலுள்ள ஆஞ்சரோஜிற்கு நீங்கள் போவதற்கு முன்பு, அதுதான் கடைசி நிறுத்தமாக இருக்கும். அதன்பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால், நான் திரும்பி வந்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போகிறேன். அதன்பிறகு ஏதோவொரு நேரத்தில், அடுத்த இலையுதிர் காலத்தில் இங்கே பிறந்த தேசத்திற்கு திரும்புவோம் என்று நம்புகிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், அக்டோபர் நவம்பரில் ஏதோவொரு நேரத்தில், இலையுதிர் காலத்திற்கு முன்கூட்டியே திரும்புவோம் என்று நம்புகிறோம். கர்த்தர் வரத் தாமதிப்பாரானால், அவர் (வராமல்), அந்நேரத்துக்கு முன்பாகவே என்னை எடுத்துக்கொள்வாரானால், நான் மறுகரையில் உங்களைச் சந்திப்பேன். அவர் வரத் தாமதித்து, நான் உங்களோடு இருந்தால், நாம் அவரைக் காண மேலே சென்று பாருங்கள்?), அவரைச் சந்திக்கும்படியாக, மேலே ஆகாயத்துக்குப் போவோம். இப்பொழுது, அது எந்த நேரமும் நிகழலாம்; நமக்குத் தெரியாது; நம்மால் அதைக் கூற இயலாது. ஆனால்....
5நாங்கள் மிஷனரிகளாக இருக்கிறோம். நான் இந்தக் காலையில் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன், இங்கேயுள்ள அமெரிக்காவின் நிலையைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவர்கள் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இது மற்ற எல்லா நாடுகளையும் போலத்தான் இருக்கிறது, மிஷனரிகளும் மற்ற காரியங்களும் அவ்வாறு தான் உள்ளன, இப்பொழுது மற்ற தேசங்களில், அங்குள்ள ஜனங்களிடத்தில், எழுப்புதல் இருக்கின்றன என்று நாம் விசுவாசிக்கிறோம். அங்கே சற்றேறக்குறைய... அங்கே ஏரியில் அநேக மீன்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும், கடைசி மீன் பிடிக்கப்படும் போது, அவ்வளவு தான். அவர் ஒரு கையில் ஆறு விரல்களைக் கொண்டிருக்க மாட்டார். புரிகிறதா? அந்த சரீரம் முழுமை பெறும் போது, அதைக் குறித்தது எல்லாம் அவ்வளவு தான். பாருங்கள்? நீங்கள் எவ்வளவு பிரசங்கம் பண்ணினாலும், அது ஒரு பொருட்டேயல்ல, அல்லது அவர் என்ன செய்தாலும், அங்கே அதற்கு மேல் யாரும் வர மாட்டார்கள்.
எனவே நம்முடைய சொந்த தேசத்திலும் ஏறக்குறைய அந்தவிதமாகத் தான் இருக்கிறது, நண்பர்களே. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மணி நேரம் மிகவும் பயங்கரமான ஒரு வேளையாக இருக்கிறது. நீங்கள் அதை உணர்ந்து கொள்வதில்லை. மற்ற ஏதாவது சுவிசேஷகரைக் கேட்டுப்பாருங்கள்; என்னுடைய வார்த்தைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். அல்லது தேசத்தின் ஒரு பக்கம் முதற்கொண்டு மறுபக்கம் வரை சோதித்துப் பாருங்கள், கிறிஸ்துவிடம் வருகிற பெரும் திரள்கூட்ட மக்களை நீங்கள் எங்கு காண்கிறீர்கள் என்று பாருங்கள். நல்லது, உங்களால் வெளியே இந்தியாவிலுள்ள, பாம்பேக்குப் போக முடியும், கர்த்தரைக் குறித்து நீங்கள் ஐந்து நிமிடங்கள் விசில் அடித்துப் (whistle) பாருங்கள், அல்லது நான்கு அல்லது ஐந்து வார்த்தைகள் பேசிப் பாருங்கள், அப்போது இரட்சிக்கப்படும்படியாக கதறுகிற 5,000 பேர் அங்கேயிருப்பார்கள். அது சரியே. அதன்பின் இங்கேயோ நாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக அநேக இடங்களுக்கு பிரயாணம் பண்ணி தொடர்ந்து சென்று, பலமாக இழுத்துப் பார்க்கிறோம், கடுமுயற்சி செய்து பார்க்கிறோம், தூண்டுதல் கொடுத்துப் பார்க்கிறோம், முழுபலமும் உபயோகித்துப் பார்க்கிறோம். அதுவோ (கிரியை செய்வதில்லை.... அமெரிக்க ஜனங்களால் ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் செய்ய முடியும். அது என்வென்றால், அங்கே ஒரு காரியத்திட்டத்திற்கு நிதி உதவி செய்வது தான் (sponsor). அவர்களுக்கு இங்கே பணம் இருக்கிறது. அவர்களுக்கு அங்கேயோ எதுவும் கிடையாது, அதற்காக கொடுக்கவும் முடியாது, ஆனால் அதைக் கேட்க அவர்கள் நிச்சயமாகவே இஷ்டமுள்ளவர்களாகவும், விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு சாய்மேடையின் மேல் நின்று பாருங்கள், வெளியே பத்தாயிரக்கணக்கானோர் கையை முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டிருப்பார்கள், நீங்கள் வேறொரு ஐந்து நிமிடங்கள் இயேசுவைக் குறித்துப் பிரசங்கம் பண்ணி, ஒருசில வார்த்தைகளை செய்வீர்களானால் (கூறுவீர்களானால்).
6நான் அதைக் கூறினேன், இன்றிரவு எனக்கு முன்னால் இங்கே ஒரு இந்திய பெண்மணி இருப்பதைக் காண்கிறேன். நீங்கள் - நீங்கள் இந்தியாவிலிருந்தா வருகிறீர்கள்? ஓ, தென் இந்தியா. நல்லது, அங்கே ஒரு மகத்தான சந்தர்ப்பம் இருக்கிறது, கர்த்தருக்குச் சித்தமானால், வருகிற இந்த அக்டோபர் மாதத்தில், நான் கீழே கல்கத்தாவைச் சுற்றிலும், மேலே பாம்பேயைச் சுற்றிலும், மேலும் அங்கே மேலேயும் இருக்கப் போகிறேன், ஒருக்கால் தாய்லாந்திலும் இருப்பேன். நாம் அவ்வாறு நம்புகிறோம். கர்த்தர் உண்மையிலேயே அந்தக் கூட்டங்களை ஆசீர்வதித்திருக்கிறார். நான் அங்கே இருந்த போது, அந்த பாம்பே கூட்டத்தில் நீங்கள் இருக்கும்படி நேரிட்டதா, நீங்கள் அங்கே இருந்தீர்களா? நீங்கள் அதைத் தவற விட்டு விட்டீர்கள். நீங்கள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று ஊகிக்கிறேன். [ஒரு மனிதர் புரிந்து கொள்வதற்குக் கடினமான ஏதோவொன்றைக் கூறுகிறார் - ஆசிரியர்.) நீங்கள் என்ன சொன்னீர்கள்? [அவர் அதை மறுபடியும் கூறுகிறார்.) அது சரிதானா? நல்லது, அது அற்புதமாக இருந்தது. அது அங்கே ஒரு மகத்தான கூட்டமாக இருந்தது. தேவன் நிச்சயமாகவே உங்களுடைய ஜனங்களை ஆசீர்வதித்தார்.
எனக்கு ஜீவனுள்ள வரையில், அந்த இரவில் பாம்பேயில் நடந்த கூட்டத்தை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன். அவர்கள் - அவர்கள் நான் மெதோடிஸ்டு சபையின் பிஷப் மற்றும் அநேக தலைவர்களால் சந்திக்கப்பட்ட போது, நான் எதனுடைய நிதி உதவியின் (sponsorship) கீழ் இருந்தேனோ , நான் அதன் கீழாக வர அவர்கள் விரும்பவில்லை . அவர்கள்... நான் அங்கு போகும்படியாக, இந்த ஏழை ஸ்திரீகள் மற்றும் மனிதர்களின் பணத்தை ஏற்றுக் கொண்டேன், எப்படியும் நான் அங்கே இருக்கையில், ஊழியம் செய்யப் போவதாக இருந்தேன் என்பதில் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். மேலாளர் பிராயணத் திட்டத்தைக் குறித்தோ , அல்லது நிதி ஆதரவைக் (sponsorship) குறித்தோ அதைக் குழப்பிவிட்டார். ஆனால், ஓ, என்னே, என்னுடைய ஜீவியத்திலேயே அவ்வளவு அநேகமான ஜனங்கள் ஒரு கூட்டத்திற்கு வருவதை நான் ஒருபோதும் கண்டதில்லை. பட்டணத்தின் மேயரும் வெளியே தான் இருந்தார்.
7அங்கே நின்று கொண்டிருந்த அந்தக் குருடான மனிதன் தன்னுடைய பார்வையைப் பெற்றபோது. நான் ஒவ்வொரு முகமதியர்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரிடமும், வந்து, இவனுக்கு இவன் பார்வையைக் கொடுப்பீர்களானால், நான் உங்களை விசுவாசிப்பேன்“ என்று சவால்விட்ட போது. பாருங்கள். ”தேவன்...“ இவன் சூரியனை ஆராதிக்கும் ஒருவனாக இருந்தான். இப்பொழுது இவனுடைய கண்கள் குருடாகி விட்டன (out). இவன் சிருஷ்டிகரைத் தொழுது கொள்ளுவதற்குப் பதிலாக சிருஷ்டியைத் தொழுதான். நான் சொன்னேன்... நான் சமண சமயத்தைச் சேர்ந்தவர்களின் கோவிலிலும், புத்தர்களிடமும், அங்கேயிருந்த அவர்கள் எல்லாரிடத்திலும் இருந்தேன், உங்களுக்குத் தெரியும், அவர்கள் - ஏழு அல்லது எட்டு வெவ்வேறு மார்க்கங்கள், அவர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக இருந்தார்கள், அதில் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை.
எனவே அந்த இரவில், அந்தப் பெரிய சவால் வந்தபோது, அவர்கள் எல்லாருமே அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், நான், “இப்பொழுது, இருபது வருடங்களாக குருடாயிருக்கிற ஒரு மனிதன் இதோ இருக்கிறான், நான் அவனுடைய மனதை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்” என்று கூறினேன். உங்களுக்குத் தெரியும், பரிசுத்த மனிதர்களும், அதைப் போன்றவர்களும், அதை நீங்கள் அறிவீர்கள், வழிபடுபவர்கள். நான் தொடர்ந்து, “இது மனதிலுள்ளவைகளை வாசிக்கும் கலை (telepathy). அவனுடைய மனதை வாசித்து தான், அவனுடைய பெயர் என்னவென்று அவனிடம் கூறிக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்” என்று சொன்னேன். அதை உச்சரிக்கக் கூட முடியாதிருந்தது, அதை எழுத்தெழுத்தாக எழுத்துக்கூட்டி உச்சரிக்க (spell out) வேண்டியிருந்தது. புரிகிறதா? எனவே நான், “அது சரியாக இருந்தது” என்றேன். அவன் இரண்டு பிள்ளைகளையும், அவனுடைய மனைவியையும் உடைய ஒரு மனிதனாக இருந்தான். ஒரு மகனுக்கு எட்டு வயதும், மற்றவனுக்கு பத்து அல்லது அவ்விதமான ஏதோவொன்றுமாக இருந்தது.
நான், “இப்பொழுது, இது ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம் (mental telepathy) என்று நினைத்தீர்கள். இப்பொழுது, இது மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றலாக (mental telepathy) இருக்குமானால், நீங்கள் இங்கே வாருங்கள். மனதிலுள்ளவைகளை வாசிக்கும் கலையைப் (telepathy) பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது அவ்வாறு இருக்குமானால், நீங்கள் அதில் ஒரு மேதையாக இருக்கிறீர்கள். மனோசாஸ்திரத்தைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இங்கு வந்து, இவனுக்கு இவன் பார்வையைக் கொடுப்பீர்களானால், நான் உங்களைப் பின்பற்றுவேன். முகம்மதிய மார்க்கம் மிகவும் மகத்தானதாக இருந்து, இந்த குரான் சரியாக இருக்குமானால், முகமதிய மதகுரு இங்கு வந்து, இவனுக்குப் பார்வையைக் கொடுக்கட்டும், அப்படியானால், நான் ஒரு முகம்மதியனாக இருப்பேன்” என்றேன். புரிகிறதா?
நான், “இப்பொழுது, நீங்கள் வந்து, இவனுக்குப் பார்வையைக் கொடுக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் சவால் விடுகிறேன்” என்றேன். அவன் தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொள்ளப் போகிறான் என்ற ஒரு தரிசனத்தை நான் கண்டிருக்காவிட்டால், நான் அதைக் கூறியிருக்கவே மாட்டேன். ஆனால் அது எங்கேயிருந்தது என்பதை நான் அறிந்திருந்தேன். அப்பொழுது நீங்கள் எப்பொழுதும் கேட்டதிலேயே மிகவும் அமைதியான கூட்டமாக இருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள்.... ஏன், நான் அங்கே மேலே போகும்படி ஒரு மோட்டார் வாகனத்தில், அதனூடாக நெருக்கியடித்துக் கொண்டு செல்ல எனக்கு இரண்டு மணி நேரங்கள் ஆனது.
8இவ்வாறாக அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருந்தான், நான், “இவனுக்குப் பார்வையைக் கொடுக்கும் தேவனையே இவன் சேவிப்பான் என்று அவர் சொன்னார். முகம்மதிய மார்க்கத்திற்கும், புத்த, சமண, சீக்கிய, அல்லது அது என்னவாக இருந்தாலும், அந்த மார்க்கங்களுக்கும் இது ஒரு மகத்தான பெரிய சவால், அதோ அது இருக்கிறது என்றேன். எனவே யாருமே... நான், ”நீங்கள் எதைக் குறித்து மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள்? அவர்கள் வராமல் இருப்பதற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா? அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதுதான் அதற்குக் காரணம். என்னாலும் அதைச் செய்ய முடியாது. ஆனால் நான் சாட்சியாக இருக்கிற தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பின பரலோகத்தின் தேவனால் அதைச் செய்ய இயலும்“ என்றேன். பாருங்கள்? ”அவன் தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொள்ளப் போகிறான் என்று ஒரு தரிசனம் கண்டேன். இவன் தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி. என்னை இந்தியாவை விட்டே துரத்திவிடுங்கள். அது அவ்வாறு இருந்து - இவன் தன்னுடைய பார்வையைப் பெற்றுக் கொண்டால், இப்பொழுது எத்தனை பேர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உங்கள் முகம்மதிய தீர்க்கதரிசியையும் மற்றவைகளையும் மறந்து விடுவீர்கள்?“ என்று கேட்டேன். நீங்கள் காணக்கூடிய தூரம் வரையில், திரள்கணக்கான, ஆயிரமாயிரக்கணக்கானோரின் கரங்கள். அங்கே அது இருந்தது; அதுவே பதிலாக இருந்தது.
நான் அவனிடம் சென்று.... என்று அவனிடம் கூறினேன். நான் மொழிபெயர்ப்பாளரிடம், “இதை மொழிபெயர்க்க வேண்டாம். பரலோகப் பிதாவே, இது மறுபடியும் ஒரு - ஒரு கர்மேல் பர்வதமாக இருக்கிறது. நீர் உம்முடைய வார்த்தை தோற்றுப்போக அனுமதிக்கவே மாட்டீர். ஏனென்றால் இந்த மனிதன் தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொள்ளப் போகிறான் என்று நீர் எனக்குக் காண்பித்தீர். இவனுடைய கண்கள் திறக்கப்படும் என்ற தரிசனத்தை எனக்குக் காண்பித்த தேவன் தாமே கண்களைத் திறப்பாராக என்றேன். உடனே அவன் கூச்சலிட்டான், அங்கே அவனால் என்னைப் போன்று அவ்வளவு நன்றாகப் பார்க்க முடிந்தது. அவன் அங்கிருந்த பட்டணத்தின் மேயரிடம் ஓடிச்சென்றான்.
9நான் மேடையை விட்டுப் போக வேண்டியிருந்தது. நான் அங்கே வெளியே போன போது, என்னிடம் எந்தக் காலணிகளும் இல்லாதிருந்தது, என்னுடைய உடையை விட்டு பாக்கெட்டுகளும் வெளியே இருந்தது. அவர்கள் மகத்தான பெரிய வரிசைகளைக் கொண்ட ஜனங்களைக் கொண்டிருந்தார்கள். காவற்படையினர் அல்லது ஏதோவொன்று, அவர்களிடம் நீளமான பிரம்புகள் இருந்தன என்று நான் - நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியும், காவற்படையினர் அவர்களை இவ்விதமாக நெருங்கி வராமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஜனங்களோ அவர்களுடைய கால்களுக்கு மேலேயும், அவர்களுடைய கால்களுக்குக் கீழேயுமாக ஓடினார்கள், வெறுமனே உங்களைத் தொடுவதற்குத் தான் அவ்வாறு செய்தார்கள், அவர்களுடைய முதுகுகளின் மேல் தவழ்ந்து சென்றார்கள் (crawl over) பாதுகாப்பின் நிமித்தமாக, பட்டணத்தை விட்டு வெளியேறக் கூட - அதைச் செய்ய முடியவில்லை.
அந்த மனிதன் ஆளுநருக்கு முன்பாக, அல்லது அது - அங்கே மேலேயுள்ள ஜனாதிபதிக்கு முன்பாக சாட்சி கூறியிருக்கிறான், அவருக்கு முன்பாக தான் சாட்சி கூறினான் என்று நினைக்கிறேன். அந்தப் பட்டணத்தின் மேயர் அதைக் குறித்த சாட்சியாக இருந்தார். அவனுடைய பெயர் என்னிடம் இருந்தது; நான் இப்பொழுது என்னுடைய பாக்கெட்டுகளில் ஒன்றில் அதை வைத்திருந்தேன், தங்கும் விடுதியிலே, என்னுடைய கோட்டு பாக்கெட்டுகளில் ஒன்றில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
அவர்கள் என்னைத் திரும்ப எங்கே வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்கள், நியூ டெல்கிக்குத் தானா? நியூ டெல்கியா? நியூ டெல்கி, அதுதான் என்று நினைக்கிறேன, அங்கே அவர்களுக்கு ஒரு அடுக்கு இருக்கை அரங்கு (amphitheater) இருக்கிறது, அங்கே அதற்குள்ளே பத்து லட்சம் ஜனங்களையும் இருத்த முடியும். எனவே நான் திரும்பவும் போவேன் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். அவர் இன்னும் தேவனாக இருக்கிறார். அவர் ஒருபோதும் மாறுவதில்லை. வேளை வந்து கொண்டிருக்கிறது.
10நான் இந்தக் காலையில் பேசும்போது, கூறினபடி, ஒரு மனிதன் ஒருமுறை எப்பொழுதாவது அந்தத் தேசங்களுக்குள் சென்று, அந்த ஜனங்களுடைய தேவையைக் கண்டுகொள்வான் என்றால், அப்பொழுது நாம் நம்மைக்குறித்தே வெட்கப்படுகிறவர்களாக உணருவோம். நமது சிறிய சபைகள், நம்மால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பேரை தாங்கிக்கொண்டு வருகிற, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுகிற ஜனங்கள் அங்கே இருக்கிறார்கள், அந்த மனிதர்களில் சிலருக்கு அணிந்து கொள்ள காலணிகள் இல்லாமல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருகிறார்கள். அது சரியே. காலணிகளை அணிந்து கொள்ளாமலே மிஷனரிமார்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், ஒருக்கால் ஏறக்குறைய வாரத்துக்கு இருமுறை ஒரு சிறிய தட்டு கறி -குழம்பு-கூட்டுவகையை (curry) கொண்டிருந்து, அடர்ந்த காடுகளினூடாகவும், எல்லாவிடங்களினூடாகவும் ஓடி, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ண முயற்சிக்கிறார்கள்; நாமோ, நாம் என்றென்றுமாக இங்கே இருக்கப் போகிறோம் என்பது போன்று, 60 லட்சம் டாலர்கள் (six million dollar - 1 million என்பது பத்து லட்சம் - தமிழாக்கியோன்) செலவில் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டே, கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை . நான் -நான் - நான் - நான் அந்த ஒன்றின் பேரில் துவங்க விரும்பவில்லை, நாம் வேறொரு பொருளின் பேரில் தான் (பேசிக்கொண்டு இருக்கிறோம்.
இப்பொழுது, சென்ற மாலையில்... நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பாக, நாம் காரணகர்த்தாவை (Author) ஜெபத்தில் அணுகுவோம். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம்.
11எங்கள் பரலோகப் பிதாவே, உமது குமாரனாகிய எங்கள் அன்பு இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்றிரவு மறுபடியுமாக நாங்கள் ஒன்று கூடுகிறோம். நாங்கள் அவருடைய நாமத்தில் தான் ஒன்று கூடியிருக்கிறோம், ஏனென்றால் ஒரு காரியத்தைக் குறித்து, இரண்டு மூன்று பேர் அவருடைய நாமத்தில் ஒன்றுகூடி எதையாகிலும் கேட்டால், அவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். இப்பொழுதும், பிதாவே, நாங்கள் அந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம், சபையானது எவ்வளவு தான் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, நீர் அந்தச் சபையை சந்திக்க விருப்பமுள்ளவராகவே இருக்கிறீர். நீர் இன்னும் உம்முடைய ஜனங்களுடனிருந்து (அவர்களைச் சந்திப்பீர். நீர் வந்து, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் இன்றிரவு ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.
12நாளை ஞாயிற்றுக்கிழமை, உலகத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பிரசங்க பீடங்கள் நாளைத் திறக்கப்பட்டிருக்கும். தேவனே, மற்ற தேசங்களிலுள்ள அவைகளில் சில ஏற்கனவே திறக்கப்பட்டிருக்கின்றன; வேறு தேசங்களில் இது ஞாயிறு காலையாக இருக்கிறது. பிதாவே, எல்லாவிடங்களிலும் உள்ள உம்முடைய ஊழியக்காரர்களை நீர் அபிஷேகிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய மிஷனரிமார்கள் எங்கேயிருந்தாலும், அவர்களை அபிஷேகியும். தேவனே, வியாதிப்பட்டவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிற உம்முடைய ஊழியக்காரர்கள், ஒவ்வொரு சபையிலுள்ள ஒவ்வொரு மனிதனிடத்திலும், மற்றும் கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலும் உள்ள எல்லாவிடங்களிலும் மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் நடப்பிக்கப்படும்படியாக, அந்த உம்முடைய ஊழியக்காரர்கள்தாமே மிகவுமாகஅபிஷேகம் பண்ணப்படுவார்களாக. கர்த்தாவே, குற்றம் கண்டுபிடிப்பவர்கள் விலகிச்சென்று, தொல்லை கொடுப்பதை நிறுத்தி, ஒரு பெட்டைக்கோழி தன்னுடைய அடைகாக்கும் குஞ்சின் மேல் கூடியிருக்குமாப் போல, ஜீவனுள்ள தேவனுடைய சபையானது ஒன்றாக கூடியிருக்கும்படியாக, தேவன் அப்படிப்பட்ட ஒரு வழியில் தமது ஆவியை ஊற்றும் ஒரு நேரம் வருவதாக. இதை அருளும், பிதாவே.
இங்கே உள்ளே எங்களைக் கொண்டு வரும்படியாக, வாசல்களைக் திறந்து வைத்திருக்கிற இந்த சபைக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். நாளைக்கு நீர் இந்த மேய்ப்பரையும், ஞாயிறு பள்ளி ஆசிரியர்களையும், பாடகர்குழுவையும், அதனுடைய செயல்பாடுகளையும், இதனுடைய சபை அங்கத்தினர்களையும், இதனுடைய டீக்கன்மார்களையும், தர்மகர்த்தாக்களையும், இன்னும் என்னவெல்லாம் உண்டோ அவைகளையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். காலையிலே, அவர்கள் ஞாயிறு பள்ளி வகுப்புக்காக ஒன்றுகூடிவரும் போது, மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்படுவதாக. பரிசுத்த ஆவியானவர் தாமே கட்டிடத்தில் இறங்கி (fall), ஒரு எழுப்புதல் துவங்கி, தேவனுடைய வல்லமையின் கீழாக ஆட்கொள்ளப்பட்டு, தரைகளின் குறுக்கே எல்லாவிடங்களிலும் கிடப்பதாக. ஜெபம் பண்ணும்படியாக, தேவனுடைய ஜனங்கள் ஒருமித்து வந்து, தாங்களாகவே ஒன்றுகூடும்போது, தேவன் என்ன செய்வார் என்ற ஒரு திருஷ்டாந்தமாக இது பட்டணத்தைச் சுற்றிலும் இருப்பதாக.
13இந்த இந்திய சகோதரனையும் அவருடைய மனைவியையும், இந்தச் சிறு பிள்ளைகளையும் இன்றிரவு நோக்கிப் பாரும், கர்த்தாவே, இன்றிரவு அவர்கள் இங்கே எங்களோடு கூட இருப்பதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவன் ஜனங்களிடத்தில் பட்சபாதமுள்ளவர் அல்லவென்று, புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது உண்மையாக இருக்கிறது என்பதை எங்களுக்குக் காண்பிக்கும்படிக்கே இது இருக்கிறது, கர்த்தாவே. சகல தேசங்களிலும் உம்மைத் தொழுது கொண்டு, உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு நீர் மகிமை பொருந்தியவராகவே இருக்கிறீர். நீர் எங்கள் எல்லாருக்குமான உலகளாவிய தகப்பனாக இருக்கிறீர் என்பதற்காகவும், நீர் ஒரு நித்திய தகப்பனாயிருப்பதற்காகவும்
நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, இன்றிரவு நீர் நித்திய ஆசீர்வாதங்களை எங்கள் மேல் அனுப்ப வேண்டுமென்று ஜெபிக்கிறோம்.
எங்களுக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் எங்களுக்கு மன்னித்தருளும். எங்கள் இருதயங்களில் ஒரு கசப்பான வேரும் எந்த இடத்திலும் மீதியாக இருக்கவே வேண்டாம். நாங்கள் கொடுக்கப் போகிற இந்த வார்த்தையானது ஆவியானவரின் மூலமாக அபிஷேகிக்கப்பட்டதாகப் புறப்பட்டு வரும்படியாக, பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுடைய ஜீவியங்களையும் எங்கள் மனச்சாட்சியையும் சுத்திகரிப்பாராக (purge). அதுதாமே - பேசுகிற உதடுகளையும், கேட்கிற காதுகளையும் நீர் விருத்தசேதனம் பண்ணியருளும், அதுதாமே ஆழமில்லாத நிலத்திலோ, அல்லது ஆகாயத்துப் பறவைகள் கொத்தி தூக்கிச் செல்லும்படிக்கு (packed away), கற்பாறை நிலத்திலோ விழ வேண்டாம். ஆனால் அதுதாமே நல்ல வளமான விசுவாச நிலத்திற்குள் விழுந்து, நூறாக பலன் தருவதாக. இதை அருளும், கர்த்தாவே நாங்கள் இதையும், இதனோடு கூட எங்களையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் ஒப்புவிக்கிறோம். ஆமென்.
14ஆபிரகாமின் பேரிலான அவைகளிலிருந்து நான் பெற்றுக்கொள்ளும், இந்தச் செய்திகளை நானே மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறேன். அது...?... நீங்கள் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆபிரகாம். அதை அணுகிக் கொண்டிருக்கையில், நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் ஒரு காரியத்திலிருந்து மற்றொரு காரியத்திற்கு வழிநடத்துகிறார். நாம் நிச்சயமாகவே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம்.... கடந்த இரவு... சென்ற இரவுக்கு முந்தின இரவு, அவன் தேவனால் அழைக்கப்பட்ட போது, அவனை நாம் கொண்டிருந்தோம். சென்ற இரவு, நாம் அவனைக் கண்டபோது, - லிருந்து தன்னைத்தானே வேறுபிரித்துக் கொண்டான், முழுமையான கீழ்ப்படிதல். நீங்கள் தேவனுக்கு முற்றிலுமாக கீழ்ப்படியும் வரையில், நீங்கள் ஆசீர்வதிக்கப்படவே மாட்டீர்கள் என்றும், தேவனால் உங்களுக்காக எதையும் செய்ய முடியாது என்பதையும் நாம் கண்டுகொண்டோம்.
15இப்பொழுது, வியாதியஸ்தரிடம் நான் கூறும்படியான ஒரு சிறு அறிவுரை இருக்கிறது. நீங்கள் ஜெபிக்கப்படும்படி, இங்கே வரலாம்; உங்கள் மேல் கரங்களை வைக்கும்படியாக தூதர்கள் உங்களுக்கு இருக்கலாம், நீங்கள் முதலில் அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொண்டு, அதை அறிக்கை செய்யும் வரைக்குமாக, அது ஒருபோதும் உங்களுக்கு ஒரு காரியத்தையும் செய்யாது. அவர் நம்முடைய அறிக்கையின் பேரில் பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவர் அதை தேவனுக்கு முன்பாக சாட்சியமாகக் கூறுவதற்கு முன்பு, முதலில் நீங்கள் அதை அறிக்கை செய்தாக வேண்டும். அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்ற நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசும்படியாக அவர் அங்கே பிரதான ஆசாரியராக இருக்கிறார்.
இப்பொழுது, தெய்வீக சுகமளித்தல் என்றால் என்ன? சுகமடையும்படி நாளை இரவு வரைக்கும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றா இப்பொழுது அதற்கு அர்த்தம்? இல்லை, ஐயா. நான் சபைக்கு வர வேண்டுமா? இல்லை, ஐயா. நீங்கள் தேவனை விசுவாசித்து, அதை உங்கள் தனிப்பட்ட சொத்தாக ஏற்றுக்கொள்ளும் அந்த கணமே, அது சரியாக அப்போதே முடிந்து விட்டது. அது சரியே. சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் எப்போது சுகமடைந்தேன்? நான் சென்ற வாரம் இரட்சிக்கப்பட்டேன், சென்ற இரவுக்கு முந்தின இரவு, பத்து வருடங்களுக்கு முன்பு, நான் இரட்சிக்கப்பட்டேன்.“ இயேசு உங்களுக்காக கல்வாரியில் மரித்த போதே, 1900 வருடங்களுக்கு முன்பே நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். உங்களுக்காக தேவன் வைத்திருக்கிற ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதங்களும்... இயேசு சிலுவையில், அது முடிந்தது” என்று கூறினார். எல்லாவற்றிற்குமே கிரயம் செலுத்தப்பட்டு விட்டது.
நீங்கள் அடகு கடையில் இருந்தது போன்று, அப்போது தேவன் வந்து உங்களை வெளியே கொண்டு வருகிறார். ஓ, அதிலுள்ள அழகான பாடம். நாம் அடுத்த வாரத்தில் ரூத் மற்றும் நகோமியைக் குறித்த, இனத்தான் மீட்பர் (kinsman redeemer) என்ற காரியத்திற்கு வரலாம். அது ஒரு அழகான பாடமாகும். அநேக..... முழு வேதாகமமும் அழகாயுள்ளது, அது தேவனுடைய வார்த்தையாக இருப்பதால், அப்படியே அதிலுள்ள எல்லாமே அழகாக இருக்கிறது.
இப்பொழுது, உங்களால் உங்கள் சுகத்தையோ அல்லது உங்கள் இரட்சிப்பையோ ஏற்றுக்கொள்ள முடியும் அந்தக் கணமே, நீங்கள் தெருவில் நடந்து கொண்டிருந்து, நீங்கள் - நீங்கள் எங்கே இருந்தாலும், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் அந்த கணமே, அது நீங்கள் மறுபக்கமாகத் திரும்பும் போதுதான்.
16நான் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, என்னுடைய முற்றத்தில் புல்லை வெட்டிக் கொண்டிருந்தேன் - நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன், சிலசமயங்களில் நீங்கள் என்னுடைய தளர்த்தியான மேலாடைகளை அணிந்து, ஒருசில சுற்றுகள் வெட்ட வேண்டியிருக்கும்; அப்போது யாரோ ஒருவர் உள்ளே வருவார், உடனே நீங்கள் போய் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியிருக்கிறது. பின்பக்க வாசலில் வெளியே சென்று, மாற்றிவிட்டு, திரும்பி வர வேண்டியதாக இருக்கும். நான் பெட்ரோலை வெறுமையாக்கியிருந்தேன், எனவே நான் முன் தாழ்வாரத்தின் மேல் போகத் துவங்கினபோது, வீட்டின் முன்பு அதிக எடை உபயோகிக்கப் பட்டதால் சேதமடைந்திருந்த ஒரு பழைய பாரவண்டி நிறுத்தப்படுவதைக் கண்டேன், அங்கே அந்தச் சிறு வண்டிப்பாதையில் நற்குடி பண்பாளர்கள் (gentlemen) நடந்து மேலே வந்து கொண்டிருந்தார்கள். அவர், “நான் சகோதரன் பிரன்ஹாமைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
அதற்கு நான், “நான் தான் சகோதரன் பிரன்ஹாம்” என்றேன். அவர் அந்த தளர் பணி மேலாடைகளையும் மற்றும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “ஆம், ஐயா” என்றார்.
நான், “அது சரி” என்றேன்.
எனவே அவர், “நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒருகணம் உம்மைக் காண விரும்பினேன்; நீர் வேலையில் மும்முரமாக இருக்கிறீர் என்று நினைக்கிறேன்” என்றார்.
நான், கர்த்தரைக் குறித்துப் பேசும்படிக்கு நான் ஒருபோதும் மிக பிஸியாக இருப்பதேயில்லை“ என்றேன். அவர், ”நல்லது...“ என்றார்.
நான், “நீர் உள்ளே வர மாட்டீரா?” என்றேன்.
அவர், “இல்லை, நான் வெறுமனே இங்கே இந்த முன் தாழ்வாரத்திலேயே உட்காருகிறேன்” என்றார்.
17அவர், “சகோதரன் பிரன்ஹாமே...” என்றார், அவர் எங்கிருந்து வருகிறார் என்று என்னிடம் சொன்னார், அவர், “நான் ஒரு லூத்தரனாகப் பிறந்து, அர்ப்பணிப்பட்டேன், அல்லது பிரதிஷ்டைபண்ணப்பட்டேன், அல்லது அவர்கள் அதை எவ்வாறு அழைத்தாலும், அவ்வாறு செய்யப்பட்டேன். என்னுடைய அம்மா என்னை சில சமயம் சபைக்கு அழைத்துக்கொண்டு சென்றாலன்றி, எனக்கு தெரிந்த வரைக்கும், நான் எப்பொழுதாவது சபைக்கு கடைசியாகப் போனது, ஒரு சிறு பையனாக இருந்த போதுதான் என்று நினைக்கிறேன், எனக்கு அதைக் குறித்து எதுவும் தெரியாதிருந்தது. பிறகு நான் விவாகம் பண்ணினேன்” என்று கூறினார். அவர் மிகவும் அருமையான ஒரு வணிகவியாபாரம் செய்பவராக இருந்தார். அவர், “எனக்கு நிறைய காரியங்கள் இருந்தன, ஏராளமான - அருமையான கார் வியாபாரம், நான் நிறைய பணம் சம்பாதித்தேன். ஒருநாள் என்னுடைய மனைவி பெந்தெகோஸ்தேகாரர்களிடம் சென்றாள்” என்றார். அவர் அதைச் செய்தவிதமாகவே அதை நான் எடுத்துக் கூறப் போகிறேன், அவர், “அவள் பெந்தெகோஸ்தேகாரர்களிடம் சென்று, அந்த ஆவிகளை அவள் மேல் பெற்றுக்கொண்டாள். அவள், அவளுக்கு ஒரு - ஒரு நல்ல ஜீவியம் இருந்தது. அவள் என்னிடம் வந்து, நான் போய் அந்த ஆவிகளை என்மேலும் பெற்றுக்கொள்ளும்படி செய்ய முயன்றாள். நானோ, 'வேண்டாம், தேனே, நீ போக விரும்பினால், எப்படியும் தொடர்ந்து போ, இப்பொழுது, ஞாபகம் கொள், நீ உன்னுடைய ஜீவியத்தை மாற்றிக் கொண்டு இருப்பாயானால்...' என்றேன். நாங்கள் -நாங்கள் ஒரு சாதாரணமான அமெரிக்க வாழ்க்கையை தான் வாழ்ந்தோம், பழச்சாறுகளோடு அநேகவித மதுபானங்களையும் கலந்து குடிக்கும் விருந்து கொண்டாட்டங்களும், நடனங்களும், குடித்து வெறித்தலும், மற்ற எல்லாமும் கொண்டவர்களாகத்தான் இருந்தோம். அவள் நல்லவளாக நடந்துகொள்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவள் நேராக்கப்பட்டாள்; அது அவளை ஒரு வித்தியாசமான நபராக ஆக்கினது. நான், நல்லது, அவள் அவ்விதம் நடந்து கொள்வாளானால், அவள் அவ்விதம் ஆகியிருப்பதால், நான் - நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று எண்ணினேன். “இப்பொழுது, உன்னிடம் காசோலை புத்தகம் இருக்கிறது, உன்னுடைய சிறிய சபைக்கு எந்த நேரத்திலாவது எந்தப் பணமாவது தேவைப்படுமானால், என்னுடைய பெயரைப் போலவே, உன்னுடைய பெயரும் ஒரு காசோலையின் மேல் அவ்வளவு நன்றாகவே இருக்கிறது. ஆனால் எனக்கோ, நான் - நான் மதசம்பந்தமானவன் அல்ல. நீ மத சம்பந்தமான ஈடுபாடுடையவளாக இருக்க விரும்பினால், தொடர்ந்து செல்” என்று கூறினேன்.
18“நல்லது, அவள் ஏறக்குறைய ஒரு வருடம் அந்தச் சிறிய சபையில் இருந்தாள். அவர்கள் டென்னஸியில் ஒரு கன்வென்சன் கூட்டத்தை உடையவர்களாக இருந்தார்கள் என்றார். எனவே அது தீர்க்கதரிசனத்தின் சர்ச் ஆப் காட் சபை என்று நினைக்கிறேன், அங்கு தான் அவர்கள் - அவர்கள் தங்களுடைய கன்வென்சன் கூட்டங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர் தொடர்ந்து, அவள் அங்கு மேலே போனாள். நான் ஒரு காரை விற்பனை செய்து கொண்டிருந்தேன், ஒரு - வெளியில் நிறைய, சில பெண்களுக்கு அதை விற்றுக்கொண்டிருந்தேன். நான் கோடை காலத்தில், என்னுடைய கோட்டை அணிந்து கொண்டு, என்னுடைய விற்பனையை செய்யும்படியாக, அவர்களுக்கு முன்னால் நடந்து சென்றேன். நான் திரும்பி வந்தபோது, நான் இவ்வாறு சிந்திக்க நேர்ந்தது, அந்த இரண்டாவது கொத்து திறவுகோல்களை (சாவிகளை) அந்தப் பெண்ணுக்கு நான் கொடுத்தேனா? நான் என்னுடைய பாக்கெட்டில் என்னுடைய கையால் தேடிதுளவிப் பார்த்தேன் (run down), அதற்குள்ளே எனக்கு ஒரு சிறிய சதுரவடிவ தொங்கல் சீட்டு (tag) இருந்தது, அதில் ஒரு கேள்விக்குறி இருந்தது, அதன்பின்னால், 'நித்தியத்தை நீ எங்கே கழிப்பாய்?' என்று இருந்தது” என்றார். நல்லது, அவர், “நான் நோக்கிப் பார்த்து, 'நல்லது யார் அதை என்னுடைய பாக்கெட்டில் வைத்திருப்பார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறதே?' என்று எண்ணினவனாக, அதை அந்த குப்பை கூடையில் வீசிவிட்டேன். ஏதோவொன்று என்னிடம், ”ஆனால் அது முடிவு செய்யப்பட வேண்டும்“ என்று சொன்னது. உடனே நான் கை நீட்டி, அதை மீண்டும் எடுத்தேன். நான் நடுங்கிக் கொண்டிருப்பவனாக ஆக வேண்டியிருந்தது, நான், 'அது சரிதான், நான் நாற்பது வயதைக் கடந்து விட்டேன். எனவே நான் அதை எங்கே கழிக்கப் போகிறேன் என்பதை கண்டுபிடித்தாக வேண்டும்' என்று நினைத்தேன்” என்று கூறினார். ஓ, இப்பொழுது இதோ பார், நீ முழுவதுமாக குழம்பிப் போய் விட்டாய்“ என்றேன். எனவே அவர் அதை மீண்டும் வீசி எறிந்து விட்டு, திரும்பிச் செல்ல முயற்சித்து, மின்விசிறியை ஆன் செய்தார் மற்றும் அதைப் போன்றவைகளைச் செய்தார். மேலும் சொன்னார். அவர் மீண்டுமாக அதை திரும்பிப் பார்த்தார். அது அப்படியே தொடர்ந்து அவருடைய இருதயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. ”நித்தியத்தை நீ எங்கே கழிப்பாய்?“ அவர் மூன்றாவது முறையாக அதை எடுத்தார். அவரால் - அவரால் வீட்டிற்குப் போகக் கூட முடியாத அளவுக்கு, அது அவரை மிகவும் பதட்டமடையச் செய்து விட்டதாகக் கூறினார்.
19பிரபலமான சுவிசேஷகராகிய பில்லி கிரஹாம், அவருடைய மாகாணத்துக்கு மேலே உள்ள ஒரு மாகாணத்தில் இருந்து, ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கேள்விப்பட்டார். அவர் அந்தக் கூட்டத்திற்குப் போனதாகக் கூறினார். அவர் அதை திரு. கிரஹாம் அவர்களிடம் கூறலாம் என்று நினைத்தார். தொடர்ந்து அவர், “திரு. கிரகாம் அவர்கள் அந்த இரவில் ஒரு குறிப்பிடத்தக்க செய்தியைப் பேசினதாகக்” கூறினார். “இயேசு கிறிஸ்துவைப் பார்க்க விரும்புகிறவர்கள் - இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிற எல்லாரும் எழுந்து நின்று, உங்கள் கரத்தை உயர்த்துங்கள்' என்று கூறினார்” என்பதாகச் சொன்னார். “நான் எழுந்து நின்று, என்னுடைய கரத்தை மேலே உயர்த்தினேன். அவர்கள் என்னை அந்த அறைக்குள் அழைத்துச் சென்று, என்னிடம், அவர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசித்தேனா?' என்று கேட்க, நானும், ஆமாம், நான் விசுவாசிக்கிறேன்' என்றேன். என்னுடைய விசுவாசத்தின் பேரில், அவர்கள் என்னை ஒரு கிறிஸ்தவனாக ஆக்கிவிட்டதாகவும், இப்பொழுது அதெல்லாம் முடிந்து விட்டது' என்றும் என்னிடம் கூறினார்கள் என்று சொன்னார்.
அவரோ, “சகோதரன் பிரன்ஹாமே, ஆனால் அதெல்லாம் முடிந்து போகாமல் தான் இருந்தது. நான் வெளியேறி, பிறகு வேறொரு இடத்திற்குப் போனேன், அந்த ஜனங்கள் சுயாதீன மெதோடிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். நான் பரிசுத்தமாக்கப்பட்டு, சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்டு, சத்தமிட வேண்டும், அப்பொழுது அதெல்லாம் முடிந்து விடும் என்று என்னிடம் கூறினார்கள். அவர்கள் என்னோடு கூட தரித்திருந்தார்கள். நான் சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்டேன், பரிசுத்தமாக்கப்பட்டு, சத்தமிட்டேன், அது...” என்று கூறினார். ஆனால், 'அதெல்லாம் முடிந்துவிட்டது' என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்“ என்றார். ஆனால் அது முடிந்துவிடவில்லை ” என்று கூறினார்.
அதன்பிறகு, ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மீண்டும் மீண்டுமாக கடந்து போய்க் கொண்டிருந்த ஒரு பிரபலமான பெந்தெகோஸ்தே சகோதரனிடம் போனேன், அவர் மிகப்பெரிய பெந்தெகோஸ்தே குழுவினரில் ஒருவராக இருந்தார். அவர், 'நீர் எப்பொழுதாவது அந்நிய பாஷைகளில் பேசினதுண்டா?' என்று கேட்க, இல்லை என்றேன்). 'அப்படியானால் நீர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. அப்படியானால் நீர் அந்த மற்ற கூடாரத்திற்குள் சென்று, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்' என்று கூறினார். அவர்கள் என்னிடம் மிகவும் அருமையாக இருந்தார்கள், என்னோடு பாடுபட்டார்கள் மற்றும் எல்லாவற்றையும் செய்தார்கள். நான் அங்கேயே தங்கியிருந்தேன், அங்கே அவர்களில் சிலர் இரவிலும் என்னோடு கூட தங்கியிருந்தார்கள். இறுதியாக, வல்லமை என்மேல் இறங்கியது. நான் வெளியே வந்தேன். நான் அடுத்த நாள் அந்த சுவிசேஷகரைக் காணச் சென்றேன். அவர், “அதெல்லாம் முடிந்து விட்டது” என்று கூறியும், சகோதரன் பிரன்ஹாமே, அதுவெல்லாம் முடியாமல் தான் இருந்தது என்று கூறினார்“ என்றார்.
20அவர் தொடர்ந்து, அதன்பிறகு நான் அங்கிருந்து - அங்கிருந்து போய், 'சுகமளித்தலின் சத்தத்திற்குச் சென்றேன். நான் சுகமளித்தலின் சத்தத்திற்குச்' போன போது, அங்கேயிருந்த அந்த சகோதரர்கள் எல்லாரோடும் போனேன், நான் என்னுடைய ஜீவியத்தில் அந்த வேறுபிரிக்கும் கோட்டைக் கடந்து விட்டதாகவும், அங்கே எனக்கு எந்த இடமுமே இல்லை என்றும் அவர்கள் என்னிடம் கூறிவிட்டார்கள். ஒரே காரியம் மாத்திரமே உமக்குரிய பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும். நீர் சென்று சகோதரன் பிரன்ஹாமைப் பாரும்; அவர் ஒரு தீர்க்கதரிசி' என்று கூறினார்கள்“ என்றார். இப்பொழுது, அது தவறாகும், ஆனால்... ”அவர் - அவர் ஒரு தீர்க்கதரிசி; அவர் உம்மை நோக்கி, நீர் கோட்டை எங்கே தாண்டியிருக்கிறீர் என்று காண முடியும், ஒருக்கால் நீர் திரும்பிச் சென்று, ஏதோவொன்றைச் செய்யலாம். நீர் செய்திராத ஏதாகிலும் ஒன்று அங்கே இருக்கிறது அல்லது - நீர் போய் அவரைப் பார்ப்பது மிக நல்லது' என்று கூறினார். சகோதரன் பிரன்ஹாமே, இதோ நான் இருக்கிறேன் என்றார்.
நான், “நல்லது, சகோதரனே, நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல. ஆனால் ஜனங்களுக்கு உதவி செய்யும்படியாக, நான் காரியங்களைப் பகுத்தறியும்படி கர்த்தர் அனுமதிக்கிறார், அது ஒரு சிறு தாழ்மையான வரமாக இருக்கிறது. ஆனால் நான் -நான் என்னைத்தானே ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால் - ஆனால் அதற்கு உமக்கு ஒரு தீர்க்கதரிசி அவசியமில்லை . நீர் அதை நேராக ஆக்குவது தான் உமக்குத் தேவையாக இருக்கிறது; அவ்வளவுதான். உமக்கு...” என்று கூறினேன்.
21நான், “நான் உம்மிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். பில்லி கிரஹாம் உம்மிடம் கூறினது சத்தியம். மெதோடிஸ்டுகள் உம்மிடம் சொன்னதும் சத்தியம் தான். மேலும் பெந்தெகோஸ்தேகாரர்கள் உம்மிடம் சொன்னதும் சத்தியம் தான். ஆனால் அவை எல்லாமே முழு சத்தியமாக இல்லை” என்றேன். புரிகிறதா? அது சத்தியம் தான், ஆனால் அதில் எல்லாமும் அல்ல. கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதை நான் நம்புகிறேன்; நான் அதை விசுவாசிக்கிறேன். பரிசுத்தமாக்கப்படுதலையும், ஒரு ஜீவியத்தை சுத்தப்படுத்துவதையும், சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்டு, சத்தமிடுவதையும் நான் விசுவாசிக்கிறேன், நான் அதை நம்புகிறேன். அந்நிய பாஷைகளில் பேசுவதையும், ஆவியின் ஞானஸ்நானத்தையும் நான் விசுவாசிக்கிறேன், அவை எல்லாவற்றையுமே நான் விசுவாசிக்கிறேன்“ என்றேன். ஆனால் நான், ”நாம் பேசிக் கொண்டிருப்பது சரியாக அதைக் குறித்து அல்ல“ என்றேன்.
22நான் உம்மிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது, உம்முடைய நாற்பது வருட ஜீவியத்தில் நீர் எதையுமே செய்திருக்கவில்லை என்று நீர் கூறினதை நினைவுகூரும்“ என்றேன்.
அவர், சகோதரன் பிரன்ஹாமே, எனக்கிருந்த ஒவ்வொரு காரையும் நான் விற்று, அதை பிரசங்கிமார்களுக்கும் சுவிசேஷகர்களுக்கும் கொடுத்திருக்கிறேன். எப்படி செய்வது என்று எனக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே செய்து, என்னுடைய ஜீவியத்தில் நான் செய்துள்ளவற்றிற்காக ஒப்புரவாக்கப்படுதலைச் செய்து பார்த்தேன்“ என்றார்.
அதற்கு நான், 'அது அவசியமில்லை ; நீர் அதைச் செய்திருக்க வேண்டியதில்லை“ என்று கூறினேன். பாருங்கள்? நான், ”நீர் அதைச் செய்வது தேவனுக்கு ஒருபோதும் அவசியமில்லை, உள்ளே (செல்ல) உம்முடைய வழியில் அதற்கு கிரயம் செலுத்த முடியாது. அது யோசனை அல்ல“ ஆனால், ”அவருடைய கிருபை தான் உம்மை உள்ளே கொண்டு செல்லும்“ என்றேன்.
அவர், “நல்லது, நான் எதைக் கட்டாயம் செய்தாக வேண்டும்?” என்று கேட்டார்.
நான், “ஒரு காரியத்தையும் செய்ய வேண்டியதில்லை, உம்மால் எதையுமே செய்யவும் முடியாது. நீர் உம்முடைய ஜீவியத்தில் நாற்பது வருடங்களாக, நீர் தேவனைக் குறித்து கவலைப்பட்டதில்லை என்று என்னிடம் கூறினீர். ஆனால் 'நித்தியத்தை எங்கே கழிப்பாய்?' என்று கூறின ஒரு சிறு துண்டு தாளை நீர் எடுத்த போது, ஏதோவொன்று, அது தீர்மானம் செய்யப்பட்டாக வேண்டும்' என்று கூறினது, உம்மால் அதைத் தாண்டிப் போகவே முடியாதிருந்தது. இப்பொழுது, நீர் ஒரு பாதையில் ஒரு வழியாகப் போய்க் கொண்டிருந்தீர், திடீரென்று, நீர் இந்த வழியாகத் திரும்பி வரத் துவங்கினீர். நீர் தேவனுக்காக கவலை கொண்டிருக்கவில்லை; (பிறகு) நீர் அவரைத் தேடிக்கொண்டு பின்னால் வரத் தொடங்கினீர். சரியாக அங்கே தான் உம்முடைய திருப்பத்தைச் செய்தீர், அதுதான் உம்மை மாற்றிவிட்டது, சரியாக அங்கே தான் என்றேன்.
அவர், அப்படியானால் நான் இந்த நேரம் எல்லாம் அதை உடையவனாகத் தான் இருந்திருக்கிறேன்“ என்றார்.
நான், “நிச்சயமாக” என்றேன்.
அவர், “நல்லது, தேவனுக்கு துதி உண்டாவதாக” என்றார். (பாருங்கள்?)
23ஏதோவொரு உணர்ச்சியின் பேரில் அல்ல, ஆனால் நீங்கள் அதை விசுவாசித்தீர்களா? பாருங்கள்? அங்கேதான் நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் - பெற்றுவிட்டீர்கள்.... பாருங்கள், பரிசுத்தமாக்கப்படுதலைக் குறித்த எத்தனை உணர்ச்சிகள் இருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல... அது பரிசுத்தமாக்கப்பட வேண்டிய ஒரு உணர்ச்சியாகும். அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு உணர்ச்சி தான். ஆனால் நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, அது நீங்கள் போகும் திசையை மாற்றி திரும்பும்படிக்கு செய்கிறது. எந்த மனிதனும்.... இயேசு பரிசுத்த யோவான் 5:24ல் கூறியிருக்கிறார் (ஒரு கைப்பிடி நிறைய மற்றும் இரண்டு டஜன் முட்டைகளைக் குறித்து எண்ணிப்பாருங்கள். புரிகிறதா?), 5:24ல், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு (நிகழ்காலம்), அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” அங்கே தான் காரியம். புரிகிறதா? சரியாக அங்கே தான் நீங்கள் பின்னால் திரும்புகிறீர்கள். அது பரிசுத்த ஆவியானவரின் ஒரு பாகம் தான். பரிசுத்தமாக்கப்படுதல் என்பது பரிசுத்த ஆவியானவரின் வேறொரு பாகம். அதன்பிறகு, உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாமல், அதனால் மிகவுமாக நிறையப்படும்போது, சகோதரன் ரோ கூறினபடி, அப்போது அவர் உங்களுக்கு வேறொரு பாஷையைத் தருகிறார். அதன்பிறகு முயற்சிப்பது... அவர் அப்படியே உங்களை நிறைத்துவிடுகிறார். அதற்கு பரிசுத்த ஆவி அவசியமாயிருக்கிறது.... “என் பிதா முதலில் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவனால் என்னிடத்தில் வர முடியாது. பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” அங்கே தான் காரியம். ஆகையால் கிறிஸ்துவிடம் வர வேண்டுமென்று உங்கள் இருதயத்திற்குள் மிக மிகச் சிறிய அளவு ஒலித்துக் கொண்டிருக்கிற போதே, நீங்கள் தாமதிக்காமல் அதை உடனடியான செய்துவிடுங்கள், ஏனென்றால் அதுதான் உங்களுக்கு எப்பொழுதாவது சம்பவிப்பதிலேயே மிகப்பெரிய காரியமாகும், உங்களுக்கு எப்பொழுதாவது சம்பவிக்கும் மிகப்பெரிய காரியம் என்னவென்றால், தேவன் தம்முடைய குமாரனுடைய கலியாண விருந்துக்கு உங்களை அழைப்பது தான். அதைக் காட்டிலும் பெரிதான எதுவும் எனக்குத் தெரியாது.
24இப்பொழுது, உங்கள் கதை, ஆபிரகாம், அவன் ஒரு பெரிய சோதனையினூடாக சென்ற பிறகு, அங்குதான் அவனைக் கடந்த இரவில் விட்டு வந்தோம். ஆகாரை அவனுக்கு மனைவியாகக் கொடுக்க சாராள் முடிவு செய்திருந்தாள், அவள் ஒரு பிள்ளையைப் பெற்று, அவனை இஸ்மவேல் என்று அழைத்தாள்; அது சரி அல்லவென்று ஆபிரகாம் அப்பொழுதும் அறிந்திருந்தான், எனவே அவன் தேவனுக்கு முன்பாகச் சென்றான். அதைச் செய்வது தேவனுடைய திட்டமாகத்தான் இருந்தது, ஆனால் சாராள் மூலமாகத் தான் அந்தக் குழந்தையை தேவன் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். இப்பொழுது அவனுக்கு நூறு வயதும் சாராளுக்கு 90 வயதுமாக இருந்தது.
அவன் தேவனுக்கு முன்பாகச் சென்றான், தேவன் அவனுக்குத் தரிசனமாகி, சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தில் அவனிடம் வந்தார், அந்த எபிரெய வார்த்தைக்கு சர்வவல்லமையுள்ள எல் ஷடாய் என்று அர்த்தமாகும். அந்த வார்த்தையை தனித்தனிப் பாகங்களாகப் பிரித்து ஆராய்ந்து பார்த்தால், எபிரெய மொழியில் 'ஷட் (Shad)“ என்பதற்கு ”மார்பகம்“ என்றும், ”மார்பகமுள்ள தேவன்“ என்றும் அர்த்தம், தம்மை விசுவாசிக்கும் பிள்ளைகளுக்குள் தம்முடைய சத்துவத்தை (strength) ஊற்றும்படிக்கு மார்பகங்கள் உடைய ஒரு தேவன். அவர்கள் வியாதியாக இருக்கும் போதும், அவர்கள் பலவீனமாக இருக்கும் போதும், அந்த ஆவியானது பலம்பொருந்திய திடமாக இல்லாதிருக்கும் போதும், அவர்கள் அவருடைய மார்பக வாக்குத்தத்தத்தைப் பற்றிப்பிடித்து, அந்த வாக்குத்தத்தங்களிலிருந்து பலத்தை (சக்தியை) இழுத்துக்கொள்ளுகையில், அவர் அவர்களுக்குள்ளே தம்முடைய வல்லமையை (strength) ஊற்றுகிறார்.
25மார்பகங்கள் உடைய பலம்பொருந்திய ஒருவர், ஓ, அது மிகவும் அழகான காட்சி என்று நினைக்கிறேன். பாருங்கள், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் நின்று கொண்டிருக்கிற 100 வயதான ஒரு வயதான மனிதனுக்கு என்னவொரு ஆறுதல். இப்பொழுது, அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்; அவர்கள் வயது சென்றவர்களாக, வலுக்குறைந்து பலவீனமாக இருந்தார்கள்“ என்று வேதாகமம் கூறுகிறது. தொடர்ந்து தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருந்த ஒரு வயதான் மனிதன்.... ”நான் மார்பகம் உள்ளவர், நீ சப்பிக்கொண்டிருக்கும் ஒரு சிறு குழந்தையைக் (fretting child) காட்டிலும் அதிகமானவன் அல்ல“ என்றார். சாராளுடைய கர்ப்பம் முற்றிலுமாக உலர்ந்து போயிருந்தது, அதற்கும் நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்பே, அவளுடைய இறுதி மாதவிடாய் முடிந்து போயிருந்தது, அநேகமாக ஒரு நேரத்தில் அது சம்பவித்திருக்கவேயில்லை. அங்கே தான் அவள் இருந்தாள், அவளில் இருந்த ரத்தநாளங்கள் எல்லாமே முழுவதும் உலர்ந்து போய் விட்டிருந்தன, அவள் மலடியாக இருந்தாள். அவனும் - ஏறக்குறைய அதே போன்றே, அவனும் செத்துப்போய் விட்ட ஒரு மனிதனாகவே இருந்தான். அந்த வழியில் அவனுக்கு இனிமேல் மனித சக்தி இல்லாமலிருந்தது. அதோ அவன் ஒரு வயது சென்ற மனிதனாகவும், அவனுடைய மனைவியோ மிகவும் வயது சென்றவளாகவும் இருந்தனர். தேவன், ”ஆனால் நான் தாயாக இருக்கிறேன். (ஆமென்). நான் அம்மாவாக இருக்கிறேன், அப்படியே எடுத்து - என்னுடைய வாக்குத்தத்தத்தை தொடர்ந்து பிடித்து, இழுத்துக்கொண்டேயிரு. என்னால் உனக்காக ஏதோவொன்றைச் செய்ய முடியும்“ என்றார். ஓ, எனக்கு அது பிடிக்கும்.
26அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை காண்பிக்கும்படி, அவர் 17ம் அதிகாரத்தில் அவனுடைய பெயரை மாற்றினார். மேலும் சாராளுடைய பெயரையும் மாற்றினார். அது சரியே. அந்தப் பெயர்களைக் கவனித்துப் பாருங்கள், அது ஏதோவொன்றை அர்த்தப்படுத்துகிறது. அவர் ஏன் யாக்கோபுடைய பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார்? அவர் ஏன் சவுலுடைய பெயரை பவுல் என்று மாற்றினார். அவர் ஏன் அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்தார்? அவர் ஜெயங்கொண்டு, மகிமைக்குள் பிரவேசித்த பிறகு, தம்முடைய பெயரை மாற்றிக் கொண்டதாக, அவர் கூறினார். வெளிப்படுத்தின விசேஷத்தில், ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தம்முடைய புதிய நாமத்தை அறியப்பண்ணுவதாக. அது சரியே அவர்கள் ஜெயங்கொள்ளும் ஒவ்வொரு முறையும், அவர்களுக்கு ஒரு புதிய நாமம் கொடுக்கப்பட்டது.
ஆபிரகாம், அவன் முடிவில் ஜெயங்கொண்ட போது, ஆபிராம் என்ற பெயரானது அவனை விட்டு எடுக்கப்பட்டு, “நீ இனி ஆபிராம் என்று அழைக்கப்பட மாட்டாய், ஆனால் ஆபிரகாம் என்று அழைக்கப்படுவாய்” என்று கூறினார். அவனுக்குத் தம்முடைய நாமத்தில் (ஒரு பாகத்தைக் கொடுத்து, அவருடைய நாமத்தை அதில் பொருத்திக் கொண்டார். ஏலோ - கிம் (Elo-him). ஹி-ம் (Hi-m) மற்றும் ஹா -ம் (h-a-m): ஏலோகிம். வேறு வார்த்தைகளில் கூறினால், நான் சகலத்திற்கும் பிதாவாக இருக்கிறேன். புரிகிறதா? நான் உன்னையோ தேசங்களுக்குப் பிதாவாக ஆக்குகிறேன், எனவே நான் மாற்றிவிட்டு, என்னுடைய நாமத்தில் ஒரு பகுதியை உனக்குக் கொடுத்திருக்கிறேன், தேசங்களுக்குப் பிதா, ஹா -ம் (h-a-m). புரிகிறதா? ஏலோ - கிம், ஆபிரகாம்.... அது ஒரு நல்ல சொற்றொடராக உள்ளது, நீங்கள் எப்பொழுதாவது அதைப் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைக்கு கிரகாம் என்று அழைக்கப்படும் ஒரு மகத்தான சுவிசேஷகர் இருக்கிறார், கி-ர - ஹா -ம் (G-r-a-h-a-m), பில்லி கிரகாம், அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், தேவன் எப்படியாக தம்முடைய இரக்கத்தில், அவர் எப்படியாக முன்னறிந்திருக்கிறார், அவர் செய்கிற காரியங்கள்.
இப்பொழுது, அவர் அங்கே என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள், அவர் சாராயை சாராள் என்று மாற்றினார். சாராயின் பெயரை, சாராய் என்பதிலிருந்து சாராள் என்று மாற்றினார். “சாராள்” என்பதற்கு “இராஜகுமாரத்தி (princess அரசிளங்குமாரி, இளவரசி, இராஜாவின் குமாரத்தி)” என்று அர்த்தம் இருப்பதைக் கவனியுங்கள். அவன் தேசங்களுக்கு பிதாவாக இருந்தான். ஓ, அது அழகாயில்லையா? அந்த வயதான மனிதனுக்கும், வயதான பெண்ணுக்கும், இப்பொழுது நூறு வயது, அந்த வாக்குத்தத்தமானது நிறைவேறப் போகிறது.
27இப்பொழுது, இந்த ஆபிரகாம் - அவன் வேறுபிரிக்கப்பட்டபிறகு, நாம் இதைக் கண்டுகொள்கிறோம், அவன் வெளியே சென்று, தன்னுடைய சகோதரனாகிய லோத்தை அடைந்து, அவனைத் திரும்பவும் கொண்டு வந்தான். அவன் அவ்வாறு செய்தபோது, அவனைக் கொன்று போடவிருந்த சத்துருக்களிடமிருந்து அவனைக் கொண்டு வந்தான், அவனைத் திரும்பக் கொண்டு வந்தான், அநேகமாக, அவன் ஒருக்கால் தானும் இப்பொழுது வெளியே வந்து, உலகத்தின் எல்லா காரியங்களிலுமிருந்தும் தன்னைத்தானே வேறுபிரித்துக்கொள்வதாக எண்ணியிருப்பான், அதற்குப் பதிலாக, பன்றியானது கிடந்து புரளும் சேற்றுக்கே போவது போலவும், ஒரு நாய் தான் கக்கினதற்குப் போவது போலவும் அவன் சரியாக சோதோமுக்குள்ளே திரும்பிச் சென்று விட்டான். அவர்கள் சரியாக மறுபடியும் திரும்பிச் சென்று விடுகிறார்கள்.
அங்கேதான் மிகவுமாக நான் அதில் சாந்து பூசிக் கொண்டு வந்திருக்கிறேன். பெற்றாலும்... நான் எவ்வளவாக அதற்கு எதிராக சாந்து பூசினாலும் அது ஒரு பொருட்டல்ல, அதை எப்படியும் செய்யத்தான் போகிறார்கள். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளில், இந்த பதிவானது (recording) பரலோகத்தில் எடுக்கப்பட்டு, உங்களுக்கு விரோதமாக நான் பதில் கூறுவேன் என்பது நினைவிருக்கட்டும். அது சரியே. பெந்தெகோஸ்தே சபையானது குளிர்ந்து போய்க் கொண்டிருக்கிறதாகவும், சடங்காசாரமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது, அதுவும் அதனுடைய ஸ்தாபனங்களின் மகா ஆழங்களுக்குள் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறது. “நாம் சபையைச் சேர்ந்திருக்கும் காலம் வரையில், தேவையானது எல்லாம் அவ்வளவு தான். நீங்கள் மறுபடியும் பிறந்து தான் ஆக வேண்டும். நீங்கள் அந்த ஆவியைக் கொண்டிருக்கத் தான் வேண்டும். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபடி, அந்தக் கிரியைகளையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், மற்றவைகளையும் நீங்கள் கொண்டிருந்தாக வேண்டும். அங்கு தான் சபையானது குளிர்ந்து கொண்டிருக்கிறது. நான் அதற்கு விரோதமாக எவ்வளவு தான் பிரசங்கம் பண்ணினாலும் காரியமில்லை. நான் நின்றுகொண்டு, ஸ்திரீகள் குட்டையான உடைகளை அணியக்கூடாது என்றும், ஸ்திரீகள் தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக் (bob) கூடாது என்றும் நான் கூற முடியும்; அவர்கள் எப்படியும் அதைச் செய்வார்கள். பெந்தெகோஸ்தே சபைகள் மகத்தான பெரிய காரியங்களில் பணத்தை வைக்கிறார்கள் என்றும், புதுப்பாணி நாகரிக நடை, உடை பாவனைகளையும் (fashion), பெற்றுக்கொண்டு வருகிறார்கள் என்றும், ஸ்தாபித்துக் கொண்டு வருகிறார்கள் என்றும், மற்ற சபைகள் செய்வது போன்று, அந்த மற்ற காரியங்களைச் செய்வதை நிறுத்தி வருகிறார்கள் என்றும் நான் கூறலாம், அது அவர்கள் முன்பாக விழுந்துவிடும். அவர்கள் எப்படியும் அதைச் செய்யத்தான் போகிறார்கள். அவர் அதைச் செய்வார் என்று தேவன் சொல்லியிருக்கிறார்.
28ஆனால் நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்றால், அவர்களிடமிருந்து குலுக்கி, பிடுங்கி, பலமாக இழுப்பது தான். நான் இன்று கூட்டத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் ஒரு சிறு பையனின் மேல் விழுந்து, அங்கே வந்து, ஒரு பிரெஞ்சு மொழியில் பேசினார், பிரெஞ்சு மொழியின் ஒரு வார்த்தையும் அவனுக்குத் தெரியாதிருந்தது. ஒரு மனிதனும் எழுந்து நிற்க, வியாக்கியானம் தெரியவில்லை , அவர்களில் இரண்டு பேர் (ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையில் (U.N.) மொழிபெயர்ப்பாளராக இருந்து வந்தார்), உரத்த சத்தமாகப் பேசினார்கள், பரிசுத்த ஆவியானவர் பேசி, போய் இந்த வேலையைச் செய்யும்படியாக பரிசுத்த ஆவியானவர் தான் அனுப்பினார் என்றும், அதற்கு விசுவாசமுள்ளவனாகத் தரித்திருக்கும்படியாகவும், அந்தக் காரியம் என்னவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் இதனோடு தரித்திருக்கும்படியாகவும் உறுதிப்படுத்தினார். அவர் அதை ஒருவர்... வாசித்துக் கொண்டிருப்பார்கள். பாருங்கள், சரியாக பெந்தெகோஸ்தே ஜனங்கள் மத்தியிலேயே காண்பிக்கப்பட்டது. ஆம், ஐயா. சகோதரனே, கவனம் செலுத்து. நீ கன்மலைக்கு விரைவாக ஓடிப்போய்விடு. அடைக்கல வீட்டுக்கு வந்துவிடு. “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடி, பத்திரமாக இருப்பான்.” பாபிலோனின் மகத்தான மதில்கள் இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
29இந்தியாவில் சம்பவித்தது போன்று, நீங்கள் அங்கே பூமி அதிர்ச்சியைக் கொண்டிருந்த போது, வெறுமனே அந்த வருடத்திலேயே நான் உள்ளே சென்றேன் என்று நினைக்கிறேன், அது ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முன்பு. நான் செய்தித்தாளை எடுத்தேன், அது ஆங்கில செய்தித்தாள். அதில், பூமி அதிர்ச்சி நின்றுவிட்டது என்று நினைக்கிறேன்“ என்று போடப்பட்டிருந்தது. உங்களெல்லாருக்கும் இங்கே இருப்பது போன்று, இந்தியாவில், அவர்களுக்கு அருமையான வேலிகளும் மற்றும் காரியங்களும் கிடையாது. அவர்கள் பாறைகளை தூக்கி, வேலிகளை (சுவர்களை) உண்டாக்குகிறார்கள். மிருகங்கள் அங்கே சுற்றிலும் அந்த சாயங்கால நிழலில் நின்று கொண்டிருக்கும். சிறு பறவைகள் அங்கே உள்ளே சென்று, தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. ஒருநாள் அந்தச் சிறு பறவைகள் எல்லாம் பறந்து சென்று விட்டதைக் கண்டார்கள், அவைகள் தூரமாகப் போய்க் கொண்டிருந்தன. ஆடுமாடுகளும் உள்ளே வராமல், மதில்களைச் சுற்றிலும், மற்ற இடங்களிலும் நின்று கொண்டிருந்தன. அவைகள் வெளியே வயலின் நடுவில் போய், சூரிய வெயிலில் ஒன்றோடொன்று சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தன. என்ன விஷயம் என்று அவர்கள் வியப்படைந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மகா பூமி அதிர்ச்சி அந்த இடத்தை குலுக்கி, அந்த மதில்களை அசைத்து கீழே தள்ளியது (shook down). என்ன சம்பவித்தது? எல்லா சிறிய பறவைகளும், அவைகள் அங்கேயிருந்த அந்தச் சிறு ஒதுக்கிடங்களில் இருந்திருக்குமானால், அவைகள் கொல்லப்பட்டிருக்கும். அந்தப் பெரிய கல் வேலிகளின் கீழாகவும், மதில்களின் கீழாகவும் நின்றிருந்திருக்குமானால், அது அவைகள் மேல் விழுந்து, அவைகளைக் கொன்று போட்டிருக்கும். அது என்னவாக இருந்தது? உள்ளுணர்வின் மூலமாக, பூமியதிர்ச்சி வருகிறது என்று அவைகள் அறிந்து கொள்ளும்படி தேவன் செய்தார், அவைகளும் பாதுகாப்புக்காக வேகமாகத் தப்பி ஓடிப்போய் விட்டன. தேவன் பேழைக்குள் அவைகளை அழைத்த அதே தேவன் தான், மதிலை விட்டுத் தூரமாக வரும்படி அவைகளை அழைத்தார். அவர் தேவனாகவே இருக்கிறார்.
30நல்லது அப்படியானால், தேவன் உள்ளுணர்வின் மூலமாக, வரும் கடுங்கோபத்திற்குத் தப்பி ஓடும்படியாக ஒரு பசுவையோ, ஒரு குதிரையையோ, ஒரு ஆட்டையோ, ஒரு பறவையையோ உபயோகிக்கக் கூடுமானால், இந்தப் பழைய பெரிய பாபிலோன் மதில்களை விட்டு தப்பித்து, இயேசு கிறிஸ்துவிடம் வேகமாக ஓடி வருவது தான் நல்லது, ஏனென்றால் இந்நாட்களில் ஒன்றில் அவள் நொறுங்கி விழப் போகிறாள். அங்கே கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் மலையிலிருந்து, பெயர்ந்து, பாபிலோனுக்குள் உருண்டு வந்து, எங்கே போனதோ, அவ்வாறு அதை தகர்த்துவிட்டது. இந்த உலகத்தின் இராஜ்யங்கள் நிச்சயமாகவே விழுந்து போகும். மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு இராஜ்யமும் மூழ்கித்தான் போக வேண்டும், அப்போது தான் தேவனுடைய இராஜ்யம் சட்டப்படியான உரிமையை (right of way) எடுத்துக்கொள்ள முடியும். மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு ஸ்தாபனமும் விழுந்து, தூள் தூளாக நொறுங்கிப் போய்விடும், பரிசுத்த ஆவியின் வல்லமையானது சபையை எடுத்து, மேலேயுள்ள அந்த பரத்திலுள்ள ஸ்தலத்திற்குள் அதை எடுத்துக்கொள்ளப்படுதலில் கொண்டு செல்லும். அது சரியே ஆம், ஐயா. அவர்கள்... தேவன் தமது ஜனங்களை வெளியே அழைத்துக் கொண்டிருக்கும் போது, எல்லாமே அதனுடைய நோக்கத்திற்காக கிரியை செய்திருக்கிறது. கைகளால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து வந்த கல்லானது, உள்ளே உருண்டு வந்து, பாபிலோனை இடிந்து விழும்படி செய்து கொண்டிருக்கிறது (crashing down), அதை நின்றுபோகும்படி செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பெரிய மதில்களை விட்டு, தப்பித்துக்கொள், நண்பனே. இயேசு கிறிஸ்துவுக்குள் வந்துவிடு. பாதுகாப்பாகவோ, அல்லது அடைக்கலமாகவோ இருப்பதாக எனக்குத் தெரிந்த ஒரே இடம் அதுதான்.
31நாம் அங்கே காண்கிறோம், அவன் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்பினார் என்பதை ஆபிரகாம் கண்டுகொண்ட போது, அவர் அவனை ஆசீர்வதித்து, அவனுடைய பெயரையும், சாராளுடைய பெயரையும் மாற்றி, இது சம்பவிக்கப் போகிறது என்ற நிச்சயமான வாக்குத்தத்தத்தை அவர்களுக்குக் கொடுத்தார். அதன்பிறகு நாம் அவனைக் கண்டுகொள்கிறோம், அது 18ம் அதிகாரத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன். அவன் வெளியே வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல் நிலத்திலோ (field), அந்த வனாந்தரத்தில் எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதை நாம் கண்டுகொள்கிறோம், அது கடினமான அனுபவமாக இருந்தது.
என்னே. ஓ, அது ஏன் எனக்குள்ளே தொடர்ந்து பொங்கிக்கொண்டு வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் மன்னித்துக்கொள்ளுங்கள். வேண்டாம், என்னை மன்னிக்க வேண்டாம். இப்பொழுது, அது - அது தவறாக உள்ளது. சகோதரர்களே, அது ஏன் இருக்கிறது? சமீபத்தில் நான் இங்கே நின்று கொண்டிருந்து, ஒரு பெரிய கூட்டம் அருமையான பெந்தெகோஸ்தே மனிதர்களிடம் சென்றேன். நான், “நீங்கள் தவறான சாட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எப்போதுமே தேவன் எப்படியாக உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார், என்றும், எத்தனை பெரிய காரியங்கள் உங்களிடம் இருக்கின்றன என்பதைக் குறித்தும், எத்தனை காடிலாக் கார்கள் உங்களுக்கு சொந்தமாக இருக்க முடிகிறது என்பதைக் குறித்தும், மேலும் அதைப்போன்ற எல்லாவற்றைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். முதலாவது பெந்தெகோஸ்தே எப்படி இருந்ததோ அதிலிருந்து இது நிறைய வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்கிருந்த எல்லாவற்றையும் விற்று, அதைத் தரித்திரருக்குக் கொடுத்து, வெளியே போய், சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். எங்கேயோ ஏதோ தவறுள்ளது” என்று கூறினேன். அது முற்றிலும் சரியே.
அங்கே ஒரு மனிதர் எழுந்து நின்று, அவர், “சகோதரன் பிரன்ஹாமே, அந்த ஜனங்கள் எப்பொழுதாவது செய்த மிகப்பெரிய தவறு அதுதான்” என்றார். நாங்கள் ஜமெய்க்காவில் இருந்தோம். இங்கேயிருக்கும் யாருக்காவது, சகோதரன் போன மோர் அவர்களே, உமக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சகோதரன்.... என்று எனக்குத் தெரியவில்லை . ஆமாம், அந்த இரவில் அங்கே வெளியே என்னோடு கூட இருந்தீர்கள்.
நான், “தேவன் தவறு செய்கிறார் என்று நீங்கள் நினைப்பதாக என்னிடம் கூற வருகிறீரா? தேவன் எந்தத் தவறுமே செய்வதில்லை. தேவனால் வழிநடத்தப்படும் ஒரு மனிதன், அவர்கள் அதைச் செய்யும்படியாக தேவனாலே வழிநடத்தப்பட்டார்கள்” என்றேன்.
32அவர், “அதன்பிறகு உபத்திரவம் நேரிட்டபோது, அவர்களுக்குப் போக எந்த வீடுமே இல்லாதிருந்ததே. அதுதான் தவறு என்று நீர் நினைக்கிறீர் என்று ஊகிக்கிறேன்” என்று கூறினார்.
நான், “உமக்கு அவமானம். அதற்கு மேல் அதிகமாக உமக்குத் தெரியவில்லை, நீர் பெந்தெகோஸ்தேவில் கொண்டிருக்கும் காலம் வரையில், அதைக் காட்டிலும் உமக்கு தேவனைக் குறித்து அதிகம் தெரியாது. செய்ய வேண்டுமென்று சரியாக அதைத் தான் தேவன் கொண்டிருந்தார். அவர்களுக்குத் திரும்பிப் போக எதுவுமே இல்லாதிருந்தது; அவர்கள் எல்லாவிடங்களிலும் சென்று தேசம் எங்கும் செய்தியை பரப்பினார்கள். தேவன் தாம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார்” என்று சொன்னேன். அவர்கள் நடத்தப்படுகிறவர்களாகவே இருக்க விடுங்கள், நிச்சயமாக. தேவன் எந்தத் தவறுகளும் செய்வதேயில்லை. தவறுகளைச் செய்வது நீங்களும் நானும் தான். தேவன் அதைச் செய்வது கிடையாது. நீங்கள் ஆவியினால் வழிநடத்தப்படுவதை உணர்ந்தால், தொடர்ந்து போங்கள், தொடர்ந்து செல்லுங்கள், அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டே இருங்கள்.
33இதோ ஆபிரகாம், அவன் சோதோமில் இருக்கவில்லை, எவ்வளவாக அவனால் அங்கு போக முடியும் என்றும் பார்க்கவில்லை. அவனோ அங்கு மேலே தேவனுக்குக் கீழ்ப்படிகிறவனாக (அடங்கி நடக்கிறவனாக), இடத்தில் இருந்தான். அநேகமாக திருமதி.லோத்துக்கு இருந்த புதிய உடைகள் சாராளுக்கு இல்லாதிருந்தது. அவள் எல்லா புதுப்பாணியிலான நாகரிக நடை, உடை பாவனைகளை தொடர்ந்து செய்கிறவளாக இருக்கவில்லை. இருப்பினும் அவளைப் போன்று அழகுள்ள ஒரு பெண்ணும் அந்த தேசத்தில் இருக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள். அவள் ஒரு தாயாக இருந்தாள், அதோடு அவள் தன்னுடைய கணவனை நன்கு நேசித்தாள், அவள் தன்னுடைய உடைகளை இறுக்கமாக அணிந்து கொண்டு, வெளியே வீதியில் சென்று, திருமதி. லோத்தின் நவீன (நாகரிக வழியிலும் அதைப்போன்ற காரியங்களிலும் நடந்து கொண்டிருக்கவில்லை. அவள் தன்னுடைய சொந்த கணவனை ஆண்டவனே என்று அழைத்தாள். வேதாகமம், “நீங்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருக்கும் காலம் வரை, நீங்கள் அவளுக்கு குமாரத்திகளாய் இருப்பீர்கள்” என்று கூறுகிறது. அது சரியே.
அங்கே தான் அவள் இருந்தாள். அங்கே வெளியில் அவர்களை நாம் காண்கிறோம். நேரம் மோசமாக இருந்தது, மந்தைகள் குறைந்து கொண்டே வந்தன. எல்லாமே.... இருப்பதாக காணப்பட்டன. ஆனால் ஆபிரகாமோ வாக்குத்தத்தத்தில் உறுதியாக இருந்தான். ஆமென். அங்குதான் நாம் தவறு செய்கிறோம், சகோதரனே. தவறு செய்வது நம்முடைய ஸ்தாபனங்கள் அல்ல; ஸ்தாபனத்திலுள்ள நாம் தான் தவறு செய்கிறோம். புரிகிறதா? நீங்கள் - நீங்கள் வாக்குத்தத்தத்தில் உறுதியாக நிற்கும் காலம் வரையில், அதெல்லாம் சரியாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் இந்தக் காரியங்களுக்குள் வரும்போது, நீங்கள் வெற்றாசாரமுறையாக ஆகத் தொடங்கி, மற்ற உலகத்தாரைப் போன்று நடந்து கொள்ள விரும்புகிறீர்கள். அந்தக் காரணத்தினால் தான் தேவன் அதை விட்டுத் தூரமாக நடந்து போய் விடுகிறார்.
நான் அங்கே ஐக்கிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய வரலாற்றாசிரியர்களில் ஒருவருடைய முகத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் உங்களிடம் கூறுகிறேன் - சகோதரன் பால் பாயிட் அவர்கள் சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு காரியத்தை உம்மிடம் கூறுகிறேன், எப்பொழுதாவது ஒரு சபை ஒரு ஸ்தாபனத்திற்குள் வந்த போது, அது விழுந்து போகாமல் இருந்ததா என்றும் ஒருபோதும் மறுபடி எழும்பாமல் போனதா என்று சரித்திரத்தில் ஒரு இடத்தையாவது நீங்கள் எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம். அதைக் கண்டுபிடியுங்கள்: ஒருபோதும் அது மறுபடியும் எழும்பினதேயில்லை, அது மீண்டும் ஒருபோதும் எழும்பவும் செய்யாது. அது தேவனுடைய சித்தம் அல்ல. நாம் அடுத்த வாரத்தில் அதன்பேரில் வருவோம்.
34கவனியுங்கள், ஆனால் இப்பொழுது நாம் ஆபிரகாமோடு மேலும் தொடர்ந்து செல்கையில். ஆபிரகாம் அந்த தேசத்திலேயே தங்கிவாழ்ந்து வந்தான்; எங்கே தங்கியிருக்க வேண்டுமென்று தேவன் அவனிடம் கூறினாரோ சரியாக அங்கேயே அவன் தங்கியிருந்தான். அவன் அங்கேயே தங்கியிருக்கும் காலம் வரையில், தேவன் அவனோடு கூட இருந்தார். அவன் அந்த தேசத்தை விட்டு வெளியே போன போது, ஒரு சாபம் அவன் மேல் வந்தது. நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விட்டுத் தூரமாக அகன்று போன உடனே, தொல்லையில் சிக்கிக்கொள்ள ஆயத்தமாகிவிடுங்கள். அது முற்றிலும் சரியே.
இப்பொழுது, அவன் ஒருநாள் அங்கே வெளியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை நாம் கண்டுகொள்கிறோம். நாம் இதை ஒரு சிறு நாடகமாகக் கொடுப்போம், அப்போது இங்கேயிருக்கும் இந்தச் சிறு பிள்ளைகள் அதை தெளிவாகக் கேட்க முடியும். இப்பொழுது, ஆபிரகாம் ஒரு காலையில் கூடார வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அங்கே அவனுடைய இடத்திற்கு முன்பு, ஒரு பெரிய சிந்தூர மரம் (oak tree) இருந்தது. அந்த கருவாலி மரம் (oak) இன்னும் அங்கே நிற்பதாக அவர்கள் உரிமை கோருகிறார்கள். அவர்கள் அதை பாதுகாக்கப்பட்ட இடமாக (preserved) வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். நல்லது, அங்கே தான் அவன் தன்னுடைய கூடாரத்தை அடித்திருந்தான், அங்கே வெளியே வனாந்தரத்தில்... லோத்துவோ அங்கே கீழே இருந்தான், என்னே, அவர்கள் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை உடையவர்களாக இருந்தார்கள் என்று ஊகிக்கிறேன், அவன் புகைப்பிடிப்பதற்கான ஒரு பெரிய சுருட்டை (cigar) வைத்திருந்தான், மேலும் அவன் அந்தப் பட்டணத்தின் பெரு நகராண்மைக் கழகத் தலைவராக (mayor) இருந்தான், உங்களுக்குத் தெரியும். திருமதி. லோத்தும் அவளுடைய குமாரத்திகளும் மற்றும் அவர்கள் எல்லாருமே புதுப்பாணி நாகரிக நடை, உடை பாவனைகள் கண்காட்சிகள் (fashion shows) நடக்கும் பல இடங்களுக்குப் போய்க்கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், அந்நாட்களின் பாணிகளுக்குப் (styles) பின்னால் ஒப்பனை செய்து (அழகுபடுத்திக் கொண்டும், இருந்தார்கள். ஆனால் சாராளோ உண்மையாக நின்றாள்; ஆபிரகாமும் உண்மையாக நின்றான்; அவர்கள் தேவனோடு தரித்திருந்து, அங்கே வெளியில் தங்கியிருந்தார்கள்.
35இப்பொழுது, என்ன சம்பவித்தது? ஒருநாள் ஆபிரகாம் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில், ஏறக்குறைய பகல் பதினொரு மணியளவில், நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவன் அங்கே அதனூடாக ஏறி வந்து கொண்டிருப்பவர்களை நோக்கிப் பார்க்கிறான், இதோ மூன்று மனிதர்கள், தங்கள் வஸ்திரங்கள் முழுவதும் தூசி படிந்தவர்களாக, நெடுக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதைக் குறித்து ஏதோவொன்று உள்ளது என்று உங்களுக்குத் தெரியும், நீங்கள் முழுவதுமாக ஜெபித்து முடித்துவிடாமல் இருப்பீர்களானால் (prayed up), தேவனுடைய ஆசீர்வாதமானது சரியாக உங்கள் பக்கத்திலேயே கடந்து போக முடிந்தாலும், அதை அறியாமலே இருப்பீர்கள். நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன், முழுவதும் ஜெபித்து முடித்து விடுதல் (prayed up).
சமீபத்தில் ஐயர்லாந்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு சிறு ஐரிஸ் பெண்மணி அங்கே இருந்தாள், அவள் ஒரு கப்பலில் இருந்ததாக அவர்கள் கூறினார்கள் மேலும் அவள்... ஏறக்குறைய அந்நேரத்தில், ஓ , அவர்கள் ஏறக்குறைய நியூயார்க்குக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு பெரிய கடும் புயலானது அந்த சமுத்திரத்தின் குறுக்கே வீசியடித்தது, கப்பலானது இக்கட்டில் இருக்கிறது என்ற சமிக்சையையும் (SOS's) வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள், அதுவோ தண்ணீரில் தலைகீழாகப் பாய்ந்து இடத்திற்கிடம் மூழ்கிக் கொண்டேயிருந்தது. அப்போது இசைக் கருவிகளை இசைக்கும் கூட்டம் இசைத்துக் கொண்டிருந்தது; அவர்களால் முடிந்த எல்லா ராக் - அன் - ரோல்களையும், மற்றும் அதைப் போன்ற எல்லாவற்றையும் அவர்கள் இசைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொடங்கினார்கள் - இசைக்குழு இசைக்கத் தொடங்கினது.... அப்போது கப்பல் தலைவன் (Captain), “எல்லாரும் ஜெபம் பண்ணுங்கள்; நீங்கள் உங்கள் சபையில் ஜெபிக்கிற விதமாக எல்லாரும் ஜெபம் பண்ணுங்கள்” என்றான். உடனே பாண்டு இசைக் கருவிகள் 'உம்மண்டை , என் தேவனே என்று இசைக்கத் தொடங்கினது. அவர்கள் எல்லாரும் அவ்வாறு செய்யத் தொடங்கிளார்கள்.
36ஒரு சிறு ஐரிஸ் பெண்மணியோ தரையில் மேலும் கீழும் நடக்கத் தொடங்கினாள். அந்த கேப்டன், “நம்மால் மாத்திரம் இந்தப் புயலுக்கு முப்பது நிமிடங்கள் தாக்குப்பிடிக்கக் கூடுமானால், நாம் துறைமுகத்திற்குள் வந்து, நங்கூரத்தை போடுவோம். ஆனால் நம்மால் முப்பது நிமிடங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், நாம் கடலின் அடியில் இருப்போம் என்றான்.
அந்தச் சிறு ஐரிஸ் பெண்மணியோ, “தேவனுக்கு மகிமை. அல்லேலூயா” என்றாள்.
எனவே கப்பல் தலைவன் (Captain) மேலே நடந்து வந்து, “சீமாட்டியே, நான் என்ன சொன்னேன் என்று புரிந்ததா?” என்று கேட்டான். அவன்…
அவள், “நீர் சொன்னது எனக்குத் தெளிவாகப் புரிந்தது, ஐயா” என்று சொன்னாள்.
அவன், “நம்மால் இந்தப் புயலில் முப்பது நிமிடங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், இப்பொழுதிலிருந்து முப்பது நிமிடங்களில் நாம் கடலின் கீழே இருக்கலாம் என்று தான் சொன்னேன் என்றான்.
அதற்கு, “நீர் என்ன அர்த்தத்தில் (சொன்னீர்) என்பது எனக்குப் புரிந்தது. அல்லேலூயா. தேவனுக்கு துதி உண்டாவதாக என்றாள்.
“நீங்கள் ஏன் ஜெபிக்கவில்லை?” என்று கேட்டான்.
அதற்கு அவள், “நான் முழுவதும் ஜெபித்து முடித்து விட்டேன் (prayed up). இனியும் ஜெபிக்க வேண்டியதில்லை. நான் துவக்க முதலே முழுவதும் ஜெபித்து முடித்து விட்டேன் (prayed up)” என்று கூறினாள்.
நல்லது, “நீங்கள் கடலின் அடியில் இருக்கலாம் என்று அறிந்திருந்தும், நீங்கள் ஏன் அவ்விதமாக அல்லேலூயா என்று கூற முடிந்தது? என்று கேட்டான்.
அதற்கு அவள், “ஐயா, நான் நியூயார்க்கில் வசிக்கும் என்னுடைய ஒரு மகளைக் காண, ஐயர்லாந்திலிருந்து வரும் என்னுடைய பாதையில் இருக்கிறேன். எனக்கு ஒரு மகள் மகிமையில் இருக்கிறாள், ஒருவள் நியூயார்க்கில் இருக்கிறாள். நான் கீழே போவேன் என்றால், அங்கே மேலேயிருக்கும் ஒரு மகளைக் காண்பேன். நாம் கரையைப் பிடித்து (land) விட்டோம் என்றால், அங்கேயிருக்கும் ஒரு மகளைக் காண்பேன்” என்றாள். அது சரியே. முற்றிலுமாக ஜெபித்து முடித்து விடுதல் (Prayed up)... ஆமென். தரித்திருப்பதற்கான வழி அதுதான், முழுவதும் ஜெபிப்பது. அதற்காக ஆத்தமாகுங்கள். அவள் முப்பது நிமிடங்களில் அவர்களில் ஒருத்தியை சந்திக்கப் போகிறாள். அது.... என்று அவள் அறிந்திருந்தாள். அங்கே மேலேயோ அல்லது இங்கே கீழேயோ, அது எந்த வித்தியாசத்தையும் அவளுக்கு ஏற்படுத்தவில்லை, அது செய்தது - அவள் முப்பது நிமிடங்களில் அவர்களில் ஒருவளைக் காணப் போகிறாள். இப்பொழுது, அது நல்லது, அது அருமையானது. சபையானது எல்லா நேரமும் அந்தவிதமாகத்தான் இருக்க வேண்டும், முழுவதும் ஜெபித்து முடித்து விடுதல் (prayed up).
37ஆபிரகாம் முழுவதுமாக ஜெபித்து முடித்து விட்டு, அங்கு வெளியே உட்கார்ந்திருந்தான். ஒருக்கால் லோத்து அங்கே கீழே இருந்து, அங்கே அந்த வனாந்தரத்திலே என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அறியாதிருந்தான். ஆனால் ஆபிரகாம் நோக்கிப் பார்த்தபோது, அது சற்று வினோதமாக காணப்படுவதை அவன் அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணமாக, அங்கே வெளியே அதன் முன்பாக நடந்து வந்து கொண்டிருந்த அந்த மனிதரைக் குறித்து ஏதோவொன்றிருந்தது. ஓ, என்னே. வினோதமாக தோற்றமளிக்கும் மனிதர்.... அவன் ஓடிச்சென்றான், நீங்கள் கவனிப்பீர்களானால், முதல் முதல் காரியத்திலேயே அவன், “என்...'' என்றான். அவன், ”என் ஆண்டவன்மார்களே“ என்று கூறவில்லை. ஷரிவ்போர்ட்டில், அன்றொரு இரவு அந்த கருத்துக்குறிப்பைக் கூறின அந்த யூத சகோதரனோடு நான் நிச்சயமாகவே முரண்படுகிறேன். ”என் ஆண்டவன்மார்களே“ என்று அவன் கூறவில்லை, ஆனால், என் ஆண்ட வரே (My Lord)” என்று தான் கூறினான், ஆ-ண்-ட-வரே, ஒருவர். என் (பெரிய எழுத்து) ஆ-ண்-ட-வ-ரே, நீர் உள்ளே வர மாட்டீரா.“ இப்பொழுது, உங்களில் யாராவது அங்கு மொழிபெயர்ப்பாளரைக் கவனித்துப் பாருங்கள், அது ஏலோகிம் என்பதாக இருந்தது, ஆபிரகாம் அவரை அழைத்தான்.... அவரை உள்ளே அழைத்து வந்தான். ”நீர் உள்ளே வந்து உட்கார மாட்டீரா. நான் போய் உமக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து, உம்முடைய கால்களைக் கழுவுகிறேன். துணிக்கை அப்பமும் (morsel of bread) எடுத்துக்கொள்ளும். அதன்பிறகு நீர்... உமது - உமது வாஞ்சையைத் தீர்த்துக்கொள்ளும், பிறகு நீர் எங்கு போக வேண்டுமானாலும் அங்கே போகலாம்“ என்று கூறிவிட்டு, அவன் அதனூடாக நழுவிச் சென்று, சாராளே, சாராளே, ஸ்ஸ். யாரோ ஒருவர் அங்கே வெளியில் இருக்கிறார். மிக சீக்கிரமாக கொஞ்சம் மாவையோ, அல்லது சோள மாவையோ (cornmeal) ஆயத்தம் செய்” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
38எத்தனை பேர் எப்பொழுதாவது மா அரிக்கும் அரிதட்டை (சல்லடையைப் பார்த்திருக்கிறீர்கள்? எந்த ஸ்திரீயாவது.... நல்லது, நீங்கள் கென்டக்கியின் எந்த பாகத்திலிருந்து வருகிறீர்கள்? நான் வழக்கமாக அம்மா அந்தப் பழைய சல்லடையை வைத்திருப்பார்கள், அவர்கள் மேலே மாவு பீப்பாய்க்கு ஏறிச்சென்று, ஒரு பாலடைக்கட்டி பிரப்பங்கூடை போன்றும் மற்றும் அடிப்புறத்தில் திரை கம்பி (screen wire) இருப்பது போன்ற ஒரு சிறிய வட்டமான காரியத்தை வைத்திருந்து, இவ்விதமாக அதை தோய்ப்பார்கள், அங்கே உள்ளே அவர்களிடம் ஒரு பழைய செருகு கட்டை இருந்தது; அந்தப் பழைய மாவு ஈரமாக இருக்கும்போது, அவர்கள் பெரிய அளவு கட்டிகளை அதனூடாக தேய்த்துக்கொண்டே இருப்பார்கள். அது செய்யப்படுவதை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா?
உங்களுக்குத் தெரியும், சூட்டில் வாட்டப்பட்ட காப்பி கொட்டைகளை அரைத்து பொடியாக்கும் ஒரு கருவியை (coffee mill) நான் அன்றொரு நாள் என்னுடைய மனைவிக்கு வாங்கினேன், அவைகளில் ஒன்றானது நீங்களாகவே அரைத்துக் கொள்ளும் விதத்தில் உள்ளது. ஏன், நான் ஒரு சிறு பையனாக இருந்தது முதற்கொண்டு, அதில் ) ஒன்றையும் அரைத்தது கிடையாது. நான் - நான் வழக்கமாக விளக்கு மேற்கூட்டை (light chimney) சுத்தம் செய்வதற்கும், உங்களுக்குத் தெரியும், பெரிய பழைய நிலாவோடு அங்கே உள்ளே சென்று, அந்த விளக்கு சிம்னியின் மேல் owl, உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதா? நான் என்னுடைய கரங்களை அதிவேகமாக கீழே கொண்டு சென்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டியிருந்தது....
39ஆபிரகாம் அதனூடாக ஓடிச்சென்று, “சொல்லுகிறேன், சரியாக இந்த மாவில் கொஞ்சம் எடுத்து - பிசைந்து, அதை ஆயத்தப்படுத்து; கணப்படுப்பில் வைத்து, கொஞ்சம் இனியப்பங்களைச் (cakes) செய்” என்று கூறுவதைக் காண்கிறேன். அவனோ வெளியில் சென்று, கன்றுக்குட்டியை பிடித்து, சமைக்கும்படிக்கு (குழம்பு செய்யும்படிக்கு) ஒரு வேலைக்காரன் அவனுக்கு இருந்தான். பிறகு அவன் வெளியே வந்து, இந்த மனிதர்களுக்கு ஆகாரம் கொடுத்தான். இப்பொழுது, அவர்கள் அந்நியர்கள் போன்று, வேறொரு தேசத்திலிருந்து வந்தவர்கள் போன்று நடந்து கொண்டார்கள். அவர்கள் அப்படியே அதனூடாக கடந்து சென்று கொண்டிருந்தார்கள். இந்நிலையில் ஆபிரகாமுக்கு ஒருக்கால் பழைய ஈக்கள் இருக்கும் புதர்செடி (fly bush) இருந்ததையும், அது அங்கே வெளியில் இருந்ததையும் நான் கற்பனை செய்து பார்க்கிறேன், உங்களுக்குத் தெரியும், இருட்டான பிறகு “சூ” என்று குரலெழுப்பி வெருட்டுவது... ஈக்கள் இருக்கும் புதர்செடி (fly bush) என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? இப்பொழுது, கென்டக்கியர்கள் இங்கேயிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆம், ஐயா. விருந்தினர்கள் வரும்போது, நாங்கள் அவர்களை அங்கு வெளியே உட்கார வைத்து, அந்தப் பழைய ஈக்கள் இருக்கும் புதர்செடியை (fly bush) எடுத்து, நான் அங்கேயே நிற்க வேண்டியிருந்தது என் நினைவுக்கு வருகிறது, என்னுடைய பரிதாபமாக கையானது அப்படியே ஏறக்குறைய அவ்விதமாக முறிந்தே போகும், அம்மா சமைத்துக் கொண்டிருக்கையில், நான் அந்த ஈக்களை “சூ” என்று குரலெழுப்பி விரட்டியபடி இருப்பேன், அதன்பிறகு அந்த அடுப்பண்டையில் நின்று வியர்வையைத் துடைக்க வேண்டியிருந்தது, அந்த ஈக்கள் இருக்கும் புதர்செடியோடு (fly bush), உங்களுக்குத் தெரியும், இவ்விதமாக தொடர்ந்து செய்து கொண்டிருப்பது, அப்போதுதான் ஈக்கள் நாங்கள் சாப்பிடும் இடத்தைச் சுற்றிலும் வராது. நாங்கள் ஏழைகளாக வளர்ந்தோம். ஆகையால், வெண்ணெயையும் பாலேட்டையும் எடுத்து, அதை கீழேயிருக்கும் பால் சேமித்து வைக்கப்படும் சிறிய உப அமைப்பில் (milk house) வைப்போம், அல்லது பால் சேமித்து வைக்கப்படும் சிறிய உப அமைப்பு (milk house) அல்ல, ஆனால் ஒரு சிறிய பழைய இடத்தில் வைத்து, அங்கே கீழே அங்குமிங்கும் குலுக்கி (spring), மட்கலத்தின் மேல் மூடி வைப்போம், உங்களுக்குத் தெரியும், அப்பொழுது பாலானது ஆகிவிடும் - பாலாடையானது ஏறக்குறைய அவ்வளவு ஆழமாக ஆகிவிடும். நான் அநேக நேரங்களில், அவர்கள் அதை சேமிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, உள்ளே நழுவிச் சென்று, அதில் ஒரு டம்ளர் எடுப்பேன். ஓ, என்ன, அது நன்றாக இருந்தது.
40இப்பொழுது, ஆபிரகாம் இந்த ஆகாரத்தை அங்கு வெளியே எடுத்துக்கொண்டு வந்து, அந்த மனிதர்களுக்கு முன்பாக வைத்தான், அவர்கள் புசித்தார்கள். இப்பொழுது, அவர்கள் எதற்காக பிரயாணம் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க ஆபிரகாம் ஆவல் கொண்டவனாக இருந்தான், ஏனென்றால் அங்கேயிருந்த அவர்களில் ஒருவர், அந்த மிக முக்கியமான ஒருவர் தேவன் என்று அவன் அறிந்திருந்தான். அது தேவன் தான் என்று அவன் அறிந்திருந்தான், அவன் அவரை ஏலோகிம் என்று அழைத்தான். எனவே இப்பொழுது, அது எதை குறித்துக்காட்டினது?
அவர்களில் இரண்டு பேர் எழுந்து, சோதோமுக்குள் இறங்கிப் போவதை நாம் கண்டுகொள்கிறோம். அவர்கள் அங்கே பிரசங்கம் பண்ணும்படியாக இறங்கிச் சென்றார்கள், வெளியே அழைக்கப்பட (வேண்டியவர்களை) வெளியே அழைக்கும்படியாகப் போனார்கள். அவன் அங்கே இறங்கிச் சென்று, பிரசங்கம் பண்ணத் தொடங்கின போது, அவர்கள் அநேக அற்புதங்களைச் செய்யாமல் அவர்களை குருடாக அடித்தார்கள் என்பதை நாம் காண்கிறோம். சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுதல் குருடாக அடித்துப் போடுகிறது. ஆனால் அங்கே…
41இப்பொழுது, எப்போதுமே நியாயத்தீர்ப்பில் மூன்று வகைப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மணவாட்டி கிறிஸ்துவோடு கூட திரும்பி வருகிறாள் என்று தானியேலில் நாம் கண்டுகொள்கிறோம். ஆதிகாலத்து நாட்களோடு கோடாகோடி பேர் வந்தார்கள். நியாயசங்கம் உட்கார்ந்தது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டது, வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அதுதான் ஜீவ புஸ்தகம் (Book of Life). பாருங்கள் நித்திரை செய்யும் கன்னிகை நியாயத்தீர்ப்புக்காக மேலே வருகிறாள். தேவபக்தியற்றவர்களுடைய ஒரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அவர் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாட்டை வேறுபிரித்தார், ஆனால் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையானது அவரோடு கூட திரும்பி வருகிறது.
இயேசு மூன்று தடவைகள் வருகிறார். அவர் முதலாவது தமது மணவாட்டியை மீட்டுக் கொள்ள வந்தார். இரண்டாவது முறை அவர் அவளைக் கொண்டு செல்ல (catch Her away) வருகிறார். மூன்றாவது முறை அவளோடு கூட வருகிறார். அவருடைய மணவாட்டியை மீட்டுக்கொள்ளவும், அவருடைய மணவாட்டியைப் பெற்றுக்கொள்ளவும், அவரையும் அவருடைய மணவாட்டியையும் இராஜாவும் இராணியுமாக, திரும்ப பூமியின் மேல் கொண்டு வந்து, அவருடைய பிதாவாகிய, தாவீதின் சிங்காசனத்தின் மேல் உட்கார வைக்கிறார்.
42இப்பொழுதும், எல்லா நேரத்திலுமே அங்கே மூன்று வகைப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். நாம் இன்றும் அதைக் கவனிக்கிறோம். அங்கே லூத்தரன்களும், மெதோடிஸ்டுகளும், பெந்தெகோஸ்தேகாரர்களும் இருந்திருக்கிறார்கள். அங்கே பாவிகளும், தேவபக்தியற்றவர்களும், நித்திரை செய்யும் கன்னிகையும், உண்மையான கன்னிகையும் இருக்கிறார்கள். எப்போதுமே அவ்வாறு உள்ளது. இப்பொழுது, அங்கே சோதோமியர்கள் இருந்தார்கள் என்றும், அங்கே லோத்து இருந்தான் என்றும், வெதுவெதுப்பான (lukewarm - அரைமனதுடைய, அரைகுறை ஆர்வமுடைய) சபை, இங்கே அவர்களை விட்டு தன்னை வேறுபிரித்து, தனியாக (apart - சேராமல், பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த ஆபிரகாம் இருந்தான் என்றும் நாம் கண்டுகொள்கிறோம். இப்பொழுது, “சபை” என்ற அந்த தனிப்பட்ட வார்த்தைக்கு வேறுபிரித்தல் (separation)“ என்று அர்த்தம்.
இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திற்குள் வருவது மட்டுமாக அவர்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்தார்கள், அவர்கள் வெளியே அழைக்கப்பட்டிருந்த போது, அவர்கள் தேவனுடைய சபையாக இருந்தார்கள். “சபை” என்பதற்கு வெளியே அழைக்கப்பட்டு, வேறுபிரிக்கப்பட்டு, ஒரு பிரத்தியேகமான நோக்கத்திற்காக ஒதுக்கி வைத்தல்“ என்று அர்த்தம். ஆபிரகாம் தெரிந்துகொள்ளப்பட்ட சபையாக இருந்தான். லோத்து நித்திரை செய்யும் கன்னிகையாக அல்லது சடங்காசார சபையாக (formal church) இருந்தான். அதன்பிறகு அங்கே சோதோமியராகிய (Sodomite) பாவிகள் இருந்தார்கள்.
43இப்பொழுது, கவனியுங்கள், சோதோமியரும், அங்கேயிருந்த சம்பிரதாய சடங்கைக் கொண்டவர்களும், லோத்து தன்னுடைய சம்பிரதாய நிலையில் இருந்தான்... இப்பொழுது, அவன் ஒரு நல்ல மனிதன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . “அந்தப் பட்டணத்தினுடைய பாவங்கள் அவனுடைய நீதியுள்ள ஆத்துமாவை வாதித்தன (vexed - எரிச்சலுட்டின, கண்டதும் வெறுப்படையச் செய்தன, கோபமூட்டின, வெறுப்பூட்டின, தொல்லை கொடுத்தன - மொழிபெயர்ப்பாளர்)” ஆனால் அங்கே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அழைக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட சபை இருந்தது, அவனுக்கு 75 வயதாக இருந்த போதே அவன் அழைக்கப்பட்டு, அவனுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது, நிச்சயமாகவே அது இருக்கும் என்று கூறும்படியாக சோதனையை அனுமதிக்கும்படியாக. அவன் அதை உறுதியாக நிச்சயப்படுத்திக்கொள்ளும் நிலைக்கு இங்கே சற்று அதிகத் தூரமாக நாம் புரிந்து கொள்ளும் வரையில் காத்திருந்தான். சரி. அவன் கொண்டிருக்கப் போகிற அந்தப் பிள்ளையைக் குறித்து அவனிடம் கூறினார். ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் தடுமாறிக் கொண்டிருக்கவில்லை. எத்தனை கூடுதல் டாலர்கள் இங்கே வைக்கப்பட்டிருந்தாலும், அவனால் சோதோமில் எவ்வளவு பணக்காரனாக இருந்திருக்க முடிந்திருந்தாலும், அவனால் என்ன செய்ய முடிந்திருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் தேவனோடு கூட தரித்திருந்து, வாக்குத்தத்தத்தை பற்றிப்பிடித்துக் கொண்டான். அதுதான் தெரிந்து கொள்ளப்பட்ட சபை. அவர்களில் சிலர் மெதோடிஸ்டுகளிலும், சிலர் பாப்டிஸ்டுகளிலும், சிலர் பெந்தெகோஸ்தேகாரர்களிலும் இருக்கிறார்கள். தெரிந்து கொள்ளப்பட்ட சபையானது எல்லா குழுக்களிலிருந்தும் வெளியே அழைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அது சரியே. அந்த சத்தத்திற்கு செவிகொடுக்கிற ஒன்று அதுதான்.
44இயேசு வந்த போது, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவர்கள் ஏன் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை? அது மிகவும் காலதாமதமாகும் வரையில் அவர்கள் ஒருபோதும் அதை அடையாளம் கண்டுகொள்ளவேயில்லை. எலியா தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. ஏன், அவனை கேலிபண்ணும்படியாக, அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்பினார்கள், அவனை அந்தப் பிள்ளைகள் வழுக்கைத் தலையனே என்று அழைத்தார்கள், ஏனென்றால் அவன் ஒரு சிறு பையனாக இருந்த போதே அவன் தலை வழுக்கையாக போய்விட்டது. அவர்களுக்கு எதுவுமே தெரியாதிருந்தது. அவன் ஏதாவது தீர்க்கதரிசியாக இருந்தானா என்பதையும் அவர்கள் நம்பவில்லை. நிச்சயமாகவே அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் அதை விசுவாசிப்பதில்லை. இயேசு, “நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் -நீங்கள் தீர்க்கதரிசிகளின் சுவர்களை பளபளப்பாக்குகிறீர்கள், அவர்களை அங்கே உள்ளே வைத்தது நீங்கள் தான் என்று கூறவில்லையா.
எரேமியாவையோ, ஏசாயாவையோ, தீர்க்கதரிசிகளில் எவரையும் கவனித்துப் பாருங்கள். அதெல்லாம் முடிந்து போகும் மட்டுமாக அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளவேயில்லை. யோவான் வந்த போது, என்ன... என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. 'உரைக்கப்பட்டிருந்த எலியா அவன் தான் என்று இயேசு தாமே கூறினார். தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள், யோவான் தான் அந்த எலியா என்று சீஷர்களும் கூட அறிந்திருக்கவில்லை . இயேசு வந்தபோதும், அவர் இயேசு என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை , அவர் தான் கிறிஸ்து என்று அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்களோ, “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கின்றன. அவர்கள் தான் அதை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
45நாம் தொடர்ந்து வருவோம், பரிசுத்த பாட்ரிக். அவரை ஒரு கத்தோலிக்கர் என்று அழைக்கிற கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள், அதற்கான சரித்திரத்தை காட்டும்படி விரும்புகிறேன். அவர் ஒரு கத்தோலிக்கர் அல்ல; அவர் ரோமாபுரியின் பிஷப்பை எதிர்த்தார். அது முற்றிலும் சரியே. அவருடைய பள்ளியானது மேலே வடக்கு ஐயர்லாந்தில் உள்ளது. அந்த ஒரு மனித ஆட்சி அதிகாரத்தை அவர் நம்பவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய ஆளுகையையே அவர் நம்பினார். ஆம், ஐயா. அவரும் கூட பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், அந்நிய பாஷைகளில் பேசுவதையும், ஆவியில் வல்லமையையும் விசுவாசித்தார். பரிசுத்த - பரிசுத்த.... நான் என்ன கூற முயற்சித்தேன்? கொலம்பாவும் அதே காரியத்தையே விசுவாசித்தார். பரிசுத்த மார்டினும், ஐரினேயஸ் - ம் அதே காரியத்தையே விசுவாசித்தார்கள் அவர்கள் எல்லாருமே தேவனுடைய வல்லமையிலும், தெய்வீக சுகமளித்தலிலும், பரிசுத்த ஆவியானரின் வல்லமையிலும் விசுவாசம் வைத்திருந்தார்கள். அந்த முற்காலத்து பரிசுத்தவான்கள் எல்லாருமே…
அதன்பிறகு வெற்றாசாரமுறையை உடையவர்களாக, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்க விரும்பின ஒரு கூட்டம் பிஷப்மார்கள் அவர்களுக்கு இருந்தார்கள், அவர்கள் அந்த சபையை ஸ்தாபித்துக் கொண்டார்கள், கதம்பத்திரளான பாவத்தையும், சபை மூடநம்பிக்கைகள் சிலவற்றையும் அவர்கள் ஒன்றாகச் சேர்த்து தங்களுடைய ஸ்தாபனத்தை உண்டாக்கினார்கள். அதிலிருந்து தான் தாய் ஸ்தாபனம் வந்தது. அதிலிருந்து தான், மற்ற ஒவ்வொன்றுமே சரியாக அதிலிருந்து தான் வந்தன. வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தை வாசித்து, அது அவ்வாறு இல்லையா என்று பாருங்கள். தாய் வேசியாகவும், அவளுடைய குமாரத்திகள் வேசிகளாகவும் இருந்தார்கள். ஒரு வேசியைத் (whore) தவிர விலைமகள் (harlot) என்பது என்ன, அதே காரியம் தான். எது அதை உண்டாக்குகிறது? உண்மையான தகப்பனுக்கு விரோதமாக, உண்மையான புருஷனுக்கு (true Husband) விரோதமாக ஆவிக்குரிய வேசித்தனம் செய்து, மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசங்களையும், கோட்பாடுகளையும், ஏற்றுக்கொண்டு, ஜனங்களை எடுத்து, சடங்காசாரங்களைப் பெற்றுக்கொண்டு, ஒரு பழைய சடங்காசார ஆராதனைக்குள் அவர்களைக் கொண்டு வருதல். நாம் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிறோம், அவ்வண்ணமாக அவ்விதம் செய்பவர்களையே தேவன் தேடுகிறார். ஆமாம். நிச்சயமாக அதுதான்.
46இப்பொழுது, ஆபிரகாம், ஆபிரகாம் அதனோடு தொடர்பு கொள்ளாமல் விலகி இருந்தான் என்பதை நாம் கண்டுகொள்கிறோம்; அவன் தெரிந்து கொள்ளப்பட்டு, வெளியே அழைக்கப்பட்ட சபையாக இருந்தான். மேலும், மாம்ச சரீரத்தில் இருந்த அந்த மனிதரை ஞாபகம் கொள்ளுங்கள், அந்த மனிதர் கன்றுக்குட்டியின் மாம்சத்தைப் புசித்தார். அவர் பசுவின் பாலைக் குடித்தார். அவர் அவனுடைய அப்பத்தைக் குடித்தார் மேலும் ஆனால் - அப்பத்தைப் புசித்து, அதன்மேல் வெண்ணெயை கொண்டிருந்தார், அவர் பசுவின் பாலைப் பருகினார். ஆபிரகாம் அவரை தேவன் என்று அழைத்தான். கவனியுங்கள் - எடுத்துக்கொள்ளுங்கள்..... மொழிபெயர்ப்பாளர்களைக் (translators) கவனித்து, அதைத் தேடி, அது சரிதானா என்று கண்டுபிடியுங்கள். ஏலோகிம், தேவன். இப்பொழுது, இது ஏதோவொன்றை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும், நீங்கள் அதை திட்டமாகப் பார்க்கவிடும்படி, நாம் விரும்பும் ஏதோவொன்றாக இருந்தது என்பதையும் நீங்கள் கவனிக்க விரும்புகிறேன்.
இப்பொழுது, கவனியுங்கள், அதன் பிறகு இரண்டு மனுஷர்கள் இறங்கிச் சென்ற போது, அந்தப் பிரசங்கிமார்கள் பிரசங்கம் பண்ணும்படியாக இறங்கிச் சென்றார்கள் என்பதைக் கண்டுகொள்கிறோம், சோதோமில் பிரசங்கம் பண்ணும்படி, இரண்டு தூதர்கள் இறங்கிப் போனார்கள்... அவர்கள் ஒருபோதும் இதையோ, இந்தக் காரியத்தையோ, அவர்கள் அங்கே இறங்கிச் சென்று, தங்கள் அடையாளத்தைக் காண்பித்திருந்த இந்த அடையாளத்தையோ செய்யவில்லை, அவர்கள் அவர்களை வெளியே கொண்டு வரும்படிக்கே வந்தார்கள். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சபை பெற்றிருந்த அதே அடையாளம் அதுவாக இருக்கவில்லை. தெரிந்து கொள்ளப்பட்ட சபையோ வேறொரு அடையாளத்தைப் பெற்றது. மேலும் இப்பொழுது, அங்கே வெளியே இருந்த சபை எதைப் பெற்றது என்பதைக் கவனியுங்கள். தெரிந்து கொள்ளப்பட்ட சபையோடு பின்னால் தங்கியிருந்த அந்த ஒருவர். அவர் என்ன பேசிக் கொண்டிருந்தார் என்பது ஞாபகம் இருக்கிறதா? அவர், “ஆபிரகாமே...” என்றார். தேவன் அவனுக்குக் கொடுத்திருந்த அவனுடைய புதிய பெயரைக்கொண்டு அவனை அழைத்தார். “ஆபிரகாமே, சாராள் (சா-ரா-ள், அவளுடைய புதிய பெயர்) எங்கே ?” ஏன், அவர்களுக்கு அதைக் கொடுத்த அந்த ஒருவர் அவர் தான். ஆமாம்.
47யாரோ ஒருவர் சொன்னார், நான் அநேக நேரங்களில் இந்த விவரத்தைக் கூறியிருக்கிறேன், அவர், “சகோதரன் பிரன்ஹாமே, அந்த மனிதர் தேவனாக இருந்தார் என்று விசுவாசிக்கிறீரா?” என்று கேட்டார்.
நான், “அது தேவன் என்று வேதாகமம் கூறுகிறது” என்றேன். பாருங்கள்? அவர் தேவனாக இருந்தார். அவர் சிருஷ்டிகராக இருந்தார். அவருக்கு விருப்பமான எதையும் அவரால் செய்ய முடிந்தது. அவர் கொஞ்சம், பெட்ரோலியத்தையும், காஸ்மிக் வெளிச்சத்தையும், கால்சியத்தையும், போட்டாஷையும் எடுத்து, “பியூ!” என்று அதற்குள் ஊதி, அந்த சரீரத்திற்குள் அடியெடுத்து வைத்து, இறங்கி வந்தார். சரியாக அந்தவிதமாகத்தான் அவர் அதைச் செய்தார். அதேவிதமாகத் தான் அங்கிருந்த தூதர்களையும் அவர் கொண்டிருந்தார். அவரால் அதே காரியத்தைச் செய்ய முடியும். நாம் எங்கிருந்து வந்தோம்? இந்த பூமியை உண்டாக்கினது யார்? பூமியானது எதிலிருந்து உண்டாக்கப்பட்டதோ, பூமியை உண்டாக்கும்படியாக அந்த பொருட்கள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தன? அவர் வெளியில் எங்கு சென்று, எங்கிருந்து இதைப் பெற்றார் என்று என்னிடம் கூறுங்கள். நாம் அமர்ந்து கொண்டிருக்கும் இந்த இதே பூமியானது தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. இந்த பிரசங்க பீடமானது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. இது வெளிப்படுத்திக்காட்டப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. தேவன் அதை உரைத்தார், அவர் ஒரு சிருஷ்டிகராக இருக்கிறார், அதை உண்டாக்குவதற்கு இங்கே இல்லாத காரியங்களைக் கொண்டே அவர் அதை உண்டாக்கினார். அவரே அதை சிருஷ்டித்தார். அவருக்கு ஒரு நோக்கம் இருந்தது, அவரால் சிருஷ்டிக்க முடியும். அவருக்கு விருப்பமான எதுவாக இருந்தாலும், அவரால் அதைச் செய்ய முடியும்; அவர் தேவனாக இருக்கிறார்.
48ஆபிரகாம் அவரை தேவன் என்று அழைத்தான். அது அவராகத்தான் இருந்தது. ஆபிரகாம் அதை அறிந்திருக்க வேண்டியிருந்தது, அவன் அவரிடம் பேசினான், அவனுடைய ஜீவிய நாட்கள் எல்லாம் அவன் அவரோடு பேசி வந்தான். அவர் யார் என்று அவன் அறிந்திருக்க வேண்டும் என்று நான் ஊகிக்கிறேன். நிச்சயமாக. “நான் உனக்குப் பண்ணின இந்த வாக்குத்தத்தத்தை நான் நிறைவேற்றப் போகிறேன்” என்று அவனிடம் கூறினார். அங்கே பின்னால் அவனிடம் பேசிக் கொண்டிருந்த அந்த ஒருவர் யார்? நான், நானே அந்த ஒருவர் என்று அவர் கூறினார். மேலும் கவனியுங்கள், அதன்பிறகு அவர், “ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?” என்று கேட்ட போது. ஆபிரகாமே, ஆபிராமே என்று அல்ல, ஆபிரகாமே.... தேவன் முந்தின அதிகாரத்தில் தான் ஆபிரகாம் என்ற அந்தப் பெயரை அவனுக்குக் கொடுத்திருந்தார். அவர்களுக்கு செய்தித்தாள்களோ, தொலைக்காட்சிகளோ மற்றும் காரியங்களோ அந்நாட்களில் கிடையாது. ஆபிரகாம் தனியாக அங்கே வெளியில் இருந்தான், அங்கே வெளியிலே, அவனும், அவனுடைய மனைவியும், அவனுடைய - அவனுடைய ஜனங்களும், அவனுடைய வேலைக்காரர்களும் இருந்தார்கள். இந்நிலையில் தேவன் அவனுக்குத் தரிசனமாகி, அவனுடைய பெயரை மாற்றினார், அந்த தூதனானவர் அவனை ஆபிரகாம் என்று தான் அழைத்தார். தேவன் சாராயின் பெயரை சாராள் என்று மாற்றி, அவளை சாராள் என்ற பெயரால் அழைத்தார். உன் மனைவி சாராள் எங்கே?“ அவன் விவாகம் ஆனவன் என்பதும் கூட அவருக்கு எப்படி தெரிந்தது? அவர் ஒரு அந்நியராய் இருக்க, அவனுடைய பெயர் ஆபிரகாம் என்று எப்படி தெரிந்தது? அவனுடைய பெயரை அவர் ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம் என்று அவர் மாற்றிவிட்டதை அவர் எவ்வாறு அறிந்திருந்தார்? அவர் சாராளின் பெயரை சாராள் என்று மாற்றி விட்டிருந்தார் என்பது, எப்படி - அல்லது சாராயின் பெயரை சாராள் என்று மாற்றி விட்டிருந்தார் என்பது அவருக்கு எப்படித் தெரிந்தது? இந்தக் காரியங்கள் அவருக்கு எப்படித் தெரிந்தது?
49அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே பின்னால், உமக்குப் பின்னாலுள்ள அந்தக் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
அவர், “ஆபிரகாமே, நான் உன்னிடம் வருகைதரப் போகிறேன்” என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் உனக்கு இந்தப் பிள்ளையைத் தரப் போகிறேன் என்று உனக்கு வாக்குப்பண்ணியிருந்தேன், நீ என்னுடைய வார்த்தையை விசுவாசித்திருக்கிறாய், இப்பொழுது, ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நான் வருகை தரப் போகிறேன, நீ இந்தக் குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாய்” (என்றார்).
சாராளோ, பின்னாலிருந்து காதில் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தவளாய் (ear-dropping), தனக்குள்ளே கூறினாள், இப்பொழுது; அவள் தனக்குள்ளே தான் அதைக் கூறினாள். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், தன்னுடைய இருதயத்தின் கீழே, “நான் வயது சென்றவளாகவும், 90 வயது பாட்டியாகவும், பெரிய, பெரிய, பெரிய கிழவியாகவும், என்னுடைய கணவனாரோ வயதானவராயும், அங்கே வெளியிலிருக்கும் என் ஆண்டவன், 100 வயதான முதியவராகவும், இருக்க எனக்கு எப்பொழுதாவது சந்தோஷம் உண்டாகுமோ, இதோ நானோ 90 வயதாக இருக்க, நான் எப்பொழுதாவது மறுபடியும் ஒரு வாலிப பெண்ணாக ஆவேனோ?” என்று (கூறினாள்.) அவள், அது வேடிக்கையாக உள்ளது“ என்று எண்ணி, நகைத்தாள்.
தூதனானவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். அது மட்டுமல்ல, ஆனால் அவர் சொன்னார், சாராள் தன்னுடைய இருதயத்தில் என்ன நினைத்தாள் என்ற அந்த வார்த்தைகளை மீண்டும் ஆபிரகாமிடம் கூறினார். அவர், அது எப்படி இருக்க முடிந்தது?“ என்று கூறினார். ஆமென். அங்கே தான் காரியம். அந்தக் கூடாரத்திற்கு நேராக தம்முடைய முதுகைத் திருப்பினவராய் உட்கார்ந்து கொண்டிருந்தார்.... அப்போது சாராள் உண்மையாகவே பயந்து போனாள். அவள் என்ன செய்திருந்தாள் என்பதைக் கண்டிருந்தாள். ”எனக்கு எப்பொழுதாவது என்னுடைய கணவரோடு எப்படி மீண்டும் இன்பம் உண்டாயிருக்க முடியும்?' என்று சாராள் ஏன் நகைத்து தன் இருதயத்திற்குள் பேசிக் கொண்டிருந்தாள்?“ ஆனால் அவருடைய வார்த்தை உறுதி செய்வதாக இருந்தது; அவர் தேவனாக இருந்தார்.
50இப்பொழுது, அது என்னவாக இருந்தது? இப்பொழுது, இயேசு அந்த அதே காரியத்தைக் குறிப்பிட்டார். அவர், “லோத்தின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரனுடைய வருகையிலும் நடக்கும்” என்று கூறினார். இப்பொழுது, கவனியுங்கள், நீங்கள் ஏன் வெளியே வந்து, ஸ்தாபனங்களின் அந்தப் பெரிய கட்டுப்பாட்டு மையங்களுக்கு (nerve centers) ஓடிப்போகக் கூடாது? ஸ்தாபனங்களின் அந்தப் கட்டுப்பாட்டு மையங்களுக்கு (nerve centers) அனுப்பவில்லையா? தெரிந்துகொள்ளப்பட்ட சபைக்கோ, அது அங்கே இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் அதை விசுவாசிக்க மாட்டார்கள். நான் இரவுநேரத்தில் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன், அன்றொரு இரவில் நான் பகுத்தறிதலைக் கொண்டிருந்த போது, மேலும் சரியாக இப்பொழுதே அதை உணருகிறேன், இங்கே உள்ளேயிருக்கும் அநேகர் அதை விசுவாசிக்க மாட்டார்கள். என்னிடம் சொல்லாதீர்கள், என்னால் உங்கள் பெயரையும் அழைக்க முடியும். அது சரியே. எது சரி என்று என்னிடம் கூற வேண்டாம். அது சரியே. உங்களுடைய வியாதியை நான் அறிவேன். நிச்சயமாகவே, சரியாக இங்கேயே உங்கள் வியாதியை தேவனால் என்னிடம் கூற முடியும். நான் அதை உணருகிறேன். அதைக் குறித்து ஒரு மாயக்காரனாக நீங்கள் ஏன் விளையாட முயற்சிக்கிறீர்கள்? உண்மையில் நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, அதுவாகத்தானே நீங்கள் இருப்பீர்கள்? ஒரு காரியம் என்னவென்றால், நீங்கள் பயப்படுகிறீர்கள். நான் உங்களைப் பழிக்கவில்லை. அதற்கு விரோதமான ஒரு வார்த்தையும் ஒருபோதும் மன்னிக்கப்படாது. ஆனால் பிரசங்கிமார்களாகிய உங்களில் சிலர் நினைக்கிறது போல, வேதவாக்கியங்கள் எந்த மறைஞானமாகவும் (mysticism) இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அது எந்த மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றலாகவும் (telepathy) இல்லை. தேவன் பாவமுள்ள உங்கள் ஆத்துமாவின் மேல் இரக்கமுள்ளவராயிருப்பாராக. உங்களுக்கு ஒரு பிரசங்க பீடம் அவசியமில்லை ; உங்களுக்கு ஒரு பலிபீடம் தான் தேவையாக இருக்கிறது. அது சரியே. தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு விரோதமான ஒரு வார்த்தையும் இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் மன்னிக்கப்படாது என்பது நினைவிருக்கட்டும். இப்பொழுது, அது நானல்ல“ என்று நீங்கள் கூறலாம். நீங்கள் யாரென்று என்னிடம் கூற வேண்டாம்; எனக்குத் தெரியும். புரிகிறதா? ஆம், ஐயா. எனவே இப்பொழுது கவனியுங்கள், நான் அப்படியே உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறேன். அது சம்பவிக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆமென்.
51கவனியுங்கள், அவர் சொன்னார்... கவனியுங்கள், அது என்னவாக இருந்தது? தேவன் மனித மாம்சத்தில் மனுஷ குமாரனுடைய வருகைக்கு சற்று முன்பாக, தேவன் மறுபடியுமாக தம்மைத்தாமே மனித மாம்சத்தில் பிரதிநிதித்துவப்படுத்துதல். எந்த மாம்சத்தில்? உங்கள் மாம்சத்திலும், என்னுடைய மாம்சத்திலும். தேவன் பரலோகத்திலிருந்து இறங்கி வருதல், தேவன் ஐக்கியங்கொள்ள ஏங்குகிறார் (ஆசைப்படுகிறார்... ஜனங்கள் எப்படியாக.... அங்கே அதைக் குறித்து அதிகமாக மனம் சார்ந்த வேதசாஸ்திரம் இருப்பது போன்று தோன்றுகிறது, நீங்கள் ஆவியானவரின் பகுத்தறிதலைப் பெற்றுக்கொள்ளத் தவறி விடுகிறீர்கள் அன்றொரு நாள் ஒரு ஆள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்று அதைக் குறித்து என்னிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்தது போன்று. பிதா என்பது பிதாவினுடைய ஒரு யுகமாக (dispensation) இருக்கிறது, அது மூன்று தேவர்கள் அல்ல, அதே தேவனின் மூன்று உத்தியோகங்களாக (offices) இருக்கின்றன. பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவி, ஒவ்வொருவரிலும் அதே தேவன் தான் (same God in each One). நீங்கள் அதற்காக எந்த நிசாயா ஆலோசனை சங்கத்தையும் (Nicene Council) கொண்டிருக்க வேண்டியதில்லை. அது தேவனாக இருக்கிறது, எப்போதுமே அதே தேவன் தான், ஒரே தேவன். அவர் பிதாத்துவத்தில் இருந்தார்; மத்தேயு, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறியதற்கு அதுதான் காரணம். மூன்று தேவர்கள் அல்ல, ஒரே தேவன் மூன்று அலுவல்களில் இருப்பது: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி, மூன்று தன்மைகள். நிச்சயமாக
52அவர் தேவனாக, யேகோவாவாக அக்கினிஸ்தம்பத்தில் இருந்தார். அவர்... யாருமே அவரைத் தொட முடியாதிருந்தது. பாவம் அவரிடமிருந்து மிகவும் தூரமாக இருந்தது; அவரால் அவர்களிடம் வர முடியாதிருந்தது. அதன்பிறகு அவர் வந்து, ஒரு கன்னிகையின் மேல் நிழலிட்டு, அவளுடைய கர்ப்பத்தில் ஒரு இரத்த உயிரணுவை சிருஷ்டித்தார். அந்தப் பிள்ளை வெளியே வந்தது, அவர் தான் இயேசு, பரிசுத்த சரீரம், அவர் புறஜாதியோ யூதரோ அல்ல, அவர் தேவனுடைய சொந்த இரத்தமாக இருந்தார். அதன்பிறகு மகத்தான பரிசுத்த ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார், அவர் ஒரு புறாவைப் போன்று தேவனுடைய ஆவியாக இருந்தார், அவர் இறங்கி, அவர்மேல் சென்று, இவர் என்னுடைய நேச குமாரன் (செவ்வையான சரியாக மொழிபெயர்ப்பு) இவருக்குள் வாசம்பண்ண பிரியமாயிருக்கிறேன். என் பிதா எனக்குள்ளே வாசம் செய்கிறார்.“ வேதப்புத்தகத்தை நன்றாக மொழிபெயர்க்கிற யாரையாவது கேட்டுப்பார்த்து, அது எபிரெய மொழியில் அவ்வாறு இல்லை என்பதைக் கண்டுபிடியுங்கள். ஆம், ஐயா. ”இவருக்குள் வாசம் செய்ய பிரியமாயிருக்கிறேன்.“ இயேசு, ”குமாரனால் தாமாகவே எதையும் செய்ய முடியாது. கிரியைகளைச் செய்வது நானல்ல, ஆனால் இம்மானுவேலாக எனக்குள்ளே வாசம்பண்ணுகிற என்னுடைய பிதாவானவரே அவைகளைச் செய்கிறார்“ என்று சொல்லியிருக்கிறார். அங்கே மேலே வேறு தேவனோ, இங்கே வேறொருவரோ, இங்கே கீழே வேறு ஒருவரோ கிடையாது; அது அஞ்ஞானி (heathen). ஒரே தேவன் மூன்று அலுவல்களில்: சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவன் இறங்கி வந்து, கிறிஸ்து இயேசுவாகிய தம்முடைய குமாரனுக்குள் வாசம் செய்கிறார். அவர் தமது ஜனங்களோடு ஐக்கியங்கொள்ளும்படி மறுபடியும் தாமாகவே கண்டுபிடிக்க முயற்சித்து தான் தமது ஜீவனைக் கொடுத்தார், திரும்பவும் பெற்றுக்கொள்ள முயற்சித்தல். யாருமே கிரயத்தை செலுத்த முடியாதிருந்தது, எல்லாருமே பாவிகளாக இருந்தார்கள். நம்முடைய பாவங்களை எடுத்து அகற்றிப்போடும்படியாக, அவருடைய சொந்த குமாரனே நமக்காகப் பாவமாக ஆனார். அதே பிதாவாகிய தேவனே, பரிசுத்த ஆவியின் வடிவத்தில் இறங்கி வந்து, நமக்குள்ளே வாச - வாசம் செய்து, அவர் சிருஷ்டித்த தமது குமாரன் (மூலமாக) அவர் கிரியை செய்தது போன்றே நம் மூலமாகவும் கிரியை செய்ய அனுமதிக்கிறார். ஆமென். அங்கு தான் உங்கள் சத்தியம் இருக்கிறது.
53நீங்கள் இங்கே பாதையின் ஒருபக்கமாகச் சென்று, உங்கள் கைவிரல்களில் ஒன்றைப் போலத்தான் தேவன் இருக்கிறார். அவரே தம்முடைய சொந்த பிதாவாக இருக்க முடியாது“ என்று கூறுகிறீர்கள். இங்கேயிருக்கும் அவர்களோ, அவர் மூன்று வித்தியாசமான தேவர்களாக இருக்கிறார்” என்பதைப் பெற்றிருக்கிறார்கள். நல்லது, அவர் மூன்று வித்தியாசமான தேவர்களாக இருப்பாரானால், பரிசுத்த ஆவியாகிய தேவனும், பிதாவாகிய தேவனும் இரண்டு வித்தியாசமான பேர்களாக இருக்கிறார்கள், பிறகு அந்தக் கன்னிகை பரிசுத்த ஆவியினாலே கர்ப்பந்தரித்தாளே. யார் அவருடைய பிதா? பரிசுத்த ஆவியாகிய ஒரே பிதா தான் அவருக்கு இருந்தார், தேவன் அதே தனித்தன்மையான ஆவியாகவே (self Spirit) இருக்கிறார். அதுவே சரியாகும். அப்படியானால் அதில்.... ஓ, அது மறைபொருளாக இல்லை . அவர் கொண்டிருந்திருந்தால்.... ஒரு மனிதன் - இரண்டு பேர் அவருடைய பிதாவாக இருந்தால், அவர் முறைதவறிப் பிறந்த பிள்ளையாக இருக்கிறார், அது உண்மையிலேயே ஆவிக்குரிய பிரகாரமாக உள்ளது. பாருங்கள், அதெல்லாமே முற்றிலுமாக சந்தேகமாகவே உள்ளது; அது ஒரு நல்ல கருத்தைப் போன்று தோன்றவில்லையே. ஒரே காரியம் என்னவென்றால், மனிதன் தங்கள் இருதயத்தை தேவனிடம் போக விடுவதற்குப் பதிலாக தங்கள் தலையைக் கொண்டு அதை முடிவுசெய்ய முயற்சி செய்கிறான், தேவன் அதை வெளிப்படுத்தும்படி நீங்கள் அவரை அனுமதித்திருந்தால், தேவன் அந்தக் காரியங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார். ஆம், ஐயா அவரே தம்முடைய சொந்த பிதாவாக இருக்க முடியாது; இயேசுவால் ஒரே இயேசுவாகவும், ஒரே தேவனாகவும், அதைப் போன்று எல்லாமாகவும் இருக்க முடியாதிருந்தது. அவர் பிதாவாகிய தேவனால் சிருஷ்டிக்கப்பட்டார். சரி. பிதாவாகிய தேவன் அவருக்குள் வாசம் செய்தார், அவர் தமது சபைக்குள் ஜீவித்து, அந்தக் கிரியைகளையும் அந்த அடையாளங்களையும் நடப்பிக்கும்படியாகவும், “கடைசி நாட்களிலே, சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரனுடைய வருகையிலும் நடக்கும்” என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ள அந்த வேதவாக்கியத்தை நிறைவேற்றும்படியாகவும், தமது சபையை பரிசுத்தமாக்கும்படிக்கும், அதே ஆவியைக் கொண்டு சுத்திகரிக்கும்படிக்கும் தம்முடைய இரத்தத்தையே பயன்படுத்தினார்.
54[ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] ? அதுதான் அதைச் செய்கிறது, வேறு யாரோ ஒருவரை புதிதாகக் கற்றுக்கொள்வது... இயேசு பேதுருவிடம் என்ன கூறினார்? “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். நீ ஒருபோதும் இதை வேதாகமக் கல்லூரியில் கற்றுக்கொள்ளவில்லை. மாம்சமும் இரத்தமும் ஒருக்காலும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என்னுடைய பிதாவானவரே இதை உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது. ஆகையால் தான் அவர் அவனிடம் அந்தத் திறவுகோலைக் கொடுத்தார். அவனுக்கு வெளிப்பாடு இருந்தது. அது வெளிப்படுத்தப்பட்ட சத்தியமாக இருக்கிறது.
ஓ, அவர்கள் தர்க்கம் செய்து கொண்டும் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டுமிருக்கிற அந்த - அந்தச் சிறிய காரியங்கள், அது தேவனுடையது அல்ல என்பதையே அது காட்டுகிறது. அல்லது அவர்கள் அவ்விதமாக தங்களைத் தாங்களே பிரித்து வைத்திருக்க மாட்டார்களே. நீங்கள் ஏன் ஒன்றாக வந்து, சகோதர சகோதரிகளாக இருக்கக் கூடாது; தேவனுடைய வல்லமையானது உங்கள் மத்தியில் கிரியை செய்யட்டும். குறிப்பிடப்பட்டுள்ள விளைபயன்களையே அது எல்லாரிடத்திலும் கொண்டிருக்கும். தேவன், பரிசுத்த ஆவியானவர் சபையின் பயிற்றாசிரியராக (Tutor) இருக்கிறார். அது சரியே. நீங்கள் அதைப்போன்ற ஏதோவொன்றைக் கற்றுக்கொள்ள உங்கள் முழு ஜீவியத்தையும் உபயோகிக்க வேண்டியதில்லை. நீங்கள் அறிந்திருக்க வேண்டிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால்,நீங்கள் இரட்சிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு - தேவனோடு வேலை செய்ய தொடங்குவது தான். நீங்கள் எதை அறிய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, அதை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
55அங்கே சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு ஞாபகார்த்தமாக (commemoration) மாம்சத்தை உண்டாக்கினார். இயேசு, “கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது; இருப்பினும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட, உலகத்தின் முடிவுபரியந்தம் (end of the consummation) உங்களுக்குள் இருப்பேன்” என்று கூறினார், வழிவழியாக உலகத்தின் முடிவுபரியந்தம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இங்கேயிருக்கிறார். அது கிறிஸ்து உங்களுக்குள் இருந்து கிரியை செய்வதாகும், நானும், நம்மில் மற்றவர்களும் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தவும், நிறைவேற்றவும், அவருடைய வார்த்தையை ஒன்று சேர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மத்தேயு 12, மத்தேயு 8-ல், அதுதான் என்று நம்புகிறேன், இயேசு எதற்காக வியாதிப்பட்டவர்களைச் சுகப்படுத்தினார்? அவர், “தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது என்று கூறினார். தேவனுடைய வார்த்தை நிறைவேறுவது அவசியமாயிருக்கிறது. இதுதான் அந்த மணிவேளை.
அவர்கள் அதை ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை அறியும் சிறப்பாற்றல் (Telepathy) என்று அழைக்கிறார்கள். அவர்கள் அங்கேயும் அதே காரியத்தைக் கொண்டு தான் அழைத்தார்கள், அவர்கள் அதை ஒரு பிசாசு என்று அழைத்தனர். அவர், “கிரியை செய்து கொண்டிருக்கும், தேவனுடைய ஆவியை அவ்விதமான ஒரு காரியமாக அழைப்பது மன்னிக்க முடியாததாக இருக்கிறது” என்று கூறினார். நீங்கள் உங்கள் தீர்மானங்களைச் செய்வதற்கு முன்பாக, நீங்கள் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன். தேவன் உறுதிப்படுத்தியிருக்கிற ஒரு புதிய ஊழியம் அங்கே இருக்கிறது, அது தேவனுடைய சத்தியமாக இருக்கிறது என்று நாம் அறிவோம். ஆனால் எவ்வாறேனும் அல்லது வேறொருவிதமாக, அது இங்கே அமெரிக்காவில் கிரியை செய்யாது. அது மற்ற இடங்களில் கிரியை செய்கிறது. இப்பொழுது, அது நமக்கு இங்கே இருப்பதைக் காட்டிலும், பெரியதாக இருக்கிறது.
ஆனால் நீங்கள் பாருங்கள், நாம் - நாம் அப்படியே நம்முடைய கிருபையின் நாளை பாவம் செய்தே கழித்துவிட்டோம் (sinned away), அங்கே அதற்கு இருப்பது எல்லாம் அவ்வளவு தான். நான் அதை 1956-ம் ஆண்டில் முன்னுரைத்தேன், அது முதற்கொண்டு, அது அந்தவிதமாகத்தான் இருந்து வருகிறது, தொடர்ந்து விழுந்து கொண்டேயிருக்கிறது. பாருங்கள்? ஆனால் தேவனோ அந்த தெரிந்து கொள்ளப்பட்ட சபையை வெளியே இழுப்பார். அவர் - அவர் அதைச் செய்ய கடமைப்பட்டுள்ளார், அவர் அதைச் செய்வதாகக் கூறியிருக்கிறார்.
56இப்பொழுது, தம்முடைய முதுகைத் திருப்பி, சாராள் எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்பதை அவளிடம் கூறின, அந்த தூதனானவரைப் பாருங்கள். அது தேவனுடைய வார்த்தையாக இல்லாதிருந்தால், அது எனக்குத் தெரியாது. எபிரெயர் 4-ல் வேதாகமம் இவ்வாறு கூறுகிறது, “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும், மனதின் சிந்தனைகளையும் கூட வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று அது கூறுகிறது. சரி. அது பகுத்தறிகிறது (discerns); அதுதான் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. நீங்கள் வார்த்தையை அனுமதிப்பீர்களானால், தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் இருக்கிறது, ஏனென்றால் அவர் வார்த்தையாக இருக்கிறார். ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது; வார்த்தையானது மாம்சமாகி, நம் மத்தியில் வாசம்பண்ணினார்.“ அது புரிகிறதா? பிறகு அந்த அதே வார்த்தை, கிறிஸ்து, வாக்குத்தத்தம், பரிசுத்த ஆவி; நீங்களோ அதை திருத்துவத்தின் மூன்றாம் நபராக அழைக்கிறீர்கள், அது அருமையானது, இவ்வாறு தான் அது இருக்கிறது, கிறிஸ்து, உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி. அவர் ஒரு காலத்தில் ஒரு அக்கினிஸ்தம்பத்தில் இருந்தார். அதன்பிறகு அவர் வந்து மாம்சமானார். இப்பொழுதோ, அவர் உங்கள் மாம்சத்திற்குள் வந்திருக்கிறார்.
அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தேவன் எளிமை கோலத்தில் இறங்கி வந்து, தம்முடைய ஜனங்களிடம் நெருக்கமாக வரும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார், எனவே அவர் நேசிக்கப்பட்டு, ஆராதிக்கப்பட முடியும். அவரை வெளியில் போகும்படியாக்கியிருக்கிற லவோதிக்கேயா காலத்தில் தான் நாம் இருக்கிறோம். அவர் கதவைத்தட்டி, திரும்ப உள்ளே முயற்சித்துக்கொண்டிருக்கிறார். “நான் நேசிக்கிறவர்களெவர்களோ, அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். நீ மனந்திரும்பு,” என்று அவர் சொல்லியிருக்கிறார். இங்கே தான் நாமிருக்கிறோம். அது தேவனாக இருக்கிறது, அது நம்மை ஆளுகை செய்ய நம்முடைய ஜீவியங்களுக்குள் திரும்பி வரும்படியாக முயற்சித்துக் கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியின் ரூபத்திலுள்ள நம்முடைய பிதாவாகிய தேவனாக இருக்கிறது. நான் கடந்த இரவு கூறியபடி, - செய்யும்படியாக, அவர் ஒரு சபையைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது, அந்த தலைக்கல் வருவது. அது அங்கே பரிபூரணமாக வந்தாக வேண்டும். சபையானது பரிபூரணத்திற்குள் இழுக்கப்பட்டாக வேண்டும். நீங்கள், “பரிபூரணமா?” என்று கேட்கலாம். அதைத் தான் அவர் சொல்லியிருக்கிறார், “பரலோகத்திலிருக்கிற என் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல (perfect), நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறார். தேவன். நாம் ஒரு கருத்தை எடுத்துக்கொள்வோம். நாம் ஒரு - எடுத்துக்கொள்வோம், நாம் இங்கே ஒரு நிமிடம் ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இதைக் கவனியுங்கள். இப்பொழுது, நான் இந்தக் காலையில் கூறிக் கொண்டிருந்தது போன்று, ஒரு திராட்சை கொடியானது தனக்குள்ளே திராட்சையின் ஜீவனைக் கொண்டிருந்தால், அது திராட்சைப்பழங்களைப் பிறப்பிக்கும்.
57இப்பொழுது, வனாந்தரத்தில் புத்திரர்களோடு சென்ற அந்த அக்கினிஸ்தம்பம், அது தேவனாக இருந்தது என்று யாரேனும் ஒருவருக்குத் தெரியுமா. அது தேவனாக இருந்தது என்று நமக்குத் தெரியும், அவர் ஆபி-மிடம் கூறினார், மோசேயிடம், “இருக்கிறவராக இருக்கிறேன் (I AM THAT I AM). என் ஜனத்தின் உபத்திரவத்தை பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற வேதனைக்குரலைக் கேட்டு, அவர்களை விடுவிக்க இறங்கி வந்திருக்கிறேன்” என்று சொன்னார். இப்பொழுது, அந்த முட்செடியில் இருந்த அந்த அக்கினிஸ்தம்பம் அதுதான் (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உடன்படிக்கையின் தூதன்) நல்லது, அது.... இருந்தது. அது அதை சீனாய்மலைக்கு வழிநடத்தி, கற்பனைகளை எழுதினது. ஒரு மிருகம் அதைத் தொட்டாலும் கூட, அது கொல்லப்பட வேண்டியிருந்தது. அது என்னவாக இருந்தது? ஏனென்றால் அங்கே எந்த பாவநிவாரணபலியும் இல்லாதிருந்தது, ஒரு மிருகம்.
58பாருங்கள், பழைய ஏற்பாட்டில், அவர்கள் ஒரு பாவநிவாரண பலியைச் செலுத்தின் போது, அவர்கள் ஒரு சிறு ஆட்டுக்குட்டியை எடுத்து, அதின்மேல் தங்கள் கைகளை வைத்து, அவர்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, அதனுடைய தொண்டையை அவர்கள் வெட்டுவார்கள். அந்தச் சிறு ஆட்டுக்குட்டி மரித்துக்கொண்டும், காலால் உதைத்துக்கொண்டும், கத்திக்கொண்டும் இருக்கும்போது, அந்த ஆராதிப்பவனின் கரங்கள் எங்கிலும் இரத்தமானது இருக்கும். அப்போது அது நேராக்கி, மரிக்கையில், மரணமானது அந்த மிருகத்தை விட்டு வெளியே போய்க் கொண்டிருப்பதை அவன் உணர்ந்து, அந்த மிருகமானது இவனுடைய ஸ்தானத்தில் மரித்துக் கொண்டிருந்தது என்பதை அவன் அறிந்து கொள்கிறான். ஆனால் அவன் உள்ளே வந்தபோது, அவனுக்கு இருந்த அதே வாஞ்சையோடு தான் அவன் வெளியே போனதாக வேதாகமம் கூறியுள்ளது. ஏனென்றால் பாருங்கள், அந்த இரத்த உயிரணுவானது உடைக்கப்பட்ட போது, அந்த மிருகத்தின் ஆவியானது திரும்பவும் வந்து, அந்த மனித ஆவியோடு ஒன்றுபட முடியாதிருந்தது. அந்த மிருகத்திற்கு எந்த ஆத்துமாவும் கிடையாது. எனவே அவைகளால் திரும்பி வர முடியாதிருந்தது. எனவே அக்காரணத்தால் அதே மனச்சாட்சியோடு தான் அவன் வெளியே போனான். ஆனால் ஒரு மனிதன் விசுவாசத்தினாலே வந்து, இயேசு கிறிஸ்துவின் தலையின் மேல் தன்னுடைய கரங்களை வைத்து, உங்களுடைய பாவங்களுக்காக அவர் பட்ட பாடுகளை உணரும்போது, அந்த இரத்த உயிரணுவானது கல்வாரியில் உடைக்கப்பட்ட போது, திரும்பி வருவது ஒரு மனிதனுடைய ஜீவன் மாத்திரம் அல்ல, ஆனால் தேவனுடைய ஜீவன் அதிலிருந்து திரும்பி வந்து, உங்களை தேவனுடைய குமாரனும் குமாரத்தியுமாக ஆக்குகிறது.
59அந்த அக்கினிஸ்தம்பமானது மாம்சமாகி நம் மத்தியில் வாசம் செய்தபோது, கவனியுங்கள். அவர் என்ன செய்தார் என்பதை, நாம் எப்படியாக அன்றொரு இரவில் கண்டுகொண்டோம்? அவர்கள் எவ்வாறு அவரை அறிந்து கொண்டார்கள், இருதயத்தின் சிந்தனைகளைப் பகுத்தறிந்ததின் மூலமாகத்தான். மோசே உரைத்திருந்த அந்த தீர்க்கதரிசி அவர் தான் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவ்வாறு அவர் உரிமை கோரினார். அதுதான் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள், அந்த விதமாகத்தான் அவர் இருந்தார். இப்பொழுது, அவர் அதற்கு மறுபடியும் திரும்பி வந்தார், நீங்கள் அதை அறிந்து கொண்டீர்களா? “ஓ, இல்லை, சகோதரன் பிரன்ஹாமே.” ஓ, ஆமாம், அவரும் கூட அவ்வாறு செய்தார்.
அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவர் சொன்னார்; அவர், நான் தேவனிடத்திலிருந்து வருகிறேன், தேவனிடத்திற்குப் போகிறேன்“ என்று கூறினார். அது சரிதானா? அவர் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து, உன்னதத்திற்கு ஏறிச்சென்ற போது... ஆராதித்துக் கொண்டிருந்த ஜனங்களை சிறையில் அடைக்கும்படியாக, தர்சுப்பட்டணத்தானாகிய சவுல் ஒருநாள் தமஸ்குவுக்குப் போகும் தன்னுடைய பாதையில் இருந்தான். சடிதியாக ஒரு மகத்தான ஒளியானது அவனுக்கு முன்பாக திடீரென பளிச்சிடவே, அவன் தரையில் விழுந்தான். அந்த மகத்தான வெளிச்சமானது மிகவும் பிரகாசமாக இருந்தது, அது சவுலின் கண்களைத் தொல்லைப்படுத்தியது; அவன் கொஞ்ச காலமாக குருடாயிருந்தான். அவர், ”சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?“ என்று கேட்டார்.
அதற்கு அவன், ஆண்டவரே, நீர் யார்?“ என்றான்.
அவர், “நான் இயேசு” என்றார். அவர் மறுபடியுமாக அந்த அக்கினிஸ்தம்பத்திற்குத் திரும்பிச் சென்று விட்டார்.
60பெந்தெகோஸ்தே சபையே, அதைக் குறித்த புகைப்படம் சரியாக நம்மிடம் இருக்கிறது. அல்லேலூயா. இப்பொழுது, அது அதே ஆவிதானா? அது அதே அக்கினிஸ்தம்பம் தானா? அமெரிக்க புலனாய்வு துறையின் (FBI)-ன் கைரேகை மற்றும் தஸ்தாவேஜ்-உடைய தலைவராகிய ஜார்ஜ் J. லேசி, நீங்கள் - அங்கே அவருடைய ஆதாரச் சான்று உள்ளது, அதன்மேல், ஒளி லென்சில் பட்டது. அதைக் குறித்து எந்த மனோசாஸ்திரமும் கிடையாது. ஏனென்றால் புகைப்படக்கருவியின் இயந்திர கண்ணானது மனோசாஸ்திரத்தை படம்பிடிக்காது“ என்று எழுதப்பட்டுள்ளது. அந்த லென்சில் பட்டது.
சரியாக இங்கே மேலே மற்றொரு இடத்தில் வேறொரு புகைப்படம் கிடைத்தது, அவைகள் சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் கிடைத்தது. அவர்களுடைய புகைப்படக்கருவிகள் (pictures) அதை எடுக்குமா என்று அவர்கள் அறிய விரும்பினார்கள். அந்த பெரிய ஜெர்மானிய புகைப்படக்கருவிகள் வெளியே கொண்டு வரப்பட்டன. நான் அங்கே நின்றுகொண்டு, “நிச்சயமாகவே, தேவன் அதை அனுமதிப்பாரானால்” என்றேன். நான் அப்போது அங்கே வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தேன், நான், “இப்பொழுது, அது வருகிறது” என்றேன். இந்த ஜெர்மானியர் அங்கே நின்றுகொண்டு, அவருடைய புகைப்படக்கருவிகளை சுழற்றிவிட்டு, அவைகளை எடுத்தார். அது எடுக்கப்பட்ட போது, பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவதை அது காண்பித்தது, அது - காண்பித்தது, தம்முடைய கழுத்துப் பட்டையை (collar) திருப்பியபடி அங்கேயிருந்த அந்த மனிதரைக் காண்பித்தது, நான் ஆவியானவராலே அவனிடம், “நீர் அங்கே ஒரு பாதிரியாரைப் போன்று நின்று கொண்டிருக்கிறீர், ஆனால் நீர் ஒரு பாதிரியார் அல்ல. நீர் ஒரு ஜெர்மானியரும் கூட இல்லை. நீர் ஒரு இத்தாலியராக இருக்கிறீர்; நீர் 20,000 கம்யூனிஸ்டுகளின் தலைவராக இருக்கிறீர். நீர் ஒரு கூட்டத்தாரோடு ஓடி வந்துவிட்டீர்; மேலே அந்த மலைகளில் உமக்கு ஒரு சிறிய அநாதை ஆசிரம இல்லம் உள்ளது. நீர் உம்முடைய காலை உணவை உட்கொள்ளவில்லை, ஏனென்றால் உமக்கு வயிற்று கோளாறு இருக்கிறது. அது கர்த்தர் உரைக்கிறதாவது. உம்முடைய காலை உணவைச் சாப்பிடும், இயேசு கிறிஸ்து உம்மைச் சுகப்படுத்துகிறார்” என்றேன். அவர் உட்கார்ந்து, தம்மால் கூடியமட்டும் வேகமாகச் சாப்பிடத் தொடங்கி, அழுது கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்த அந்தப் புகைப்படத்தை அவர்கள் எடுத்தார்கள், அது ஏறிச்சென்ற போதும், அது அபிஷேகித்துக் கொண்டிருந்த போதும், அது அங்கிருந்து போன போதும், அவர்கள் புகைப்படம் எடுத்தார்கள், சரியாக பகல் வெளிச்சத்தில் அங்கே நின்று கொண்டிருந்த போது. அது என்னவாக இருக்கிறது, மனோசாஸ்திரம் அல்ல. என்னுடைய சகோதரனே, நீ தேவனிடமிருந்து மிக மிக தூரமாகப் போய் விட்டாயா? மனோசாஸ்திரம் அல்ல, அந்தப் புகைப்படக்கருவிக்கு உங்களுக்கு தெரிவதைக் காட்டிலும் அதிகம் தெரிந்திருக்கிறது.
61இப்பொழுது, அது பரிசுத்த ஆவி தானா? நல்லது, அது இயேசு கிறிஸ்து செய்த கிரியைகளை செய்யுமானால், அது அவரின் மேலிருந்த அதே பரிசுத்த ஆவி தான். அப்படியானால், தேவனிடத்தில் விசுவாசம் கொண்டு, அது அதே பரிசுத்த ஆவி தான் என்று பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பதாக விசுவாசிக்கும் நீங்கள், உங்களால் ஐயத்துக்கு இடமின்றி முழுமனதோடு உறுதிப்பாடு கொண்டிருக்க முடியும், ஏனென்றால் அது உண்மையான தேவ குமாரன் மேல் இருந்தபோது, அது செய்த அதே காரியங்களைத் தான் செய்து கொண்டிருக்கிறது. அது புத்திரசுவிகாரத்தை (உடைய குமாரர்கள் மேலும் குமாரத்திகள் மேலும் வரும்போது, அது அங்கே செய்த அதே காரியத்தையே செய்கிறது.
ஜான் டில்லிங்கரின் ஆவியை நான் உடையவனாயிருந்தேன் என்று நான் உங்களிடம் கூறினால், நான் அவனுடைய ஆவியைக் கொண்டிருந்தால், என்னிடம் இரண்டு பெரிய துப்பாக்கிகள் இருக்குமென்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஒரு ஓவியனின் ஆவி என்னிடம் இருந்திருந்தால், அங்கே வெளியிலுள்ள அலைகளின் படங்களை நான் ஓவியமாகத் தீட்டுவேன் என்றும், அந்த அழகான அலைகளின் படத்தைப் புரிந்து கொண்டு, அவைகளை ஓவியந்தீட்டியிருப்பேன் என்றும் நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். ஒரு ஓவியனின் ஆவி என்னிடம் இருந்திருந்தால், என்னால் அதைச் செய்ய முடிந்திருக்கும். ஒரு இயந்திர வல்லுநரின் ஆவி என்னிடம் இருந்திருந்தால், என்னால் உங்கள் காரை கவனித்து, அதில் என்ன தவறு இருக்கிறது என்பதை உங்களிடம் சொல்ல முடிந்திருக்கும். கிறிஸ்துவின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன் என்று நான் உங்களிடம் கூறினால், கிறிஸ்துவின் கிரியைகளையே செய்கிறேன். உங்களால் என்னை விசுவாசிக்க முடியாவிட்டால், ஏன், கிரியைகளை விசுவாசியுங்கள். தேவன் தான் அதை அனுப்பியிருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். நான் ஸ்தாபனங்களோடும் மற்றும் காரியங்களோடும் சேர்ந்து கொள்ளாதிருக்கிற காரணத்தினால், அதற்காக நீங்கள் அதை விசுவாசிக்க விரும்ப வேண்டாம், அப்படியானால் இந்த இதே கிரியைகளை விசுவாசித்து, இரட்சிக்கப்படுங்கள். அது சரியே.
அது கடினமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன்; நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை . ஆனால் இது எதாவது ஓரிடத்தில் சொல்லப்பட்டே ஆக வேண்டும். இது சத்தியமாக இருந்தாக வேண்டும்; இதை அறியும்படி செய்துதான் ஆக வேண்டும். நியாயத்தீர்ப்பின் நாளிலே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் அங்கே உங்களைச் சந்திப்பேன். அது சாத்தியம் என்று அவர் இன்னும் உறுதிப்படுத்துவார். ஆனால் அது அவருடைய வேதாகமத்தில் உள்ளது. வானங்களும் பூமியும் ஒழிந்து போம்; என் வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது.“ ஆமென். தேவனிடம் திரும்பி வாருங்கள். அதுதான் அழைப்பாக உள்ளது. தேவனிடம் மறுபடியும் திரும்பி வாருங்கள்.
62ஆபிரகாம் அவரை ஏலோகிம் என்று அழைத்தான். அவர் தம்முடைய முதுகைத் திருப்பியிருந்தார், அப்போது தேவன் என்ன செய்தார் என்பதை உங்களுக்குக் காண்பிக்கிறார், ஏனென்றால் சரியாக இங்கே மனித மாம்சத்தில் அவனோடு வாசம்பண்ணி, அவனோடு பேசுகிற தேவனாக அது இருந்தது என்பதை ஆபிரகாம் அடையாளம் கண்டுகொண்டான். வேறு வார்த்தைகளில் (கூறினால்), இயேசு சொன்னார், அவர்... கூறினார். அங்கே கீழே சோதோமில் கர்த்தருடைய தூதனானவர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? சோதோமியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டும் (buying), கட்டிக்கொண்டும், ஓ, என்னே, நாடு முழுவதும் கட்டுமான பணி ஒப்பந்தக்காரர்களும் (contractors), கட்டிடங்களும். அப்படிப்பட்ட ஒரு நேரத்தை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? முயல் வேட்டைக்குக் கூட இனிமேல் என்னால் வீட்டிற்குப் போக முடியாது, விவசாயப் பண்ணை இருந்த இடங்கள், எல்லாமே வீட்டுவசதி திட்டங்களாக (housing projects) உள்ளன. சாப்பிடும்படி, நாம் என்ன செய்யப் போகிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை . பாருங்கள்? கட்டிடம், கட்டிடம். சரியாக இயேசு சொன்னது தான் சம்பவித்திருக்கிறது. அவர் என்ன கூறினார்? நோவாவின் காலத்தில் அவர்கள் செய்தது போல, பெண்கொண்டும், பெண்கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள். நெவாடாவிலுள்ள ரெனோவைப் பாருங்கள், மேலும் இங்கே கவனித்துப் பாருங்கள்.
63இந்த தேசமானது இது - இருந்திருக்குமானால், இது இன்னும் அதிக சாதகமான நிலையில் இருந்திருக்கும், இது ஒரு... இருந்திருந்தால். நான் அதைக் கூறாமல் இருப்பது நல்லது. சரி. ஆனால் எப்படியும்... காட்டிலும், அதற்கு மூன்று அல்லது நான்கு மனைவிமார்களை கொண்டிருப்பது நன்றாகப் படுகிறது.) வேறொரு மனிதனோடு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனைவியோடு நான் அங்கே தேவனுக்கு முன்பாக நிற்பதைக் காட்டிலும் நான் விவாகம் செய்துகொண்ட மூன்று பெண்களோடு அல்லது ஐந்து பெண்களோடு அவருக்கு முன்பாக நிற்பதையே அதிகம் விரும்புவேன்... ஆம், ஐயா. நான் தேவனுக்கு முன்பாக ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பத்தை உடையவனாய் இருந்திருப்பேன். ஒரு கிறிஸ்தவனின் கடமையை எடுத்து அதைச் செய்யும்படியாக உங்களால் பாவிகளைக் கட்டாயப்படுத்த முடியாது; அவர்கள் மறுபடியும் பிறப்பது வரையில், அவர்களால் அதைச் செய்ய முடியாது. அது சரியே. நாம் ஒரு கிறிஸ்தவ தேசமாக இருப்பதிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறோம். மூலையிலுள்ள ஒவ்வொரு கள்ளச் சாராயக் கடைகளையும் (bootleg joint) திறந்து, நாம் செய்கிற விதமாக காரியங்களை தொடர்ந்து செய்துவிட்டு, நாம் எப்படி நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்வோம்? ஒரு பன்றிக்கு ஒரு குதிரையின் ஒரே பக்கத்தில் இரண்டு கால்களையும் போட்டு அமர்ந்திருக்கும் குதிரைச்சவாரி செய்பவரைக் (sidesaddle) குறித்து தெரிந்திருப்பதைக் காட்டிலும், அதற்கு மேலும் அது கிறிஸ்தவர்கள் இல்லை. நல்லது, நீங்கள் அதை கிறிஸ்தவம் என்று அழைக்க முடியாது. நாம் எந்த கிறிஸ்தவ தேசமாகவும் இல்லை, இல்லை , ஐயா. இந்த தேசத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இது கிறிஸ்தவ தேசம் அல்ல. இங்கே உள்ளேயிருக்கும் இந்த கிறிஸ்தவர்களுக்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே உள்ளே பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.“ பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் தான் உள்ளே பிரவேசிக்கிறார்கள்.
64அரைகுறையாக இருப்பதால் என்ன பயன்? ஒரு வெதுவெதுப்பான சபையைக் கொண்டிருப்பதால் என்ன பயன்? அதிதீவிர சூடாகவோ அல்லது - அல்லது மிக அதிக கடுங்குளிராகவோ இருங்கள். நீங்கள் பெந்தெகோஸ்தேயினராக ஜீவித்தாலன்றி, பெந்தெகோஸ்தேயினர் என்று உரிமை கோர வேண்டாம். நீங்கள் வாழ்வதைக் காட்டிலும் அதிக உயரம் குதிக்க வேண்டாம். அது சரியே. அது ஒரு அவமானமாக உள்ளது; அது அவர்களில் மற்றவர்கள் மேலும் அவமானத்தைக் கொண்டுவருகிறது. அவிசுவாசிகளுக்கு தீங்காக இருப்பது அதிகமாக கள்ளச் சாராயக் கடைகள் (bootleg joint) அல்ல; ஏதோவொன்றைக் கொண்டிருப்பதாக உரிமை கோரிவிட்டு, உலகத்தைப் போன்று நடந்து கொள்ளும் ஜனங்கள் தான், அவர்கள் தான் இடற்கல்லாக (stumbling block) இருக்கிறார்கள். தேவனுக்காக கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகிற ஒரு சபையானது, நாம் அவர்களுடைய ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற காரணத்தினால், இங்கும் அங்கும் சென்று, வருகிற அதே தேவனுடைய ஆவியைக் கூப்பிட்டுக்கொண்டு, அது - அது மாயமான விஷயம் என்றும், அது மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றல் (telepathy) என்றும், அது இது, அது, அல்லது மற்ற எல்லாம் என்றும் கூறுகிறார்கள். உங்களுக்கு அவமானம். உங்களுடைய பாவமுள்ள ஆத்துமாக்களின் மேல் தேவன் இரக்கமுள்ளவராயிருப்பாராக. நீங்கள் அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே அதைச் சந்திப்பீர்கள், அநேகமாக நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு வருவதற்கு முன்பாக; அது சரியே, ஏனென்றால் தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்.
ஓ, நாம் ஒரு மிகவும் பயங்கரமான ஒரு நேரத்தில் இருக்கிறோம், நண்பர்களே. ஓ, உலகமானது மூழ்கிக் கொண்டிருக்கிறது, தேசம் மரித்துக் கொண்டிருக்கிறது.
தேசங்கள் உடைகின்றன; இஸ்ரவேலோ விழித்தெழுகிறது,
தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள்;
புறஜாதியார் நாட்கள் எண்ணப்படுகிறது,
இடுக்கண்கள் பாரப்படுத்துகின்றன;
ஓ, சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள்.
மீட்பின் நாள் நெருங்குகிறது,
மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்கின்றன;
தேவனுடைய ஆவியினால் நிறைந்து,
உங்கள் தீவட்டிகளின் திரி கத்தரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் (trimmed), துடைக்கப்பட்டதாகவும் இருக்க,
மேலே நோக்குங்கள்! உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. ஒ, நாம் என்னவொரு நாளில் வாழ்ந்து
என்னவொரு நாளில் கொண்டிருக்கிறோம். பவுல் இந்நாளில் வாழ்ந்திருப்பான் என்றால் எப்படியிருக்கும்? பெந்தெகோஸ்தே இந்த நிலையில் இருப்பதைக் காணும்படியாக, பரிசுத்த பேதுரு இந்த நாளில் ஜீவித்திருந்தால் எப்படியிருக்கும்? அவன் உங்களை உலுக்கியிருப்பான்; நிச்சயமாக அவன் செய்திருப்பான், ஏனென்றால் அவன் தனக்குள் பரிசுத்த ஆவியை உடையவனாய் இருந்தான். அவன் நிச்சயமாகவே அதைச் செய்திருப்பான்.
65இப்பொழுது, கவனியுங்கள், அந்த ஜெயங்கொள்கிறவர்களுக்கு தேவன் எதை வாக்குப்பண்ணினார் என்பதையும், ஜெயங்கொள்பவர்களுக்கு தேவன் என்ன செய்தார் என்பதையும் நான் காண்பிக்க விரும்புகிறேன். வெளியே அனுப்புவதற்கு 15 நிமிட நேரம் தான் இருக்கிறது. தேவன் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம். சரியாக அங்கே ஆபிரகாம் அதை அடையாளம் கண்டுகொண்ட போது, “ஆமாம், அது தேவன் தான் என்று சொல்லி, அவரை ஏலோகிம் என்று அழைத்தான், என் ஆண்டவரே என்று தான் அழைத்தான், என் ஆண்டவன்மார்களே என்று அழைக்கவில்லை, என் ஆண்டவரே என்று தான் அழைத்தான். ”என் ஆண்டவரே“ என்று கூறினான். பெரிய எழுத்து ஆ-ண்-ட-வ-ரே. அவன் அவரை எவ்வாறு அழைத்தான் என்பதைக் கவனியுங்கள். அவன் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அது என்னவென்று அறிந்துகொண்ட போது, அவன் அநேக, அநேக ஜனங்களின் இரக்கத்திற்காக விண்ணப்பம் பண்ணினான், கடைசியாக ஐம்பது பேரிலிருந்து பத்து பேர் வரை சென்றான், இருப்பினும் அவரால் அவ்வளவு பேர்களை சோதோமில் கண்டுபிடிக்க முடியாதிருந்தது, அல்லது அவர் மன்னித்து விட்டிருப்பார். ஆனால் அங்கே கீழேயிருந்த எல்லா சபைகளிலும் அவரால் அவ்வளவு பேரை கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அங்கே ஐந்தோ, அல்லது பத்து நேர்மையான ஜனமும் இருக்க முடியவில்லை; அவர் மூன்று பேர்களை மாத்திரமே வெளியே கொண்டு வந்தார். நான்கு பேர் இருந்தார்கள், அவர்களில் ஒருத்தி திரும்பிப் பார்த்தாள், அவள் பின்னிட்டுப் பார்த்தாள். அதுதான் அவனுடைய (லோத்தினுடைய) மனைவி. அவளுடைய அருமையான ஹாலிவுட் காரியங்களை விட்டும், அவளுடைய அருமையான இடங்களை விட்டும் போக அவளுக்கு விருப்பமில்லாதிருந்தது, அது உங்களுக்குத் தெரியும். ஆகையால் அவள் ஒரு உப்புத் தூணாக மாறினாள்.
66பின்னிட்டுப் பார்க்க வேண்டாம். “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்க திரும்புகிறவன் உழுவதற்குத் தகுதியுள்ளவன் அல்ல.” சகோதரனே, அதுதான் இந்தச் சபையில் உள்ளது. நீங்கள் கலப்பையின் மேல் உங்கள் கைகளை வைத்து, உங்களை நீங்களே பரிசுத்த ஆவியால் நிறைந்த பெந்தெகோஸ்தேகாரன் என்று அழைத்துக் கொண்டீர்கள்; உலகத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதையும், உலகத்தைப் போல நடந்துகொள்வதையும், உலகத்தைப் போன்று உங்களை மினுமினுப்பாக்குவதையும், மற்றும் இந்த விதமான காரியங்கள் எல்லாவற்றையும், உலகத்தின் காரியங்களைக் கொண்டிருப்பதையும், ஜெபக் கூட்டத்திற்கு வருவதற்குப் பதிலாக வீட்டிலே தங்கி தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்தி விடுங்கள். பாவிகள் பீடத்திற்கு வருகையில், வரும்படியாக எவரிடமிருந்தும் ஒருபோதும் ஒரு அசைவும் இல்லை, இப்போதெல்லாம் ஆர்வமே இல்லாதிருக்கிறது.
நான் உங்களுக்கு ஒரு சிறு எச்சரிப்பை விடுக்கட்டும், எசேக்கியேல் 9வது அதிகாரத்தில், வேதாகமம் இவ்வாறு கூறுகிறது. பரிசுத்த ஆவியை உடைய அடையாளம் போடுபவனிடம், “நீ நகரத்தை உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிறவர்கள் மேல் அடையாளம் போடு” என்றார். எத்தனை பேர் எப்பொழுதாவது அதை வாசித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. அவர்களைத் தவிர வேறு யாரையும் அடையாளம் இடாதே. உங்கள் விரல்களால் எண்ணிப்பார்த்து, ஒரு எடுத்துக்காட்டாக அவர்களை என்னிடம் தாருங்கள் பார்க்கலாம், இந்தப் பட்டணத்தில் செய்யப்பட்ட அருவருப்புகளினிமித்தமாக இரவும் பகலும் பெருமூச்சுவிட்டழுகிற எத்தனை பேரை இந்தக் கட்டிடத்தில் இருக்கிற யாராவது ஒருவர் காட்ட முடியும்? நான் ஒரு விரலையும் காணவில்லை . “நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தமாக பெருமூச்சுவிட்டழுகிறவர்கள் மேல் மாத்திரம் முத்திரை போடு.” அவர்களில் ஏராளமானோர் அதற்கு விரோதமாக பிரசங்கம் பண்ணவும் கூட பயப்படுகிறார்கள். அவர்களில் நிறைய பேருக்கு பயம் தான். கோழியின் மார்பெலும்புக்குப் (wishbone) பதிலாக முதுகெலும்பு (backbone - தைரியம்) உடைய மனிதர்களை தேவன் நமக்குத் தருவாராக. ஆம், ஐயா. வேறொரு யோவான்ஸ்நானகனை நமக்குத் தருவாராக. அவனை அனுப்பி, அவனைப் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணுவாராக, அது எதையும் அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும் கூறப் பயப்படாது (not pull any punches), ஆனால் அவன் வார்த்தையோடு தரித்திருப்பான். அவன் வார்த்தையோடு தரித்திருந்தால், பயப்பட மாட்டான். தேவன் தம்முடைய வார்த்தைக்கு ஆதரவு கொடுப்பார்.
நான் எல்லாவிதமான நெருக்கமான இடங்களிலும் வந்திருக்கிறேன், அங்கே பிசாசுகளும் மற்ற எல்லாமே எழும்பிக் கொண்டிருக்கும். அவர்கள் குருடாக அடிக்கப்பட்டும், அடித்து வீழ்த்தப்பட்டதையும் மற்ற எல்லாவற்றையுமே கண்டிருக்கிறேன். பயப்படாதீர்கள், சரியாக அங்கே வார்த்தையிலேயே தரித்திருந்து, தேவன் என்ன செய்கிறார் என்று கவனியுங்கள். நீங்கள் தேவனோடு சரியாகத்தான் இருக்கிறீர்களா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வார்த்தையோடு தரித்திருந்து, என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள்.
67சகோதரன் ஆர்கன் பிரைட் அவர்கள் அருகில் இருப்பாரானால், அந்தக் கதையை அவரால் உங்களிடம் கூற முடியும், சுவிட்சர்லாந்தில், அல்லது அது பிரான்ஸ் - ஜெர்மனியில் நடந்தது என்று நம்புகிறேன், எப்படியாக ஒரு பக்கத்தில் பதினைந்து மந்திரவாதிகளும் மறுபக்கத்தில் பதினைந்து மந்திரவாதிகளும் அந்தக் கூடாரத்தை வீசி அடித்துக்கொண்டு போகும்படியாக, ஒரு புயலை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூடாரத்தை காற்றினால் வீசியடித்துச் செல்லப் போவதாக இருந்தார்கள். அவர்கள் அதைச் செய்யப் போவதாக எங்களிடம் கூறினார்கள். அவர்கள் அங்கே உட்கார்ந்து, அந்த இறகுகளை வெட்டி, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி...?... பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, (என்ற) மூன்று உன்னத வார்த்தைகளை maneuvers -ஐ செய்யத் தொடங்கினார்கள், அவர்கள் அதைக் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவ்விதமாக எல்லாவற்றையும் அவர்கள் செய்ய, இதோ அந்தப் புயலும் வந்தது. அங்கே அந்தக் கூடாரத்தில் பத்தாயிரக்கணக்கான ஜனங்கள் மேலும் கீழும் குதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அதே காரியத்தை உங்களிடம் கூறுவார். நான், ”சகோதரன் ஆர்கன் பிரைட் அவர்களே, ஜெபம் பண்ணுங்கள். சகோதரன் லோஸ்டர் அவர்களே, இதை மொழிபெயர்க்க வேண்டாம். பரலோகப் பிதாவே, நான் அந்த விமானத்திலிருந்து இங்கே மேலே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இறங்கியுள்ளேன், ஏனென்றால் நீர் தான் என்னை இங்கே அனுப்பியிருக்கிறீர். நீர் என்னைப் பாதுகாத்துக்கொள்வதாக வாக்குப்பண்ணியிருக்கிறீர். இவ்விதமான ஒரு காரியத்தில் என்னால் என்ன செய்ய முடியும்? நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தப் புயலைக் கடிந்து கொள்கிறேன்“ என்றேன். ஒரு முழு விநாடி நேரத்திலேயே அந்தப் புயல் சரியாக அந்தக் கூடாரத்தின் மேலே வெவ்வேறாகப் பிரிந்து (சிதறிப்) போய், பின்னால் விலகிப் போயிற்று. இடி முழக்கமும் இவ்விதமாக குறைந்து இயல்பான நிலைக்குப் போய்விட்டது (roll back). அப்போது ஆயிரக்கணக்கானவர்கள் இரட்சிக்கப்படும்படியாக, பீடத்திற்கு வந்தார்கள். அந்த மந்திரவாதிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
68வெளியே அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த மனிதன், மற்றவர்களின் கவனத்தைக் கவரும்படியாக, அந்த மந்திரச் சொற்களில் ஒன்றை என்மேல் பிரயோகித்து, என்னை ஒரு நாயைப் போல குரைக்கும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான், அவனுக்குத் தெரியாது. அவன் அங்கே இருந்தான், நான் தொடர்ந்து அந்த வினோதமான ஆவியை உணர்ந்தேன். நான், “நான் அதை அழைப்பதை வெறுக்கிறேன், ஏனென்றால் அவன் யாரோ ஒருவருடைய நண்பனாக இருக்கிறான். இயேசு , அவைகள் ஒன்றாக வளரட்டும்; நீங்கள் களைகளைப் பிடுங்கும் போது, கோதுமையையும் பிடுங்கி விடுவீர்கள்' என்று கூறியிருக்கிறார்” என்று எண்ணினேன். நான் அவ்வாறு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன், அவனும் தொடர்ந்து அதைச் செய்து கொண்டிருந்தான். சற்று கழிந்து, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் தொடர்ந்து பேச , நான் திரும்பிப் பார்த்து, “வஞ்சகனே, யாரோ ஒருவரை ஏமாற்ற முயற்சிக்கும்படியாக, தேவனுடைய ஆராதனை நடக்கும் இந்தக் கூட்டத்திற்குள் நீ ஏன் வந்திருக்கிறாய்?” என்றேன். நான் அவனிடம் பேசிக் கொண்டிருந்தது போன்று, அவன் தொடர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க, நான், “உன்னிடம் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றேன். நான் அவனுடைய பெயரை அழைத்தேன். நான், “தேவனுடைய ஆவிக்கு நீ இதைச் செய்தபடியால், யாரோ ஒருவர் உன்னை இங்கிருந்து வெளியே கொண்டு செல்வார்” என்றேன். அவன் இன்னும் முடமாக்கப்பட்டவனாகத்தான் இருக்கிறான். அவன் எனக்கு ஒரு கடிதம் எழுதி, 'நான் கட்டாயமாக என்ன செய்ய வேண்டும்?“ என்று கேட்டான்.
அதற்கு நான், “மனந்திரும்பு” என்றேன்.
அவன், “நீர் வந்து, இதை என்னை விட்டு எடுத்துப்போடும்” என்றான்.
நான், “நான் - அது உன்மேல் வந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயே அதை உன்மேல் வருவித்துக் கொண்டாய். 'தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவனை வருத்தமுண்டாக்குவதைக் காட்டிலும், (offend - உணர்ச்சியை புண்படுத்துவதைக் காட்டிலும், சினமூட்டுவதைக் காட்டிலும், வெறுப்பூட்டுவதைக் காட்டிலும், தீங்கு செய்வதைக் காட்டிலும், அவமதிப்பதைக் காட்டிலும், ஒழுங்கு மீறுவதைக் காட்டிலும், வரம்பு கடந்து போவதைக் காட்டிலும், தவறாக நடப்பதைக் காட்டிலும், கோபமூட்டுவதைக் காட்டிலும், உள்ளத்தைப் புண்படுத்துவதைக் காட்டிலும் - தமிழாக்கியோன்), உன்னுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, நீ சமுத்தித்தின் ஆழங்களிலே அமிழ்ந்து போவது அதிக நலமாயிருக்கும்' என்று வேதாகமம் கூறுகிறது” என்றேன். அது சரியே. நாம் தேவனிடத்திலுள்ள நம்முடைய பயத்தையும் கிறிஸ்தவர்கள் பேரிலுள்ள மரியாதைகளையும் இழந்து விட்டோம். ஓ, நாம் எப்படியாக தேவனிடம் திரும்பி வந்தாக வேண்டியிருக்கிறது.
69ஆபிரகாம் தான் வார்த்தையை விசுவாசித்த காரணத்தினால், தேவன் இங்கே அவனுக்கு எதைக் காண்பித்தார் என்பதைக் கவனியுங்கள். என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். அவர் சாராளுக்கு என்ன செய்தார்? சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் அவர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும், சாராள் மற்றும் ஆபிரகாமுடைய சந்ததி எல்லாருக்கும், ஆபிரகாமுடைய சந்ததி எல்லாருக்கும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் காண்பித்தார், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைத் தான் அவர் காண்பித்தார். அவர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பிறகு உடனடியாக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள். அங்கே சோதோமுக்கு மேலே அவர்கள் பாளயம் போட்டிருந்த இடத்திலிருந்து ஒரு நீண்ட பிரயாணத்தை அவர்கள் பண்ணினார்கள், கீழே பெலிஸ்திய தேசத்திலுள்ள கேராருக்கு மொத்த தூரமும் ஏறக்குறைய 300 மைல்களாக இருந்தது. அது 100 வயதுடைய முதிர் வயதான ஒருவனுக்கும், தன்னுடைய தோளின் மேல் ஒரு சிறிய பெண்டிர் தோளணிக்கவணியை உடைய வயதான சிறு பாட்டிக்கும், நடைபயணமாக 300 மைல்கள் இவ்விதமாக நெடுக போய்க் கொண்டிருப்பது என்பது மிகவும் நீண்ட நடைபிரயாணமாக இருந்திருக்கும். அது அந்த விதமாக இருக்கவில்லை . அவர் அவர்களைத் திரும்பவும் வாலிபன் மற்றும் வாலிப பெண்ணாக மாற்றினார். என்னால் அதை நிரூபித்துக் காட்ட முடியும். அவர் அவ்வாறு மாற்றினார். அவருடைய வார்த்தையை எடுத்து, அவ்விதமாக அதைப் பற்றிக் கொண்டிருக்கும் அவருடைய சந்ததிகள் எல்லாருக்குமான ஒரு வாக்குத்தத்தமாக அது இருக்கிறது. அவர் சாராளை திரும்ப வாலிப பெண்ணாக மாற்றினார். எனவே தான் அவளால் அந்தக் குழந்தையைக் கொண்டிருக்க முடிந்தது.
70இப்பொழுது, நான் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் உங்கள் மருத்துவரைக் கேட்டுப் பாருங்கள், நான் உங்கள் சகோதரன். இப்பொழுது, பாருங்கள், அவள் அவ்வளவு வயதுடையவளாக இருந்ததால், அவர் அவளுடைய இருதயத்தை பலப்படுத்த வேண்டியிருந்தது, அல்லது அவளால் பிள்ளை பெற முடியாதிருந்து அவள் தொண்ணூறு வயதான முதியவளாக இருந்தாள். அது சரியே அவர் அவளுடைய இருதயத்தை பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டியிருந்து. அவளுடைய மார்பகங்களிலிருந்த பால் நாளங்கள் (milk veins) உலர்ந்து போயிருந்தன. அவர்களுக்கு... இல்லாதிருந்தது. அந்நாட்களில் ஸ்திரீகள் சிகரெட்டுகளைப் புகைப்பதில்லை, எனவே அவர்கள் தங்கள் மார்பகங்களைக் கொண்டு தங்கள் குழந்தையை வளர்த்தார்கள் (உங்களுக்குப் புரிகிறதா?), அவர்கள் அதற்கு பசுவின் பாலைக் கொடுக்க மாட்டார்கள். எனவே அவர்கள் - அவர்கள் - அவர்கள் தங்கள் மார்பகங்கள் மூலமாகவே அவைகளுக்கு பாலூட்ட வேண்டியிருந்தது. பால் நாளங்கள் (milk veins) உலர்ந்து போயிருந்தன. அது என்னவொரு நிலைமை என்று பாருங்கள். அவர் அவளைப் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டியிருந்தது. தேவன் பழுது பார்த்து சரி செய்ய மாட்டார், அவர் புதிதாக உண்டாக்குகிறார். சாராள் திரும்ப ஏறக்குறைய 25 வயதுடைய ஒரு அழகான பெண்ணாக மாறுவதை என்னால் காண முடிகிறது. ஆபிரகாம் ஏறக்குறைய 25 வயது அல்லது 30 வயதுடையவனாக (மாறுவதை என்னால் காண முடிகிறது. ஒருநாள் காலையில், சாராள் கூறுவதை, அவள், தூக்கத்திலிருந்து விழித்து, “தேனே, உமக்குத் தெரியுமா, அந்த கூன்முதுகு உம்முடைய தோள்களை விட்டுப் போய்விட்டது” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
அவனோ, “அன்பே, வழக்கமாக உனக்கு இருக்கிற அந்த அழகான பழுப்பு நிற கண்கள் திரும்பவும் வந்துவிட்டது. உன்னுடைய தலைமயிரானது மறுபடியும் திரும்ப (கருமை நிறமாக ஆகிக் கொண்டிருக்கிறது” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஓ, என்னே . ஆமாம்.
71இப்பொழுது, நீங்கள், “இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, சற்று பொறும், ஒரு நிமிடம் பொறும்” என்று கூறலாம். பாருங்கள்? வேதாகமமானது விசுவாசிக்கு ஒரு காதல் கதையாக இருக்கிறது. இப்பொழுது, நான் கடல் கடந்து வெளிநாடுகளுக்குப் போகும்போது, திருமதி பிரன்ஹாம், எனக்கு ஒரு கடிதம் எழுதி, அன்பான பில்லி, நான் இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்; நான் பிள்ளைகளை படுக்கையில் கிடத்த வேண்டியிருக்கிறது. நான் இப்பொழுது தான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். தேவன் உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன்“ என்று கூறுவாள். பாருங்கள், அவள் கூறிக் கொண்டிருந்தது அதுதான், ஆனால் நானோ சரியாக அந்த வரிகளுக்கு இடையே வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் அவளை நேசிக்கிறேன். புரிகிறதா? அவள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். அவள் அவை எல்லாவற்றையும் என்னிடம் கூற மாட்டாள், ஆனால், அவள் எழுதிக் கொண்டிருந்த விதத்தை வைத்து, எப்படியும் நிச்சயமாக நான் அதை அறிவேன்.
நல்லது, அந்தவிதமாகத்தான் நீங்கள் வேதாகமத்தை வாசிக்கிறீர்கள்: வரிகளுக்கு இடையில் தேவனிடம் இருக்கிறது - அந்த காரணத்தினால் தான் அவர் அதை ஞானிகளின் கண்களுக்கும் கல்விமான்களின் (prudent - புத்திசாலிகளின், செயல்நுட்பமறிந்தவர்களின், விவேகமுடையவர்களின், உலகியல் அறிவுவாய்ந்தவர்களின், அறிவுநுட்பம் வாய்ந்தவர்களின், செயலறிவுத்திறம் வாய்ந்தவர்களின் கண்களுக்கும் மறைத்து வைத்திருக்கிறார், அவர்கள், “எனக்கு ஒரு பி.எச்.டி. பட்டம், ஒரு டி.டி.டி. பட்டமும் (D.D.D.) இருக்கிறது” என்று கூறுகிறார்கள். D.D. என்பது எதைக் குறித்துக்காட்டுகிறது தெரியுமா? உயிரற்ற செய்த நாய் (Dead dog) என்பது தான். எனவே சகோதரனே, நான் உங்களுக்குக் கூறுகிறேன், என்ன - நமக்கு இன்று அது அவசியமில்லை.நமக்கு ஏதோவொருவேதசாஸ்திரம் அவசியமில்லை , ஆனால் முழங்கால் சாஸ்திரம் (kneeology) தான் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆமாம். நல்லது, வேதாகமம் அதை ஊமையான நாய் (dumb dog) என்று அழைக்கிறது, எனவே அது அப்படியே அவ்வளவு மோசமாக இருந்திருக்கும். உங்களுக்குப் புரிகிறதா? அவர்கள் ஊமையான நாய்கள் (dumb dogs), D.D'S என்று அது கூறுகிறது.
இப்பொழுது, கவனியுங்கள், அவர் அங்கே உள்ளே இருந்து, “எனக்கு இது கிடைத்தது, எனக்கு அது கிடைத்தது” என்று கூறுகிறார்.) நல்லது, அதெல்லாம் சரிதான். நான் இயேசுவைக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். பேதுருவும் யோவானும் பேதைமையுள்ளவர்களென்றும் படிப்பறியாதவர்கள் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவர்கள் இயேசுவோடு கூட இருந்திருந்தார்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அவர்களில் ஒருவருக்கும் தங்கள் பெயரையோ அல்லது எதையுமோ கையெழுத்துப் போட முடியாதிருந்தது, ஆனால் அவர்கள் இயேசுவோடு இருந்திருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்; அதைத் தான் நாம் செய்ய வேண்டும். அவர்கள் இயேசுவோடு இருந்திருந்தார்கள் என்பதை அறிவது.
72இப்பொழுது, நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, அவர் அதை ஞானிகளின் கண்களுக்கும் கல்விமான்களின் கண்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களாகிய அப்படிப்பட்ட பாலகருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே நீங்கள் இங்கே இதை வாசிக்கப் போகும் போது, இப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை உங்களுக்குக் காண்பிக்கவே அதைச் (செய்கிறார்). முதலாவது காரியம் என்னவென்றால்.... இப்பொழுது, நீங்கள், “ஓ, சகோதரன் பிரன்ஹாமே, அவர்கள் வெறுமனே...'' என்று கூறலாம். இல்லை , அவர்கள் (வயது சென்று) முதிர்ந்தவர்களாக இருந்தார்கள் என்று வேதாகமம் கூறியுள்ளது (அது சரியே), முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்.
இப்பொழுது, என்னுடைய லீகலிஸ்டு சகோதரனே, நான் மிகக் கடினமாக உன்னை வருத்தப்படுத்த விரும்பவில்லை, ஆனால் நீ - அறிய வேண்டுமென்று தான் விரும்புகிறேன், என்னால் இன்னும் வார்த்தையைக் கொண்டு சற்று நுள்ள (pinch) முடியும். பாருங்கள்? நான் உங்களுக்கு வருத்தம் உண்டாக்க விரும்பவில்லை, ஆனால் என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன்.
அவன் கேராருக்குள் இறங்கிச் செல்கிறான். அவன் அங்கு போய்ச் சேர்ந்த போது... நான் அதைக் குறித்து உங்களுடைய பக்கத்தையே எடுத்துக்கொள்ளப் போகிறேன். இதோ ஒரு சிறிய பாட்டி நெடுக வந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு கிட்டத்தட்ட 100 வயதாகிறது, சிறு தூசிபடிந்த மென்பட்டுத் தொப்பியும் (bonnet), சிறிய தோளணிக்கவணியையும் (shawl) அணிந்தவர்களாக, உங்களுக்குத் தெரியும், மெதுவாக நெடுக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அங்கே கீழே கேராரிலே அபிமெலேக் இருந்தான், அவன் ஒரு இராஜாவாயிருந்தான், அவன் ஒரு மனைவியைத் தேடிக் கொண்டிருந்தான். அந்த பெலிஸ்திய பெண்கள் எல்லாரும் அழகாயிருந்தார்கள், ஆனால் அவன் சிறிய பாட்டியைக் கண்டபோது, அவன், “இவளுக்காகத் தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
ஓ, ஆபிரகாமோ, “இப்பொழுது, நீ எனக்கு உன்னுடைய இரக்கத்தை காண்பி; நீ என்னுடைய சகோதரி என்று சொல்லிவிடு” என்று கூறினான். அவள் அவ்விதம் இருந்தாள் தான். “நீ என்னுடைய சகோதரி என்று கூறிவிடு” என்றான். ஏனென்றால், பாருங்கள், அந்த நாட்களில்.... பிரசங்கியார் சிலசமயங்களில், இதன்பேரில் பிரசங்கம் பண்ண விரும்பினால், நான் இங்கே ஒரு ஆப்பை (plug) வைக்கலாம், அவர் அதை வேதாகமத்தினூடாக அதை நீண்ட நேரம் தொடரலாம். ஞாபகம் கொள்ளுங்கள், மனிதர்கள் அவர்களுக்கு எவ்வளவு செலவு செய்து செலவைத் தாங்கிக்கொள்ள இயலுமோ அவ்வளவு அதிக மனைவிகளை கொண்டிருந்தார்கள். ஆனால் எந்தப் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் உயிரோடிருக்கும் இரண்டு கணவன்மார்கள் இருக்க முடியாதிருந்தது. தாவீதுக்கு 500 மனைவிமார்கள் இருந்தார்கள், ஆனால் அவர்களில் ஒருவரும் வேறொரு கணவனைக் கொண்டிருக்கவில்லை. நான் சரியாக இப்பொழுதே நிறுத்திவிடுவது நல்லது. பாருங்கள்? சரி. அவர்கள் மாத்திரம் அதைக் குறித்த சத்தியத்தை அறிந்திருப்பார்களானால், அது அந்தச் சபைகளை முற்றிலும் திறப்புண்டாக கிழித்துப்போட்டிருக்கும். அது சரியே.
73இப்பொழுது, என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். ஆவியானவரைப் பற்றி சில காரியங்களை தேவனால் உங்களுக்கு வெளிப்படுத்த முடியும் இடத்திற்கு நீங்கள் போவீர்களானால்.... இப்பொழுது, கவனியுங்கள். இப்பொழுது, அவன், “இப்பொழுது, அவர்கள் என்னைக் கொன்று போட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள்” என்றான். ஏனென்றால் அவன் அவளை விவாகம் பண்ணியிருக்கும் காலம் வரையில், “நீ என்னுடைய சகோதரி என்று கூறு, அது எனக்குக் கண்ணியமான பிரிவு உபசாரமாக இருக்கும்” என்று கூறினான்.
இப்பொழுது, இதோ ஆபிரகாம் அங்கே கீழே இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறான் மேலும் இதோ பாட்டியாகிய சிறிய சாராளும் போகிறாள், உங்களுக்குத் தெரியும், அவளும் கூடவே வந்து கொண்டிருக்கிறாள், அப்போது அபிமெலேக்கு , “ஓ, அதோ ஒரு அழகு, அவள் தான் எனக்கு வேண்டும்” என்றான். பாட்டி. இல்லை, அது முட்டாள்தனமாக ஒலிக்கிறது, இல்லையா? பாருங்கள்? அது அவ்வாறு இல்லை . அவள் ஒரு அழகிய பெண்ணாக இருந்தாள். நிச்சயமாக, அவள் மீண்டும் வாலிபமாக இருந்தாள். ஓ, தாயாரே, கவலைப்பட வேண்டாம், ஏதோவொரு நாளில் அது வரும். அப்படியே ஆபிரகாமின் சந்நதியாக இருக்கும், தகப்பனாரே கவனியும். அந்த விசுவாசத்தைக் கொண்டிருங்கள்; அதற்கு அதுதான் அவசியமாயிருக்கிறது. “கிறிஸ்துவுக்குள் மரித்திருக்கிற நாம், ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம்.” ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்து தான் ஆக வேண்டும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவி உங்களுக்குள் வரட்டும், அதுதான் ஆபிரகாமின் சந்ததி, அப்படியானால் அவர் உங்களை மீண்டும் உயிரோடு எழுப்புவார்.
முதுமை (Old age) என்பது ஒரு காரியத்தையும் பொருள்படுத்துவதில்லை.
74நான் இங்கே சமீபத்தில் ஒரு விஞ்ஞானத்தைக் கேட்டுப் பார்த்தேன், நான், “நீர் ஒரு காரியத்தை எனக்குக் கூறும்படி வருந்திக்கேட்கிறேன். நான் சாப்பிடுகிற ஒவ்வொரு முறையும், அது அவ்வண்ணமாக இருக்கிறதா... நான் பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டவன், அப்படியானால் நான் ஆகாரம் புசிக்கும் ஒவ்வொரு முறையும், நான் என்னுடைய ஜீவனைப் புதுப்பித்துக் கொள்கிறேனா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், அது சரியே. அது இரத்த நாளங்களை உண்டாக்குகிறது, அந்த இரத்தமானது, நீர் புசிக்கும் ஆகாரத்திலிருந்து புதிய இரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறீர், அது புதிய ஜீவனை உண்டாக்குகிறது என்று கூறினார்.
நான், உமக்குத் தெரியும், எனக்கு 16 வயதாக இருந்த போது, நான் இப்பொழுது புசிக்கிற இதே ஆகாரத்தை தான் புசித்தேன். நான் புசிக்கும் ஒவ்வொரு முறையும், நான் பெரியவனாகவும் பலம் பொருந்தியவனாகவும் ஆனேன். இப்பொழுது நான் எவ்வளவு சாப்பிட்டாலும் அது ஒரு பொருட்டல்ல, நான் வயதானவனாகவும் பலவீனமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய ஜீவனைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால், எங்கே - அதற்கு என்ன ஆனது? என்னிடம் கூறுங்கள், நான் ஒரு கூஜா தண்ணீ ரையும் ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீரையும் இங்கே வைத்திருக்கிறேன். நான் இந்தப் பெரிய கூஜாவிலிருந்து தண்ணீரை இந்தக் குவளையில் ஊற்றத் தொடங்குகிறேன், அப்போது அது நிரம்பத் தொடங்கி, பாதி நிரம்புகிறது, அப்போது நான் வேகமாக ஊற்றத் தொடங்குகிறேன், அப்போது அது எல்லா நேரமும் தொடர்ந்து கீழே தான் போய்க் கொண்டிருக்கிறது. அதை விஞ்ஞானப்பூர்வமாக எனக்கு நிரூபியுங்கள்“ என்றேன். அதை நிரூபிக்க முடியாது. என்னால் வேதாகமத்தைக் கொண்டு அதை ஆபிரகாம் நிரூபிக்க முடியும். அது ஒரு நியமனமாக (appointment) உள்ளது. அது சரியே.
75அது சரியே. தேவன் நியமித்திருக்கிறார். தகப்பனாரே, அவர் உங்களையும் தாயையும் (உம் வயதான மனைவியையும் சரியான வயதில் கண்ட போது, நீர் வாலிபமாக இருந்து, விவாகம் செய்து, சந்தோஷமாக இருந்த போது, அது நினைவிருக்கிறதா? பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பு, முதலாவது காரியம் உமக்குத் தெரியுமா, நீங்கள் எப்பொழுதும் கண்டதிலேயே அவள் மிகவும் அழகான பெண்ணாக இருந்தாள். ஓ, என்னே, அவள் அழகு வாய்ந்தவளாக இருந்ததை நீர் நினைத்துப் பார்த்தீர். அவள் எப்படியாக உம்மைக் கண்டு அதிசயித்து, நின்று கொண்டிருந்தாள், அந்த நேரான தோள்கள். சற்று கழிந்து நீர் பார்த்து, “மனைவியே (Mother), அதோ அந்த அழகான கண்களைச் சுற்றிலும் தோல் சுருக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்று கூறினீர்.
“ஆம், தகப்பனாரே, இங்கேயும் கூட தலையுச்சியில் சில நரை (மயிர்கள் தெளிவாகத் தெரியாதவிதமாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன விஷயம்? பாருங்கள், மரணமானது தொடங்கிவிட்டது. அது ஏதோவொரு நாளில் உங்களை சுற்றி அடைத்து (corner - பிடிக்கப் போகிறது. ஆனால் கவனியுங்கள், உயிர்த்தெழுதலில், மரணத்தைக் குறித்துக்காட்டும் ஒரு காரியமும் அங்கே இருக்காது. நாம் புதிதாக இருப்போம். அல்லேலூயா.
எனக்கு தலையுச்சியில் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து தலை முடிகள் மீதியாக இருக்கின்றன, நான் ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவைகளை சீப்பினால் வாரிக் கொண்டிருந்தேன், அல்லது கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவைகளை சீவிக் கொண்டிருந்தேன். என்னுடைய மனைவி, “பில்லி, என்னவென்று தெரியுமா? நீர் சற்றேறக்குறைய வழுக்கைத் தலையாக விட்டீர், தேனே” என்றாள்.
நான், “ஆனால் அந்த முடிகளில் ஒன்றையும் நான் இழக்கவில்லை ” என்று கூறினேன்.
அவள், “அப்படியானால்) அவைகள் எங்கே இருக்கின்றன என்று என்னிடம் கூறும்படி வருந்திக்கேட்கிறேன்” என்றாள்.
நான், “ஒரு நிமிடம் பொறு, அன்பே, இங்கே வா. நான் அவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு, அவைகள் எங்கே இருந்தன என்று என்னிடம் கூறு. அவைகள் ஏதோவொரு இடத்திலிருந்து வந்திருக்க வேண்டியிருந்தது. நான் அவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு, அவைகள் எங்கேயிருந்தன என்று என்னிடம் கூறு , அப்படியானால், நான் அவைகளிடம் போகும்படியாக, அவைகள் எனக்காக எங்கே காத்துக் கொண்டிருக்கின்றன என்று நான் உனக்குச் சொல்லுவேன்” என்று கூறினேன். அல்லேலூயா. என்னுடைய தேவன் ஆபிரகாமின் தேவனாக இருக்கிறார். ஆமென். உங்கள் தலையிலுள்ள ஒவ்வொரு மயிரும் எண்ணப்பட்டிருக்கிறது. எல்லா தோல் சுருக்கங்களும் நொடிப்பொழுதில் போய் விடும்; முதுமையும் மறைந்து போய்விடும் (pass away). ஓ, தேவனுக்கு மகிமை. நாம் என்றென்றுமாக ஒரு புது சிருஷ்டிப்பாக (creature) இருப்போம், அப்போது நாம் வாலிபத்தின் மையத்திலும், ஆனந்த சந்தோஷத்திலும் நின்று கொண்டிருப்போம். ஆமென். அதுதான் நம்முடைய தேவன்.
76ஓ, நான் ஒரு - ஒருக்கால் வெறுமனே ஒரு கரண்டி நிறைய உள்ள புழுதியாகவே இருக்கலாம். ஆனால் அவர் ஏதோவொரு நாளில் என்னை அழைப்பார், “பியூ! பில்லி, வெளியே வா” என்று அழைக்கப்படுவேன்.
நான், “இதோ இருக்கிறேன், ஆண்டவரே. இதோ இருக்கிறேன், தகப்பனே” என்று கூறுவேன். ஆம், ஐயா.
அவர் ஒருபோதும் வந்து, “இப்பொழுது, திரு. பிரன்ஹாம், சார்லஸ், நீயும் எல்லாவும் மறுபடியும் வில்லியமை பெற்றெடுங்கள், ஏனென்றால் அவன் என்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனாக இருந்தான்” என்று கூற மாட்டார். இல்லை, இல்லை, அவர் வெறுமனே பேசுவார், நான் அவருக்கு மறுமொழி கூறுவேன். ஆமென். அல்லேலூயா. “அல்லேலூயா” என்பதற்கு “நம்முடைய தேவனைத் துதியுங்கள்” என்று அர்த்தம். அவர் எல்லா துதிக்கும் பாத்திரர் என்று நான் நினைக்கிறேன்.
77சமீபத்தில் யாரோ ஒருவர் என்னிடம் கூறினார்... அவள் சொன்னாள். வேறொரு ஸ்தாபன சபையைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அவள், “சகோதரன் பிரன்ஹாமே, உம்முடைய ஊழியத்தில் நான் கண்டுபிடித்த ஒரே காரியம் தான் தவறாக உள்ளது” என்றாள்.
நான், “என்ன அது?” என்று கேட்டேன்.
“நீர் இயேசுவைக் குறித்து மிகவும் பெருமை அடித்துக்கொள்கிறீர்” என்றாள்.
நான், “நான் என்ன செய்கிறேன்?” என்றேன்.
“நீர் மிகவும் பெருசா பேசிக் கொள்ளுகிறீர்; நீர் அவரை தெய்வீகமானவராக ஆக்கிவிட்டீர்” என்றாள்.
அதற்கு நான், 'அவர் தெய்வீகமானவராகத் தான் இருந்தார்“ என்றேன்.
அவள், “ஓ, அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்” என்று கூறினாள்.
நான், “அவர் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவராக (more) இருந்தார்; அவர் அந்த தீர்க்கதரிசிகளின் தேவனாக இருந்தார்” என்றேன். அது சரியே.
“ஓ” அவள் சொன்னாள்... நான் எந்த மார்க்கத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை; அது கிறிஸ்தவ விஞ்ஞானத்தைச் சேர்ந்த பெண். பாருங்கள், ஏனென்றால் கூட்டத்திற்கு வருகிற அவர்களில் அநேகர் சுகமடைகிறார்கள், அதெல்லாம் சரிதான்.
78அவள், “நல்லது, அவர் - அவர் ஒரு நல்ல மனிதராகத்தான் இருந்தார்; அவர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாள்.
நான், அவர் ஒன்றில் தேவனாக இருந்தார் அல்லது உலகம் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே மிகப்பெரிய ஏமாற்றுக்காரராக இருந்திருப்பார்“ என்றேன். அவர் தாமே தேவனாக இருந்தார்.
அவர், “நான் உம்முடைய சொந்த வேதாகமத்தைக் கொண்டே நிரூபித்துக் காட்டுகிறேன். நீர் ஒரு அடிப்படைவாதி என்று சொன்னீர். அவர் ஒரு மனிதரே அல்லாமல் வேறல்ல என்று நான் உம்முடைய சொந்த வேதாகமத்தைக் கொண்டே நிரூபித்துக் காட்டுவேன் என்று கூறினாள்.
நான், “அதை நிரூபித்துக் காட்டுப் பார்க்கலாம்” என்றேன்.
அவள், “பரிசுத்த யோவான் 11ம் அதிகாரத்தில், இயேசு லாசருவின் கல்லறைக்கு இறங்கிச் சென்றபோது, அவர் அழுதார் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் உம்மைப் போன்று ஒரு மனிதர் தான் என்று அது நிரூபிக்கிறது' என்று கூறினாள்.
அதற்கு நான், “அதுதான் உன்னுடைய வேதவாக்கியமா?” என்றேன்.
அவள், “ஆம்” என்றாள்.
நான், “சகோதரியே, பட்டினி கிடந்து சாகும் தருவாயிலுள்ள கோழிக்குஞ்சைக் கொண்டு உண்டாக்கின சூப்பைக் காட்டிலும் தண்ணீராயுள்ளது. அது ஒருபோதும் நிலை நிற்காது” என்றேன்.
அவள், “நீர் அதன் மூலமாக எதை கூற வருகிறீர் (mean)?” என்று கேட்டாள்.
நான், “அவர் ஒரு மனிதரைப் போல அழுதபடி கல்லறைக்குப் போய்க் கொண்டிருந்தார். அது சரிதான். ஆனால் அவர் தம்முடைய சிறிய வளைந்த தோள்களை நிமிர்த்தி, அவைகளை ஒன்றாகக் கொண்டு வந்து, 'லாசருவே, வெளியே வா' என்று கூறின போது, மரித்து நான்கு நாட்கள் ஆன ஒரு மனிதன் தன்னுடைய காலூன்றி எழுந்து நின்று மறுபடியும் ஜீவித்தானே, அதற்கு ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானது அவசியமாயிருந்தது. ஆம், ஐயா. அது தேவனாக இருந்தது. 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.' அது ஒரு மனிதன் அல்ல, ஒரு தீர்க்கதரிசியும் அல்ல, ஆனால் தேவனாக இருந்தது. 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்' என்று தேவன் சொல்லுகிறார். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் ஒருபோதும் மரியாமலும் இருப்பான். நீ இதை விசுவாசிக்கிறாயா?' என்று கூறினார்” என்றேன்.
அதற்கு அவள், 'ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்“ என்றாள். அதுதான் அதைச் செய்கிறது, ஏதோவொன்று சம்பவித்தாக வேண்டும். ஒரு மனிதன் அல்ல, தேவன்.... .
79இப்பொழுது, ஆபிரகாமைப் பின்தொடர்ந்து செல்வோம். அவ்வண்ணமாக சாராள்... அபிமெலேக், 'உனக்குத் தெரியுமா, அதோ அந்த அழகான எபிரெய பெண் இருக்கிறாள்“ என்றான். ”அது உன்னுடைய கணவனா?“ என்று கேட்டான்.
“இல்லை, அது என்னுடைய சகோதரன்.'
அவனும், அது சரிதான், அது-அது - அது என்னுடைய சகோதரி“ என்று கூறிவிட்டான். அவள் அவனுடைய பாதிவழி சகோதரியாக (half sister) இருந்தாள்.
“நல்லது,” எனவே அவன், “நல்லது, நான் இவளை அரசமாளிகைக்கு அரண்மனைக்கு அழைத்துச் செல்வேன், நான் - இவள் என்னுடைய மனைவியாக ஆவாள், நான் உனக்கு ஏராளமான பொருட்களைத் தருவேன். பார்?” என்றான்.
“சரி.” எனவே அவன் அவளை அங்கே அழைத்துச் சென்றான். ஒரு மனிதன் அவ்விதமான ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வண்ணமாக அவன் அங்கே நடைபோட்டபடி சென்றான்…
80அவன் ஏன் - ஏன் - ஏன் அதைச் செய்தான் என்று புரிகிறதா? அவன் ஏன் உடன்பட்டான்? அவன் வாக்குத்தத்தத்திற்கு வெளியே இருந்தான். அவன் கேராருக்குப் போய் விட்டான். ஆகையால் தான் பெண்களாகிய நீங்கள் உங்கள் தலைமயிரை வெட்டுகிறீர்கள், மற்றும் முகஒப்பனைகளை (makeup) உபயோகிக்கிறீர்கள், மனிதர்களாகிய நீங்கள் சிகரெட்டுகளைப் புகைக்கிறீர்கள், மற்றும் - மற்றும் நீங்கள் செய்கிற விதமாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் வாக்குத்தத்தத்தை விட்டு வெளியே இருக்கிறீர்கள், இன்னமும் டீக்கன்மார்களாகவும், அங்கத்தினர்களாகவும் அதைப் போன்ற மற்றவர்களாகவும் தொடர்ந்து இருக்கிறீர்கள். இந்த பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், மெதோடிஸ்டுகள், பெந்தெகோஸ்தேகாரர்கள், மற்றும் அதைப் போன்றவர்களைப் போலவே; நீங்கள் சரியாக அந்த வாக்குத்தத்தத்தை விட்டு வெளியேறி விட்டீர்கள், அவ்வளவு தான். பிசாசு உங்களைத் தள்ளிவிட்டான் மற்றும் அவன்... உங்களுக்கு உரியதான (belong) இங்கேயே தங்கியிருந்து, ஜெபித்து முடித்து விடுங்கள் (prayed up). அது சரியே. பிசாசு உங்களிடம் பேசட்டும், அவனுக்கு செவிகொடுப்பது என்ப து....
81இப்பொழுது, இதோ அவன், பயந்து பயந்து பின்னாக நழுவும் துணிவு இல்லாத ஒரு சிறிய அற்பக்கோழையாக (sneaking coward) அங்கே வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தான். வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தான்.... தேவனுடைய தீர்க்கதரிசியைக் குறித்து நான் அவ்விதம் பேசினதற்காக தேவன் என்னை மன்னிப்பாராக, ஆனால் நான் இங்கே ஒரு குறிப்பிட்ட முக்கிய விஷயத்தை தெளிவுபடுத்திக்காட்டுவதற்கு தான் நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, நாம் கவனிப்போம், அபிமெலேக் (old Abimelech) அங்கே சென்றான், அவன் குளித்த பிறகு, அந்த இரவிலே, அவனுடைய தளர்த்தியான காற் சட்டையை (pajamas - பைஜாமாவை) அணிந்து, அவனுடைய ஜெபத்தைக் கூறிவிட்டு, இவ்விதமாக தன்னுடைய கால்விரல்களை நீட்டி, “ஓ, நான் கடைசியாக எனக்குத் தேவையான ஒன்றைக் கண்டுபிடித்து விட்டேன்” என்று (கூறுவதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். பிறகு அவன் படுக்கையில் படுத்து, “நாளைக்கு நான் இந்த அழகான எபிரெய பெண்ணை விவாகம் செய்து கொள்வேன்” என்றான். அவர்கள் காதணிகளைக் கொண்டும், இந்த எல்லா வகையான காரியங்களைக் கொண்டும் அவளை முழுவதும் அலங்கரித்திருந்தார்கள் (அழகுபடுத்தியிருந்தார்கள்), உங்களுக்குத் தெரியும். “ஓ, அவள் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறாள், நான் நாளைக்கு அவளை விவாகம் செய்துகொள்வேன்.” அவன் அங்கே படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கையில், கர்த்தர், “நீ செத்தவனுக்கு சமானம்” என்றார். அந்த நல்ல ஹோலினஸ் சகோதரன்.. ஆனால் அவர், “நீ செத்தவனுக்கு சமானம். அந்தப் பெண் வேறொரு மனிதனுடைய மனைவியாக இருக்கிறாள்” என்றார்.
நல்லது, அவன், “ஆண்டவரே, நீர் என்னுடைய இருதயத்தின் உத்தமத்தை அறிந்திருக்கிறீர். அவள் அதை என்னிடம் சொல்லவில்லையா?” என்று கூறினான்.
“ஆம், எனக்குத் தெரியும்.”
“அவனும் என்னிடம் சொல்லவில்லையா?”
“ஆமாம், நான் அறிவேன். ஆகையால் தான் நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடி உன்னைத் காத்துக் கொண்டேன். இப்பொழுது, அவளுடைய புருஷன் என்னுடைய தீர்க்கதரிசியாக இருக்கிறான்.” ஆமென். இப்பொழுது, நீங்கள் கிருபையைக் கவனிக்க விரும்பினால், இதைப் பாருங்கள். தன்னுடைய மனைவியைக் குறித்து பொய் பேசிக்கொண்டு அங்கே வெளியே அவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.... ஆனால் அவளுடைய புருஷன் என்னுடைய தீர்க்கதரிசியாக இருக்கிறான். நான் உன்னுடைய ஜெபங்களைக் கேட்க மாட்டேன். ஆனால் நீ அவளைத் திரும்ப (அவனிடம்) கூட்டிக்கொண்டு போ, அவன் உனக்காக ஜெபம் பண்ணுவான், அப்போது நான் உன்னை குணமாக்குவேன்.“ஓ, அல்லேலூயா. ஓ, சகோதரனே, உன்னால் அதைக் காண முடிகிறதா? ஆபிரகாமின் சந்ததி இயேசுவுக்குள்ளே நங்கூரமிட்டுள்ளது. ”அவளுடைய புருஷன் என்னுடைய தீர்க்கதரிசி.“ அங்கே தான் காரியம். ”அவனுடைய மனைவியை அவனிடமே திரும்ப கொண்டுபோய்விட்டு, அவனுக்கு வெகுமதி கொடு, அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்,“ ஏனென்றால் அவர் ஒவ்வொரு கர்ப்பத்தையும் (womb) அடைத்திருந்தார். அது சரியே. அந்த தேசம் உடனடியான மரித்துப்போய், அதிகமாக எதுவும் இருந்திருக்காது. ஆனால் அவன் விருப்பமுள்ளவனாக இருந்தான்; அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான்.
அவன் (ஆபிரகாம்) சென்று, மனைவியை எடுத்துக்கொண்டு, அவளைத் திரும்பப் பெற்றுக்கொண்டான், தேவன் அவனை ஆசீர்வதித்தார், ஆபிரகாமை ஆசீர்வதித்தார். அதன்பிறகு அவன் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவரத் தொடங்கினான், அந்தத் தூதனானவர் அவனைச் சந்தித்து, தம்முடைய முதுகைத் திருப்பியதன் மூலமாக அந்த அடையாளத்தைக் காண்பித்த அந்த இடத்திற்கே சரியாகத் திரும்பி வந்துவிட்டான். அந்த அதே தேவன் இன்றிரவும் ஜீவிக்கிறார்.
82இந்த மற்றொரு காரியத்திற்கு வர எனக்கு நேரம் இருக்கப் போவதில்லை; நான் நாளை ஞாயிறு பள்ளியில் அதற்கு வருகிறேன், இங்கேயுள்ள இந்தக் கடைசியான சிறு குறிப்புரை. என்னிடம் இருக்கிறது - 21வது அதிகாரம், 20வது அதிகாரம், 20ம் அதிகாரத்தின் கடைசி பாகம் மற்றும் 21வது அதிகாரம், இன்னுமாக சில வேதவாக்கியங்களைக் கொண்டு, (அதை) உபயோகிக்க விரும்பினேன். இப்பொழுது, நான் நாளை ஞாயிறு பள்ளியில் அதற்கு வருவேன், அவர் எப்படியாக அவனை உயர்த்தி, யேகோவா -யீரேவாக ஆனார் என்பது.
83ஓ, சகோதரனே, அந்த கர்த்தருடைய தூதனானவர் இன்றிரவு இங்கேயிருக்கிறார். அவர் உங்களுடைய மாம்சத்தில் யேகோவா தேவனாக இருக்கிறார். அவர் என்னுடைய மாம்சத்தில் யேகோவா தேவனாக இருக்கிறார். அந்த அதே தேவன் ஒருபோதும் மரிப்பதில்லை. அப்படியே அவ்வளவு நிஜமாக (real) இருக்கிறார். அதைக் குறித்த காரியம் என்னவென்றால், ஜனங்கள் அவரை அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவர்கள்.... அவர் வரும்போது, அவர்கள், “நல்லது, மிகவும் நல்லது, நான் ஊகிக்கிறேன். எல்லாம் சரியென்று தெரிகிறது, உ-ஊ. அது சரிதான் என்று நான் ஊகிக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஓ, சகோதரனே. அந்த வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இல்லை என்றால், அது தேவனுடைய வார்த்தையே அல்ல. அது உண்மையாக இல்லை என்றால், அது தேவனுடைய வார்த்தை அல்ல. ஆனால் அது உண்மையாக இருக்குமானால், அது... தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவாரானால், அது உண்மையாக இருக்கிறது. ஆமென். தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார்; நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா?
அவர் இங்கேயிருக்கிறார். அவர் இங்கேயிருக்கிறார். நான் அதைக் கர்த்தருடைய நாமத்தில் சொல்லுகிறேன். அவர் இருக்கிறாரா என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது, அவரால் ஒரு மாம்சத்தை சிருஷ்டிக்க முடிவதைப் போன்று அதேவிதமாக என்னுடைய மாம்சத்தையும் அவரால் உபயோகப்படுத்த முடியும், ஏனென்றால் எப்படியும் அவர் என்னை உண்டாக்கினாரே. அவரால் உங்கள் மாம்சத்தையும் உபயோகிக்க முடியும், அவர் உங்களை சிருஷ்டித்து உங்களை உண்டாக்கியிருக்கிறார், நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? இப்பொழுது, நீங்கள் உங்கள் இருதயத்தைத் திறந்து, உங்களை நீங்களே வழியை விட்டு விலக்குவீர்களானால், அவர் உள்ளே வந்து, உங்களை உபயோகிக்க முடியும். அவர் அதே தேவனாக இருக்கிறார்; அவர் அதே அடையாளங்களைக் கொடுக்கிறார். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவரை நோக்கிப் பாருங்கள், நான் என்னுடைய முதுகைத் திருப்பி, தவறாக இருக்கும் யாரோ ஒருவருக்காக ஜெபிக்கட்டும். ஓ, அது ஒரு சவாலாக இருக்கிறது.
84ஆம், ஐயா. இதோ எனக்கு முன்பாக ஒரு மனிதர் இருக்கிறார்; அவர் சரியாக இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவர் எங்கேயிருக்கிறார் என்று நான் இப்பொழுது பார்க்கட்டும்? அவர் அங்கே மிகவும் பின்னால் இருக்கிறார். இங்கே முன்புறம் கழுத்துப்பட்டை (tie) திறந்தபடியிருக்க, மெல்லிய சூட்டை அணிந்திருக்கிறார், தலையுச்சியில் தலைமயிர் நெருக்கமில்லாமல் இருக்கிறது, அவர் இருதயக்கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். சாம்பல் நிறமாக தோற்றமளிக்கும் சூட்டை அணிந்திருக்கிற அந்த மனிதர் இங்கே உட்கார்ந்து கொண்டு சரியாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீர் கர்த்தாவே, அவர் இடைத்தொடர்பு (touch) கொள்ளட்டும்“ என்று ஜெபித்துக்கொண்டிருந்தீர். அது சரிதானா? அது சரி என்றால், உம்முடைய கரத்தை மேலே உயர்த்தும். அவர் தம்முடைய இருதயத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்பதை அந்த அதே தூதனானவர் தான் வந்து என்னிடம் கூறுகிறார், அப்படியானால் ஏன் அது அதே தேவனாக இருக்காது? உம்முடைய இருதயக் கோளாறு முடிந்துவிட்டது, சகோதரனே; வீட்டிற்குச் சென்று, சுகமாயிருங்கள். ஆமென். உமக்கு ஒரு ஜெப அட்டை இருக்கும்படி நேரிட வேண்டியதில்லை, உம்மிடம் ஜெப அட்டை இருக்கிறதா? உம்மிடம் ஜெப அட்டை இல்லை. அந்த ஒன்று உமக்குத் தேவையில்லை.
நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா?.. பாருங்கள், அவர் அப்படியே உணர்வுநிலை மறுபடியும் பெற்றுவிட்டார். நான் சுற்றும் முற்றும் பார்த்து, அவர் அங்கே பின்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன், அந்த நெருக்கமில்லாத தலைமயிரை உடையவராயிருக்கிறார்; நான் நோக்கிப் பார்த்து, நான், “அவர் எங்கேயிருக்கிறார்?” என்று எண்ணினேன். அங்கே பின்னால் நோக்கிப் பார்த்த போது, அங்கே அவர் இருந்தார்; அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த மனிதர் அப்படியே.... நான் அவரை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதில்லை. நாம் அந்நியர்களாக இருந்தால், உம்முடைய கரத்தை உயர்த்தும், ஐயா. சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் சரிதானா? நீர் சிந்தித்துக் கொண்டிருந்ததும், நீர் செய்து கொண்டிருந்ததுமானவைகள் அவை தானா? அங்கே தான் காரியம்.
85அப்போது அவர் என்ன சொன்னார்? அந்த மனிதன் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, தேவன் தம்முடைய மாம்சத்தில், இந்த மனிதருடைய மாம்சத்தில் (இருந்து), “அது நடக்க முடியாது என்று சாராள் ஏன் தன்னுடைய இருதயத்தில் சொன்னாள்?” என்று கூறினார். அதன்பிறகு அதே தூதனானவர் இங்கு வந்து, “அது சம்பவிக்கும் என்றும், அவர் என்னைத் தொடட்டும் என்றும் நீர் ஏன் சொன்னீர்” என்று கூறினது. ஆமென். ஓ, ஏன் மிகவும் முரட்டுத்தனமாக (gross - வேண்டுமென்று செய்கிறவர்களாக இருக்கிறீர்கள்? ஆமென். அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள். நீங்கள் காணவில்லையா, நண்பர்களே? பெந்தெகோஸ்தே ஜனங்களே, நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள முடியுமா? நீங்கள் உங்கள் மனச்சாட்சியை ஏமாற்றுவீர்களா? நீங்கள் உங்கள் ஆத்துமாவையே வேதனைப்படுத்துவீர்களா (pinch)? ஆமென்.
இப்பொழுது, அது எல்லாவிடங்களிலும் தொடங்குகிறது. ஓ, யேகோவா-யீரே, கர்த்தரால் தமக்காக ஒரு பலியை அருள முடியும். ஆமென். விசுவாசம் கொண்டிருங்கள். சகோதரனே, நீ என்ன நினைக்கிறாய்? நான் கரடுமுரடாக இருப்பதாக நீ நினைக்கிறாய் என்று ஊகிக்கிறேன். நான் அவ்வாறு இல்லை. நான் உன்னுடைய சகோதரன். நான் உனது சகோதரன். அது தான் சரி, சகோதரனே. நான் உன்னை நேசிக்கிறேன். நான் இங்கே அசெம்பிளி ஆஃப் காட் என்ற ஒரு - ஒரு ஸ்தாபன சபையில் இருக்கிறேன் என்பதை தெளிவாக அறிந்து கொள்கிறேன், என்னுடைய சகோதரர்களே, இவர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவளிப்பவர்களில் (sponsors) ஒருவராயிருக்கிறார்கள். ஆனால் நான் எதைக் காண வெறுக்கிறேன் என்றால், அவர்கள் குளிர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்கள் ஆர்வமற்று (அசட்டை பண்ணுகிறவர்களாக ஆகி வருகிறார்கள் என்பதும் தான். நான் அந்த ஸ்தாபனத்திற்கு விரோதமானவன் அல்ல. அங்கே வெளியே இருக்கும் அந்த ஒருத்துவக்காரர்களுக்கோ, அல்லது மெதோடிஸ்டுகளுக்கோ, அல்லது பாப்டிஸ்டுகளுக்கோ, நான் விரோதமானவன் அல்ல, நான் இதே காரியத்தையே எல்லாவிடங்களிலும் சொல்லுகிறேன். ஆனால் நான் எதைக் கூற முயற்சிக்கிறேன் என்றால், உங்களை நீங்களே அசைத்துக்கொள்ளுங்கள், சகோதரனே. இந்தக் காரியங்களை விட்டு உங்கள் கண்களை விலக்கிக் கொள்ளுங்கள்…
86இதோ, ஒரு நிமிடம் பொறுங்கள், இங்கே எனக்கு முன்பாக ஒரு பெண்மணி தோன்றினாள், யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்: நரம்பு வீக்கம், கண்கள்... அந்தப் பெண்மணி ஒரு சிவப்புநிற உடையை உடுத்தியிருக்கிறாள். இதோ அவள் சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவர் உன்னைச் சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? செல்வி கரி, அப்படியானால் நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயானால், தேவன் உன்னைச் சுகப்படுத்துவார். அது சரி என்றால், உன் கரத்தை மேலே உயர்த்து. சரி, அங்கே தான் காரியம்.
நீங்கள் அதை விசுவாசிக்கும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அது என்ன? அதே சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் தான். அவர் இங்கேயிருக்கிறார், அவர் மனித மாம்சத்திற்குள் வாசம் செய்து கொண்டிருக்கிறார். அல்லேலூயா, அல்லேலூயா. ஓ, என்னே. அவருடைய ஆவியானது கட்டிடம் எங்கும் (எல்லா இடங்களிலும்) இருக்கிறது. அது உரைத்ததே, அந்தப் பெண்மணி எப்பொழுதாவது எங்கிருக்கிறாள்? அவள் எங்கேயிருக்கிறாள்? அது நீ தானா, பெண்மணியே? சரியாக அந்த நேரத்தில், அவளிடம் உரைக்கப்பட்டதே, அந்தப் பெண்மணி எங்கேயிருந்தாள்? ஓ, இங்கே, இந்தப் பெண் தான், ஆமாம். சரி. நீ இப்பொழுது உன்னுடைய சுகத்தை ஏற்றுக்கொள்கிறாயா? எனக்கு உன்னைத் தெரியாது. நான் என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் உன்னைக் கண்டதேயில்லை, உன்னைக் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காரியங்கள் உண்மை, இல்லையா? அங்கே தான் காரியம். சரி. சரி. பாருங்கள், நான் அவளை ஒருபோதும் கண்டதில்லை; அங்கே என்னுடைய கரங்களும் தேவனுக்கு முன்பாக உள்ளன. அவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.
87ஓ, சகோதரனே, சகோதரியே, நீ உன்னுடைய கூட்டை விட்டு தூரமாக வந்து, இதிலிருந்து இழுத்துக்கொள். வெளியே வந்து, தேவனுக்கு முன்பாக உன்னை நீயே கிடத்தி, “தேவனாகிய கர்த்தாவே, நான் கொண்டுவர என்னுடைய கைகளில் எதுவுமில்லை, வெறுமனே உம்முடைய சிலுவையை பற்றிக்கொள்கிறேன் என்று கூறிக் கொண்டிருங்கள். அது சரி.
அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன்,
பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்;
அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக,
சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள்.
அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன்,
பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்;
அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக,
சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள்.
நான் அவரை நேசிக்கிறேன், நான் ..... (ஓ, என்னே , அவரை ஆராதியுங்கள். கடினமாக வெட்டிக் கொண்டிருந்த பிரசங்கம் இப்பொழுது முடிந்து விட்டது. நாம் அவரை ஆராதிப்போம்.)
..... முன்பு அவர் நேசித்தார் நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? அவர் அற்புதமானவர் இல்லையா?)
சம்பாதித்தார் என் இரட்சிப்பை... கல்வாரி மரத்தில்.
அவரை நான் துதிப்பேன், (நீங்கள் இப்பொழுது உள்ளே முழுவதும் வேகமான துடைத்து சுத்தம் செய்யப்படுவதை உணரவில்லையா?) அவரை நான் துதிப்பேன்,
பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்;
அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக,
இப்பொழுது, சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள்.
88ஓ, அது உங்களுக்கு ஏதோவொன்றைச் செய்யவில்லையா? அந்த வெட்டுகிற ஆவியானது இந்தக் கட்டிடத்தினூடாகச் சென்று, வெட்டிக்கொண்டும், விருத்தசேதனம் செய்து கொண்டும் இருக்கிறது. விருத்தசேதனம் என்ற வார்த்தை எதைக் குறித்துக்காட்டுகிறது? உபரியாக இருக்கும் மாம்சத்தை வெட்டி எறிவது. சபையிடம் மிகவும் அதிகமாக உபரி மாம்சம் உள்ளது, தேவனுடைய பட்டயமானது அதை வெட்டி எறிகிறது. அதன்பிறகு நாம் அதைச் செய்யும் போது, முழுவதும் விருத்தசேதனம் செய்யப்பட்டு தூய்மையாக இருப்பதை உணருகிறோம். பவுல், “நான் அவரைத் தொழுதுகொள்கிறேன், நான் அவரை ஆவியில் ஆராதிக்கிறேன்” என்றான்.
அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன்,
பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்;
அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக, சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள்.
89ஓ, அவர் அற்புதமானவராக இல்லையா? தேவன் ஒரு வாக்குத்தத்தம் பண்ணுகிறார் என்றும் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்கிறார் என்றும் அறிந்தவராக இருக்கும் ஒரு பாவி இங்கே உண்டா? தேவன் இங்கே பேசுகிறார், தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கம் பண்ணுகிற ஏதாவது மனிதன் (இருப்பான்) என்றால், தேவன் தம்முடைய வார்த்தையை ஆதரிப்பார். இப்பொழுது, நீங்கள் அதைக் குறித்து ஊகிக்க வேண்டியதில்லை; அவர் ஜீவிக்கிறார்; அவர் இப்பொழுது இங்கேயிருக்கிறார். உங்கள் இரட்சகராக அவர் உங்களுக்கு வேண்டுமா? உங்களுக்கு வேண்டுமானால், நாங்கள் மறுபடியும் பாடுகையில், மேலே பீடத்திற்கு வாருங்கள். நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன்.“ சரி. நீங்கள் பீடத்திற்கு வருவீர்களா?
அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன்,
பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன்;
அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக,
சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள்.
90ஓ, அற்புதம். இந்தியாவிலே, அந்தவிதமான பீட அழைப்பை விடுத்திருந்தால், என்ன நடந்திருக்கும்? திரும்பிப் போக வேண்டியிருந்திருக்கும், அவர்கள் நெருக்கி மிதித்திருப்பார்கள். ஏறக்குறைய ஆயிரக்கணக்கானோர் பீடத்தைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கையில் திரள் கூட்டமாக ஒன்றாக கூடி வந்திருப்பார்கள். அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். அவர்கள் தேவனைக் காணும் போது, பொருளாக அல்ல, சரித்திரபிரகாரமான தேவனாக இருக்கிற ஒரு தேவன் அல்ல, நிகழ்காலத்திய தேவனாக இருக்கும் ஒரு தேவனை. சரித்திரத்திலிருந்து ஒரு தேவன் - தம்மைத்தாமே ஆக்கிக்கொள்கிறார், “சரித்திரத்தின் தேவன் காட்சியில் வெளிப்பட்டுத் தோன்றுதல்” என்பதன் (பேரில்) நான் இந்த அடுத்த வாரத்தில் பிரசங்கம் பண்ணுவேன். பாருங்கள், அவர் ஒரு சரித்திரபிரகாரமான தேவனாக இருக்கிறாரா, அல்லது அவர் இன்றும் அதே தேவனாக இருக்கிறாரா என்று பார்ப்போம். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா?
என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது,
கல்வாரியின் ஆட்டுக்குட்டியே,
தெய்வீக இரட்சகரே;
இப்பொழுது, நான் ஜெபிக்கும் போது எனக்கு செவிகொடும்,
என் பாவங்கள் அனைத்தும் போக்கியருளும்,
ஓ இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருக்கச் செய்யும்!
வாழ்க்கையின் இருளான சிக்கல் நிறைந்த வழியில் நடந்து,
துயரம் என்னை சூழும் போது,
என் வழிகாட்டியாயிரும்;
இருள் பகலாக மாறக் கட்டளையிடும்;
துக்கத்தின் கண்ணீரைத் துடைத்தருளும்,
நான் உம்மை விட்டு ஒருபோதும் விலகாமல் இருப்பேனாக.
91இவர்கள் இங்கேயிருந்து, மனந்திரும்புகிற ஆத்துமாக்கள் கதறிக் கொண்டிருக்கையில், வேறு யாராவது ஒருவர் பீடத்தைச் சுற்றிலும் முன்னால் வருவீர்களா?
என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது,
..... ஆட்டுக்குட்டியே, (பாவியான நண்பனே, முன்னால் வா, நீ ஒருபோதும் நெருக்கமாக இருக்க மாட்டாய்)
தெய்வீக இரட்சகரே; (அரைகுறை ஆர்வமுடைய (வெதுவெதுப்பாக) இருக்கும் கிறிஸ்தவர்களைக் குறித்து என்ன? நீங்களும் கூட ஏன் மேலே வந்து ஜெபிக்கக் கூடாது?)
இப்பொழுது, நான் ஜெபிக்கும் போது எனக்குச் செவிகொடும், என் பாவங்கள் அனைத்தும் போக்கியருளும், நான் உம்மை விட்டு ஒருபோதும் விலகாமல் இருப்பேனாக.
92நீங்கள் வரமாட்டீர்களா? இனிமையாகவும் தாழ்மையுடனும் சிலுவையிடம் வாருங்கள். வந்து கொண்டிருப்பவர்களாகிய உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. கீழே இறங்கி, தொடர்ந்து வந்து கொண்டிருங்கள், இப்பொழுது பீடத்தைச் சுற்றிலும் வாருங்கள். நாம் ஒரு ஜெபிக்கும் நேரத்தைக் வாகள் ஏன் ஆவியில் ஒரு சிறு விசனத்தை உணரவில்லை? அன்பான சகோதரியே, முன்னோக்கி வா, சரியாக மேலே பால்கனியில் இருக்கிற நீங்கள் வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நான் இருக்கும் நிலையிலே, எந்த சாக்குப்போக்குமின்றி வருகிறேன், ஆனால் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது. உமது வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிக்கிற காரணத்தினால். ஓ தேவ ஆட்டுக்குட்டியே, வருகிறேன்!“ அதுதான் அதைச் செய்கிறது. இப்பொழுது, குளிர்ந்து போன நிலைமை தகர்ந்து போகும்.
நான் இருக்கும் நிலையிலே, எந்த சாக்குப்போக்குமின்றி (வருகிறேன்),
ஆனால் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது,
நான் வாக்குக்கொடுக்கிற காரணத்தினால் - நான் உம்மிடம் வருகிறேன்,
ஓ தேவ ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன் ! நான் வருகிறேன்!
நான் இருக்கிற வண்ணமாக (வருகிறேன்), தாமதிக்க மாட்டேன்
ஒரு கருநிற கறையிலிருந்து எனது ஆத்துமாவை துடைத்துத் துப்புரவாக்கும்படியாக,
ஒவ்வொரு கறையையும் கழுவித் தூய்மையாக்கும் இரத்தத்தை உடைய உம்மிடம்,
ஓ தேவ ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!
இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தலைகளைத் தாழ்த்தி, உங்கள் கரங்களை தேவனை நோக்கி உயர்த்தி, ஜெபிக்கத் தொடங்குங்கள். நீங்களாகவே ஜெபியுங்கள். முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்குங்கள். அதுதான் பதிலாக இருக்கிறது.
(குறிப்பு: இந்தச் செய்தியின் இறுதி திருத்தம் இன்னும் முடியவில்லை . இது புத்தகமாக அச்சிடும் போது, இறுதி திருத்தம் செய்து வெளிவரும்.)